• English
    • Login / Register

    Hyundai Creta N Line அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மார்ச் 11 -ம் தேதி வெளியீட்டுக்கு முன்னதாக முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன

    rohit ஆல் பிப்ரவரி 29, 2024 07:49 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    51 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஹூண்டாய் நிறுவனம் இப்போது கிரெட்டா N -லைன் காருக்கான முன்பதிவுகளை இப்போது ஆன்லைனிலும் அதன் டீலர்ஷிப்களிலும் ரூ.25000 -க்கு ஏற்றுக்கொள்கிறது.

    Hyundai Creta N Line bookings open

    • ரெட் பிரேக் காலிப்பர்கள் 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 'N -லைன்' பேட்ஜ்கள் ஆகியவை வெளியில் உள்ள ஹைலைட்களாக இருக்கின்றன.

    • கான்ட்ராஸ்ட் ரெட் ஆக்ஸன்ட்கள் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கான ஸ்டிச் உடன் ஆல் பிளாக் தீம் உடன் வரும்.

    • டூயல் 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை பெறும்.

    • 6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT இரண்டையும் கொண்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் உடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விலை ரூ.17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும்.

    ஹூண்டாய் கிரெட்டா N -லைன் மார்ச் 11 ஆம் தேதி வெளியீட்டுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஆன்லைன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அதன் டீலர்ஷிப்களில் ரூ. 25000 க்கு ஸ்போர்ட்டியர் எஸ்யூவி -க்கான முன்பதிவுகளையும் தொடங்கியுள்ளது.

    இந்த கார் எப்படி இருக்கிறது?

    Hyundai Creta N Line rear

    ஹூண்டாய் கிரெட்டா N -லைன் 'N -லைன்' பேட்ஜ் உடன் புதிய வடிவிலான கிரில் மற்றும் ரெட் கலர் இன்செர்ட்களுடன் புதிய முன்பக்க பம்பரை கொண்டுள்ளது. அதன் பக்கவாட்டில் புதிய 18-இன்ச் அலாய் வீல்கள் ரெட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் பக்கவாட்டு ஓரங்களில் ரெட் இன்செர்ட்கள் உள்ளன. பின்புறத்தில் இது ஒரு புதிய வடிவ பம்பருடன் வருகிறது இது ஸ்கிட் பிளேட்டிற்கான ரெட் இன்செர்ட்களையும் டூயல்-டிப் எக்ஸாஸ்ட் -டை பெறுகிறது.

    வழக்கமான கிரெட்டாவின் ஸ்போர்ட்டியர் பதிப்பாக இருப்பதால் இது முன் பக்க மற்றும் பின்புற பக்கங்களில் 'N லைன்' என்ற எழுத்தை பெறுகிறது. கிரெட்டா N -லைனுக்கு வழங்கப்படும் மற்றொரு பிரத்யேகமான விஷயம் தண்டர் புளூ கலர் உடன் கூடிய பிளாக் கலர் ரூஃப் ஆகும்.

    உங்கள் நிலுவையில் உள்ள சலனைச் சரிபார்க்கவும்

    கேபினில் உள்ள மாற்றங்கள்

    உட்புறத்தை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் சமீபத்திய உட்புற டீஸர் படம் கிரெட்டா N -லைன் ஆல் பிளாக் தீம் கொண்ட அப்டேட்டட் கேபினை பெறும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது டாஷ்போர்டை சுற்றி ரெட் ஆக்ஸன்ட்கள் மற்றும் கியர் லீவர் மற்றும் அப்ஹோல்ஸ்டரி இரண்டிலும் ரெட் கலர் ஸ்டிச்கள் கொடுக்கப்படும். N லைன் சார்ந்த ஸ்டீயரிங் வீலும் இந்த காரின் தொகுப்பில் சேர்க்கப்படும்.

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

    கிரெட்டா N -லைன் பெரும்பாலும் ஸ்டாண்டர்டான கிரெட்டா -வின் ஹையர் வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே வழக்கமான கிரெட்டாவில் உள்ள அதே டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்) டூயல்-சோன் ஏசி வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

    Hyundai Creta N Line six airbags

    கிரெட்டா N -லைனில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஹில்-அசிஸ்ட் ஆகியவை கிடைக்கும் என்று ஹூண்டாய் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்டாண்டர்டான கிரெட்டாவில் கிடைக்கும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களும் கொடுக்கப்படலாம். 

    மேலும் பார்க்க: ஐரோப்பாவிற்கான ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது இது இந்தியா-ஸ்பெக் மாடலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பது இங்கே

    டர்போ-பெட்ரோல் மட்டும்

    2024 Hyundai Creta turbo-petrol engine

    இது ஸ்டாண்டர்டான மாடலில் உள்ள அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS/ 253 Nm) மூலம் இயக்கப்படும். ஆனால் 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்)) உடன் கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது. .

    N லைன் பதிப்பாக இருப்பதால் வழக்கமான கிரெட்டாவில் இருந்து மேலும் தனித்து தெரியும் வகையில் சற்றே வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப் விரைவான ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்போர்ட்டியர்-சவுண்ட் எக்சாஸ்ட் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஹூண்டாய் கிரெட்டா N -லைன் ஆரம்ப விலை ரூ.17.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா செல்டோஸ் ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் உடன் போட்டியிடும். மற்றும் ஸ்கோடா குஷாக்,  ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்றவற்றுக்கு ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய மாற்றாக இருக்கும்.

    மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா என் லைன்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience