டீலர்ஷிப்களை வந்தடைந்த Tata Curvv டார்க் எடிஷன்
rohit ஆல் ஏப்ரல் 02, 2025 05:19 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 9 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆல் எல்இடி லைட்ஸ், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில் படம் பிடிக்கப்பட்ட மாடல் ஃபுல்லி லோடட் அக்கம்பிளிஸ்டு வேரியன்ட் போல் தெரிகிறது.
டாடா நிறுவனம் #டார்க் ட்ரீட்மென்ட்டை அதன் நிறைய மாடல்களுக்கு கொடுத்திருந்தாலும் கூட டாடா கர்வ் அந்த வரிசையில் இது வரை இணையவில்லை. ஆனால் இப்போது இறுதியாக கர்வ் காரும் அந்த வரிசையில் இணையவுள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக சில பான்-இந்திய டீலர்ஷிப்களை அடைந்துள்ளன மேலும் சில படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
படங்களில் கவனிக்கப்பட்ட விவரங்கள்
ஆல்-எல்இடி லைட்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் போன்ற வெளிப்புற விஷயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கையில் படம் பிடிக்கப்பட்டுள்ள மாடல் எஸ்யூவி-கூபேயின் ஃபுல்லி லோடட் அக்கம்பிளிஸ்டு டிரிம் என்று நாங்கள் நம்புகிறோம். டாடாவின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மற்ற டார்க் எடிஷன்களில் காணப்படுவது போல் வெளிப்புறம் முழுவதும் பிளாக் பெயிண்ட் ஷேடுடன் இருப்பதை பார்க்க முடியும்.
ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்கள், பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ஃபிரன்ட் ஸ்கிட் பிளேட் மற்றும் முன் டோர்களின் கீழ் பகுதியில் உள்ள 'கர்வ்வ்' மோனிகர் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இது ஹாரியர் மற்றும் சஃபாரியின் டார்க் பதிப்புகளில் காணப்படுவது போல் முன் ஃபெண்டர்களிலும் #டார்க் பேட்ஜ்களை கொண்டுள்ளது.
இந்தப் படங்களில் அதன் பின்புறத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் கூட அதன் வழக்கமான பதிப்பைப் போலவே டெயில்கேட்டிலும் அதே 'கர்வ்' மோனிகர் மற்றும் பிளாக் கலர் ஸ்கிட் பிளேட் ஆகியவை இருக்கும். கனெக்டட் ரேப்பரவுண்ட் டெயில் லைட்ஸ் மட்டுமின்றி இதன் தனித்துவத்தை காட்ட பிளாக் கலர் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேபின் விவரங்கள்
டாடா கார்களின் அனைத்து #டார்க் எடிஷன்களிலும் வழக்கமாக இருப்பது போல் இதன் உட்புறம் ஆல் பிளாக் கேபின் தீம் உடன் வரும். டாஷ்போர்டு, சீட் அப்ஹோல்ஸ்டரி (ஹெட்ரெஸ்ட்களில் #டார்க் எம்போசிங் உடன்), மற்றும் எஸ்யூவி-கூபேயின் ஸ்பெஷல் எடிஷன் பதிப்பின் சென்டர் கன்சோலுக்கும், பியானோ பிளாக் ஆக்ஸென்ட்களுடன் அதே பிளாக் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதன் வழக்கமான வேரியன்ட்களை போலவே அதே டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் போன்ற அதே 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.
வசதி மற்றும் பாதுகாப்பு
டாடா கர்வ் -ன் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
கர்வ் -ன் டார்க் பதிப்பில் வேறு எந்த புதிய வசதிகளும் சேர்க்கப்படவில்லை. இது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வழக்கமான மாடலின் அதே போன்ற வழக்கமான வசதிகளுடன் வரும்.
6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 2025 மார்ச் -ல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களின் விவரங்கள்
பவர்டிரெயின்கள் விவரம்
டாடா பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கர்வ் காரை வழங்குகிறது. தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (TGDi) |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
120 PS |
125 PS |
118 PS |
டார்க் |
170 Nm |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
கர்வ் டார்க் ஆனது ஹையர்-ஸ்பெக் டிரிம்களில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே இது 125 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
டாடா கர்வ் -ன் டார்க் வேரியன்ட்கள் அவற்றின் தொடர்புடைய வேரியன்ட்களை விட சற்று அதிக விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு வழக்கமான கர்வ் காரின் விலை ரூ. 10 லட்சம் முதல் ரூ. 19.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கலாம். இது சிட்ரோன் பாசால்ட்டின் வரவிருக்கும் டார்க் பதிப்பு -க்கு க்கு நேரடி போட்டியாக இது செயல்படும். மேலும் மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், மற்றும் ஹூண்டாய் கிரெட்டா ஆகிய காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு மாற்றாக ஒரு ஸ்பெஷல் எடிஷனாகவும் இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.