• English
    • Login / Register

    Tata Sierra -வின் டாஷ்போர்டு படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன

    kartik ஆல் ஏப்ரல் 02, 2025 07:11 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 13 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் டாஷ்போர்டு காப்புரிமை வடிவமைப்பு படங்களில் மூன்றாவது ஸ்கிரீன் இல்லை. ஆனால் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் காரில் இது காணப்பட்டது.

    • காப்புரிமை படம் மினிமலிஸ்ட் டாஷ்போர்டு வடிவமைப்பைக் காட்டுகிறது 

    • டாஷ்போர்டு ஒரே ஒரு டச் ஸ்கிரீனை கொண்டுள்ளது, இது ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் மாடலில் இருந்து வேறுபட்டது. 

    • வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் சோன் ஆட்டோ ஏசி ஆகிய வசதிகள் சியராவில் இருக்கும்.

    • 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    உற்பத்திக்கு தயாராக உள்ள டாடா சியரா காரின் டாஷ்போர்டு காப்புரிமை படம் என யூகிக்கப்படும் சில படங்கள் இணையத்தில் வெளியாகிய்ள்ளன. இந்த மாடல் முன்பு ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் ஒரு கான்செப்ட் காராக காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போது உட்புறத்தையும் பார்க்க முடிந்தது மற்றும் சியரா பெறக்கூடிய சில வசதிகளின் விவரங்களையும் எங்களால் பெற முடிந்தது. இருப்பினும் கான்செப்ட் மற்றும் காப்புரிமை பெற்ற மாடல்களுக்கு இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் இந்த படங்களில் இது மூன்றாவது (பயணிகள் பக்க) ஸ்கிரீன் எதுவும் இல்லை. காப்புரி படங்கள் மூலமாக வேறு சில விவரங்களும் தெரிய வந்துள்ளன. அவை இந்த அறிக்கையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

    என்ன பார்க்க முடிகிறது ? 

    டேஷ்போர்டு வடிவமைப்பு மினிமலிஸ்டிக் ஆக தெரிகிறது மற்றும் ஸ்போர்ட்டியான நேர்த்தியான ஏசி வென்ட்களும் உள்ளன. டாடா சியராவின் 4-ஸ்போக் ஸ்டீயரிங் அதன் மற்ற உடன்பிறப்புகளான ஹாரியர்-சஃபாரி மற்றும் கர்வ் அகியவற்றிடம் இருந்து கடன் வாங்கப்பட்டது. ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட்டில் இருந்து இது வேறுபட்டு இருக்கிறது. மேலும் இது ஒரே ஒரு இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனை மட்டுமே கொண்டுள்ளது. பயணிகள் பக்கத் ஸ்கிரீன் ஆனது ஹையர் வேரியன்ட்களில் வழங்கப்படலாம் அல்லது தயாரிப்புக்கு தயாராக உள்ள சியராவில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே -வுக்கான ஹவுஸிங்கும் உள்ளது (மற்ற டாடா சலுகைகளைப் போலவே இருக்கும்). ஸ்டீயரிங் வீலின் வலது பக்கத்தில் புஷ் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் தெரிகிறது. அதன் கீழே ஒரு ரோட்டேட்டர் நாப் ஒன்றும் உள்ளது. 

    டாடா சியரா வசதிகள் மற்றும் பாதுகாப்பு 

    Tata Sierra

    டாடா சியராவில் இருக்கும் விஷயங்களை டாடா உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-சோன் ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

    பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் பார்க்க: டீலர்ஷிப்களை வந்தடைந்த Tata Curvv டார்க் எடிஷன்

    டாடா சியரா பவர்ட்ரெய்ன் 

    டாடா சியரா இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு: 

    இன்ஜின் 

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் 

    1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 

    பவர் 

    170 PS 

    118 PS 

    டார்க் 

    280 Nm 

    260 Nm 

    டிரான்ஸ்மிஷன் 

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT*

    *DCT= டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் 

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள் 

    Tata Sierra Side

    டாடா சியராவின் விலை ரூ.10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata சீர்ரா

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience