ஐபிஎல் 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக அறிவிக்கப்பட்டது Tata Curvv
டாடா கர்வ் க்காக மார்ச் 20, 2025 08:33 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஐபிஎல் 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக என்பதால் சீசனின் முடிவில் "பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்" விருதை பெரும் வீரருக்கு டாடா கர்வ் வழங்கப்படும்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) தொடக்க நிகழ்ச்சி மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இப்போது இந்த ஆண்டு போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. டாடா அதன் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் விக்கி கஷாலை நியமித்துள்ளது. மேலும் டாடா கர்வ் போட்டியின் அதிகாரப்பூர்வ காராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2024 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ காராக டாடா பன்ச் இவி கார் இருந்தது.
மேலும் டைட்டில் ஸ்பான்ஸர் என்பதால் "பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்" பட்டத்தைப் பெறும் கிரிக்கெட் வீரருக்கு டாடா கர்வ் வழங்கப்படும்.
டாடா கர்வ்: வெளிப்புற வடிவமைப்பு
இது ஒரு எஸ்யூவி கூபே ஆகும். ஆகவே கர்வ் அதன் செக்மென்ட்டில் உள்ள அதன் வழக்கமான எஸ்யூவி போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரிகிறது. தனித்துவமான சாய்வான ரூஃப், இதற்கு எஸ்யூவி-கூபே தோற்றத்தை அளிக்கிறது. ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் பெட்டல் போன்ற வடிவத்துடன் கூடிய ஸ்போர்ட்டி அலாய்கள் நவீன தோற்றத்தை கொடுக்கின்றன. பெரிய கிளாஸி பிளாக் பாடி கிளாடிங் காருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது.
முன்பக்கம் கனெக்டட் எல்இடி டிஆர்எல்களை கொண்டுள்ளது. அதன் கீழே ஹாரியர் போன்ற கிரில் மற்றும் எல்இடி ஹெட்லைட்கள் முக்கோண வடிவில் உள்ளன. பின்புறத்தில் முழு அகலத்துக்கும் எல்இடி லைட் பார் மற்றும் ஸ்கிட் பிளேட் கொண்ட ஒரு பெரிய பம்பர் ஆகியவை உள்ளன.
டாடா கர்வ் -ன் உட்புறம் மற்றும் வசதிகள்
உள்ளே டாஷ்போர்டு அமைப்பு டாடா நெக்ஸானை போலவே இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். டாஷ்போர்டு வடிவமைப்பு நவீனமானது மற்றும் பகுதியாக தோற்றமளிக்கிறது. முக்கிய வேறுபாடு என்னவென்றால் கர்வ் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரியில் இருப்பதை போல 4-ஸ்போக் ஸ்டீயரிங் உள்ளது.
வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை இதில் உள்ளன. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: ஏப்ரல் 2025 முதல் டாடா கார்கள் விலை உயரவுள்ளது
டாடா கர்வ் -ன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா கர்வ் ஆனது இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது. அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் கீழே உள்ளன:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
125 PS |
118 PS |
டார்க் |
170 Nm |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
இதன் போட்டியாளர்கள்
டாடா கர்வ் ஆனது காம்பாக்ட் எஸ்யூவிகளான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்றவற்றுக்கு எஸ்யூவி-கூபே மாற்றாக இருக்கும்.