Tata Harrier & Safari கார்களில் புதிதாக ADAS வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
published on நவ 18, 2024 05:32 pm by gajanan for டாடா ஹெரியர்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார்களிலும் புதிதாக ADAS லேன் கீப்பிங் அசிஸ்ட் வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கார்களின் நிறங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் இப்போது புதிதாக லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் லேன் சென்டரிங் உடன் அடாப்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஹாரியரின் லோ மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் ஒவ்வொன்றையும் பொறுத்து கூடுதலாக 2 வண்ணங்கள் வரை கிடைக்கும்.
-
சஃபாரியின் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களில் கூடுதலாக 2 கலர்களில் சேர்க்கப்பட்டுள்ளன.. அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் டிரிம் கூடுதல் பெயிண்ட் ஆப்ஷனை பெறுகிறது.
-
இரண்டு டாடா எஸ்யூவி -களிலும் இயந்திர ரீதியாகவோ அல்லது வசதிகளிலோ வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
-
ஹாரியரின் விலை ரூ.14.99 லட்சம் முதல் ரூ.25.89 லட்சம் வரையிலும். சஃபாரியின் விலை ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.79 லட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
ஃபேஸ்லிபட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி 2023 ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அவற்றை புதியதாக வைத்திருக்கும் வகையில் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு டாடா எஸ்யூவி -களும் 11 தனித்துவமான அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) செயல்பாடுகளுடன் கிடைத்தாலும் அவை இப்போது இரண்டு புதிய ADAS வசதிகளை பெற்றுள்ளன. இவை கார் அறிமுகம் செய்யப்படும் போது வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கூடுதல் பெயிண்ட் ஷேட்களை வழங்கும் வகையில் டாடா கார்களின் கலர் ஆப்ஷன்களையும் மாற்றியமைத்துள்ளது.
டாடா ஹாரியர் & சஃபாரியில் சேர்க்கப்பட்ட புதிய ADAS வசதிகள்
இப்போது லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் லேன் சென்டரிங் உடன் அடாப்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் ஆகியவை டிரைவரின் உதவிக்காக சேர்க்கப்பட்டுள்ளன. லேன்-கீப்பிங் அசிஸ்ட் காரின் லேன் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் சுருக்கமான சொல்லப்போனால் ஸ்டீயரிங் தற்செயலாக லேன் நிலையில் இருந்து புறப்படுவதைத் தடுக்கிறது. மறுபுறம் அடாப்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட் வசதியானது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலுடன் இணைந்து காரின் பயண வேகத்தை பராமரிக்கவும் காரை அதன் பாதையில் வைத்திருக்கவும் உதவுகிறது.
சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகியவை இப்போது 11 செயல்பாடுகளை உள்ளடக்கிய ADAS உடன் கிடைக்கின்றன. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.
டாடா ஹாரியர் காரின் நிறத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள்
டாடா ஹாரியர் வேரியன்ட்கள் |
டாடா ஹாரியர் நிறங்கள் |
ஸ்மார்ட் |
|
பியூர் |
|
அட்வென்ச்சர் |
|
ஃபியர்லெஸ் |
|
மேலும் படிக்க: இந்தியாவில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் உடன் கிடைக்கும் விலை குறைவான 10 கார்கள் இங்கே
டாடா சஃபாரி மேம்படுத்தப்பட்ட வேரியன்ட் வாரியான வண்ணங்கள்
டாடா சஃபாரி வேரியன்ட்கள் |
டாடா சஃபாரி நிறங்கள் |
ஸ்மார்ட் |
|
பியூர் |
|
அட்வென்ச்சர் |
|
அக்கம்பிளிஸ்டு |
|
டாடா இரண்டு எஸ்யூவி -களின் வேரியன்ட் வரிசை முழுவதும் கலர்களின் ஆப்ஷனை மட்டுமே விரிவுபடுத்தியுள்ளது. புதிய ஷேடுகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை.
டாடா ஹாரியர் & சஃபாரி இன்ஜின் விவரங்கள்
ஹாரியர் மற்றும் சஃபாரி 2-லிட்ட4 நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜின் 170 PS மற்றும் 350 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2024 அக்டோபர் மாதம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் விற்பனையில் மாருதி நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது
டாடா ஹாரியர் & சஃபாரி விலை மற்றும் போட்டி
ஹாரியர் ரூ.14.99 லட்சம் முதல் ரூ.25.89 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மஹிந்திரா XUV700, எம்ஜி ஹெக்டர், மற்றும் ஜீப் காம்பஸ் உடன் போட்டியிடுகிறது. அதேசமயம் சஃபாரியின் விலை ரூ.15.49 லட்சத்தில் தொடங்கி ரூ.26.79 லட்சம் வரை உள்ளது. இது எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா XUV700, மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்களுடன் போட்டியாக இருக்கும்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா -வுக்கானவை
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்
0 out of 0 found this helpful