Mahindra XUV700: சில வேரியன்ட்களின் விலையை குறைத்தது மஹிந்திரா நிறுவனம்
மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்காக மார்ச் 21, 2025 06:13 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 9 Views
- ஒரு கருத்தை எழுதுக
சில AX7 வேரியன்ட்களின் விலை ரூ.45,000 வரையிலும், டாப்-ஸ்பெக் AX7 டிரிம் ரூ.75,000 வரையிலும் விலை குறைந்துள்ளது.
நிறைய கார் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 2025 முதல் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை அறிவித்துள்ளனர். ஆனால் இப்போது மஹிந்திரா நிறுவனம் XUV700 கார்களின் விலையை 75,000 வரை குறைத்துள்ளது. இதன் மூலம் ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L டிரிம்களின் அடிப்படையிலான டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. அதே சமயம் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முழுமையான விவரங்கள் இங்கே:
மஹிந்திரா XUV700 டர்போ-பெட்ரோல் விலை
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
MX MT 5-சீட்டர் |
ரூ.13.99 லட்சம் |
ரூ.13.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
MX MT 7-சீட்டர் |
ரூ.14.99 லட்சம் |
ரூ.14.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX3 MT 5-சீட்டர் |
ரூ.16.39 லட்சம் |
ரூ.16.39 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX3 AT 5 சீட்டர் |
ரூ.17.99 லட்சம் |
ரூ.17.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 MT 5-சீட்டர் |
ரூ.17.69 லட்சம் |
ரூ.17.69 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 AT 5 சீட்டர் |
ரூ.19.29 லட்சம் |
ரூ.19.29 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 MT 7-சீட்டர் |
ரூ.18.34 லட்சம் |
ரூ.18.34 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 AT 7 சீட்டர் |
ரூ.19.94 லட்சம் |
ரூ.19.94 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 S MT 7-சீட்டர் |
ரூ.16.89 லட்சம் |
ரூ.16.89 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 S AT 7-சீட்டர் |
ரூ.18.64 லட்சம் |
ரூ.18.64 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 MT 6-சீட்டர் |
ரூ.19.69 லட்சம் |
ரூ.19.69 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 AT 6 சீட்டர் |
ரூ.21.64 லட்சம் |
ரூ.21.19 லட்சம் |
(- ரூ 45,000) |
AX7 MT 7-சீட்டர் |
ரூ.19.49 லட்சம் |
ரூ.19.49 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 AT 7-சீட்டர் |
ரூ.21.44 லட்சம் |
ரூ.20.99 லட்சம் |
(- ரூ 45,000) |
AX7 எபோனி MT 7-சீட்டர் |
– |
ரூ.19.64 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
AX7 எபோனி AT 7-சீட்டர் |
– |
ரூ.21.14 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
AX7 L AT 6-சீட்டர் |
ரூ.24.14 லட்சம் |
ரூ.23.39 லட்சம் |
(- ரூ 75,000) |
AX7 L AT 7-சீட்டர் |
ரூ.23.94 லட்சம் |
ரூ.23.19 லட்சம் |
(- ரூ 75,000) |
AX7 L எபோனி AT 7-சீட்டர் FWD |
– |
ரூ.23.34 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
மஹிந்திரா XUV700 டீசல் விலை
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
MX 5 சீட்டர் |
ரூ.14.59 லட்சம் |
ரூ.14.59 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
MX 7-சீட்டர் |
ரூ.14.99 லட்சம் |
ரூ.14.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX3 MT 5-சீட்டர் |
ரூ.16.99 லட்சம் |
ரூ.16.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX3 AT 5 சீட்டர் |
ரூ.18.59 லட்சம் |
ரூ.18.59 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 MT 5-சீட்டர் |
ரூ.18.29 லட்சம் |
ரூ.18.29 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 AT 5 சீட்டர் |
ரூ.19.89 லட்சம் |
ரூ.19.89 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 MT 7-சீட்டர் |
ரூ.19.04 லட்சம் |
ரூ.19.04 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 AT 7-சீட்டர் |
ரூ.20.64 லட்சம் |
ரூ.20.64 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 S MT 7-சீட்டர் |
ரூ.17.74 லட்சம் |
ரூ.17.74 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX5 S AT 7-சீட்டர் |
ரூ.19.24 லட்சம் |
ரூ.19.24 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 MT 6-சீட்டர் |
ரூ.20.19 லட்சம் |
ரூ.20.19 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 AT 6 சீட்டர் |
ரூ.22.34 லட்சம் |
ரூ.21.89 லட்சம் |
(- ரூ 45,000) |
AX7 MT 7-சீட்டர் FWD |
ரூ.19.99 லட்சம் |
ரூ.19.99 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
AX7 AT 7-சீட்டர் FWD |
ரூ.22.14 லட்சம் |
ரூ.21.69 லட்சம் |
(- ரூ 45,000) |
AX7 AT 7-சீட்டர் AWD |
ரூ.23.34 லட்சம் |
ரூ.22.89 லட்சம் |
(- ரூ 45,000) |
AX7 எபோனி MT 7-சீட்டர் FWD |
– |
ரூ.20.14 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
AX7 எபோனி AT 7-சீட்டர் FWD |
– |
ரூ.21.84 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
AX7 L MT 6-சீட்டர் |
ரூ.23.24 லட்சம் |
ரூ.22.49 லட்சம் |
(- ரூ 75,000) |
AX7 L AT 6-சீட்டர் |
ரூ.24.94 லட்சம் |
ரூ.24.19 லட்சம் |
(-ரூ 75,000) |
AX7 L MT 7-சீட்டர் FWD |
ரூ.22.99 லட்சம் |
ரூ.22.24 லட்சம் |
(- ரூ 75,000) |
AX7 L AT 7-சீட்டர் FWD |
ரூ.24.74 லட்சம் |
ரூ.23.99 லட்சம் |
(-ரூ 75,000) |
AX7 L AT 7-சீட்டர் AWD |
ரூ.25.74 லட்சம் |
ரூ.24.99 லட்சம் |
(- ரூ 75,000) |
AX7 L எபோனி MT 7-சீட்டர் FWD |
– |
ரூ.22.39 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
AX7 L எபோனி AT 7-சீட்டர் FWD |
– |
ரூ.24.14 லட்சம் |
சமீபத்தில் வெளியிடப்பட்டது |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
மேலும் படிக்க: ஐபிஎல் 2025 -ன் அதிகாரப்பூர்வ காராக அறிவிக்கப்பட்டது Tata Curvv
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
XUV700 -ன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
200 PS |
185 PS வரை |
டார்க் |
380 Nm |
450 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT* |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்^ |
FWD |
FWD/AWD |
*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்; AWD = ஆல் வீல் டிரைவ்
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மஹிந்திரா XUV700 காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 6 வே பவர்டு டிரைவர் சீட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இது 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் சீட்டர் மற்றும் 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக இது 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளுடன் இது லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV700 -ன் 6- மற்றும் 7-சீட்டர் பதிப்புகள் எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளன. இதன் 5-சீட்டர் வேரியன்ட்கள் காம்பாக்ட் எஸ்யூவிகளான ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா -க்கு மட்டுமில்லாமல் டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவற்றுக்கும் போட்டியாக இருக்கின்றன.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.