புதிதாக அறிமுகமான 2024 Dacia Spring EV -யில் கார் புதிய தலைமுறை Renault Kwid காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை காட்டுகின்றது
published on பிப்ரவரி 22, 2024 05:58 pm by rohit for ரெனால்ட் க்விட்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் க்விட் புதிய தலைமுறை இந்தியாவில் 2025 -ல் விற்பனைக்கு வரலாம்
-
டேசியா ஸ்பிரிங் என்பது வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட ஐரோப்பிய சந்தைகளுக்கான மின்சார ரெனால்ட் க்விட் ஆகும்.
-
புதிய டேசியா ஸ்பிரிங் EV கார் 2024 டஸ்டர் போன்ற முன்பக்கத்தை பெறுகிறது, இதில் கிரில் வடிவமைப்பு மற்றும் Y-வடிவ LED DRL -கள் அடங்கும்.
-
டஸ்டரில் காணப்படுவது போல் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்ட புதிய கேபினையும் பெறுகிறது.
-
கனெக்டட் கார் டெக்னாலஜி, ஆல் 4 பவர் விண்டோஸ் மற்றும் மேனுவல் ஏசி ஆகியவை மற்ற வசதிகளாகும்.
-
பாதுகாப்புக்காக சில ADAS அம்சங்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களை கொண்டுள்ளது.
-
26.8 kWh பேட்டரி பேக்குடன் WLTP கிளைம்டு 220 கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது.
-
ஸ்பிரிங் EV அடிப்படையிலான எலக்ட்ரிக் க்விட் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாக உள்ளது.
ரெனால்ட் -ன் பட்ஜெட் சார்ந்த உலகளாவிய பிராண்டான டேசியா, புதிய தலைமுறை ஸ்பிரிங் EV -யை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. டேசியா ஸ்பிரிங் அடிப்படையில் மின்சாரம் ரெனால்ட் க்விட் ஆகும். ஆனால் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வருகிறது.இது இந்தியாவில் விற்கப்படும் என்ட்ரில் லெவல் ஹேட்ச்பேக்கின் புதிய தலைமுறையின் முன்னோட்டத்தையும் காட்டுகிறது. ரெனால்ட் நிறுவனம் 2024 ஸ்பிரிங் EV -யை 2025 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை க்விட் ஆக இந்தியாவிற்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
முக்கியமான வடிவமைப்பை அப்படியே வைத்திருக்கிறது
புதிய ஸ்பிரிங் EV, முதல் பார்வையில், மூன்றாம் தலைமுறை டேசியா டஸ்டர் எஸ்யூவியின் அளவு குறைக்கப்பட்ட பதிப்பு போல் தெரிகிறது. இது Y-வடிவ LED DRL -களில் இருந்து மையத்தில் உள்ள டேசியா லோகோ வரை இயங்கும் டூயல் குரோம் ஸ்ட்ரிப்களுடன் அதே நேர்த்தியான கிரில்லை பெறுகிறது, இது சார்ஜிங் போர்ட்டுக்கு ஒரு ஃபிளிப் போல செயல்படுகிறது. கீழே, இது இப்போது சிறிய மற்றும் ஷார்ப்பான ஹெட்லைட் கிளஸ்டர்களும், அதன் மேலேயும் கீழேயும் ஏர் வென்ட்களை கொண்ட ஒரு பெரிய பம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பக்கவாட்டில் இப்போதுள்ள மாடலை போலவே தோற்றமளித்தாலும், புதிய தலைமுறை ஹேட்ச்பேக் முந்தையதை விட உயரமாகத் தெரிகிறது. வீல் ஆர்ச்கள், 15-இன்ச் சக்கரங்கள் பிளாக் கவர்களுடன், சதுரமாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். ரூஃப் ரெயில்கள் அகற்றப்பட்டுள்ளன காரணம் அதனால் கார் இன்னும் சிறப்பான ஏரோடைனமிக் -கை கொண்டிருக்கும், ஆகவே அது ரேஞ்சை மேம்படுத்துகிறது.
பின்புறத்தில், அதன் டெயில்லைட் வடிவமைப்பு முன்புறத்தில் அமைந்துள்ள Y- வடிவ LED DRL -களை பிரதிபலிக்கிறது. புதிய பின்பக்க லைட்டிங் அமைப்பு, ‘டேசியா’ என்ற பெயர் இருக்கும் பெரிய எலமென்ட் உறுப்பு மூலம் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.
உயர்தரமான இன்ட்டீரியர்
டஸ்டருடன் இந்த காருக்கு உள்ள ஒற்றுமை உள்ளேயும் தெரிகிறது. ஸ்பிரிங் EV ஆனது ஏசி வென்ட்களைச் சுற்றி மாறுபட்ட-குறிப்பிட்ட வொயிட்/காப்பர் ஆக்ஸன்ட்கள் மற்றும் சென்ட்ரல் ஏசி வென்ட்களில் Y-வடிவ இன்செர்ட்டையும் பெறுகிறது. கியர் செலக்டர் சென்டர் கன்சோலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீயரிங் கூட புதிய எஸ்யூவி -யில் இருப்பதை போல் தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக, ஸ்பிரிங் EV ஆனது கிளைமேட் கட்டுப்பாட்டுக்கான பிஸிக்கல் பட்டன்கள் மற்றும் ரோட்டரி டயல்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா ? உங்களிடம் உள்ள பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா ?
இதிலுள்ள வசதிகள் என்ன ?
வசதிகள் மற்றும் வசதிகளைப் பொறுத்தவரை, ஸ்பிரிங் EV -யில் டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 10-இன்ச் டச் ஸ்கிரீன், நான்கு பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. EV ஆனது வெஹிகிள்-டூ-வெஹிகிள் (V2L) வசதியுடன் வருகின்றது, இது வெளியில் உள்ள எலக்ட்ரிக் சாதனங்களை இயக்க உதவும்..
எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் பாதுகாப்புக்காக பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), ட்ராஃபிக் சைன் ரெக்ககனைசேஷன், டிரைவர் அட்டென்ட்டிவ்னெஸ் அலர்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்
டேசியா ஸ்பிரிங் EV ஆனது 26.8 kWh பேட்டரி பேக்கை பெறுகிறது, இது 220 கி.மீ -க்கும் அதிகமான WLTP-க்கு கிளைம்டு ரேஞ்சை கொடுக்கும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் ஆப்ஷனுடன் கிடைக்கிறது: 46 PS மற்றும் 66 PS.
புதிய டேசியா ஸ்பிரிங் EV ஆனது 7 kW AC சார்ஜருடன் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகின்றது, இது 15A ப்ளக் பாயிண்டில் 11 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அல்லது 7 kW வால்பாக்ஸ் யூனிட்டிலிருந்து வெறும் 4 மணி நேரத்தில் பேட்டரியை 20 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யக்கூடியது. 30 kW DC சார்ஜர் 45 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்திய விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய தலைமுறை ரெனால்ட் க்விட் (புதிய டேசியா ஸ்பிரிங் EV அடிப்படையில்) ரூ. 5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கலாம். இது மாருதி ஆல்டோ கே10 காருக்கு மட்டுமல்ல மாருதி எஸ்-பிரஸ்ஸோ காருடனும் போட்டியிடும். ஆனால் இன்னும் இந்தியாவில் எலக்ட்ரிக் ரெனால்ட் க்விட் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படவில்லை.
மேலும் படிக்க: க்விட் AMT
0 out of 0 found this helpful