• English
    • Login / Register

    வெளியானது Mahindra XUV700 -யின் எபோனி எடிஷன்

    மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்காக மார்ச் 17, 2025 07:08 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 12 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    லிமிடெட் எபோனி எடிஷன் ஆனது ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இதன் விலை அந்த வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15,000 வரை அதிகமாக உள்ளது.

    Mahindra XUV700 Ebony Edition launched

    மஹிந்திரா XUV700 -யின் எபோனி எடிஷன் ரூ.19.64 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வெளியிடப்பட்டுள்ளது. இது டார்க் எடிஷன் என்பதால் ஆல் பிளாக் வெளிப்புற மற்றும் உட்புற தீம் உடன் வருகிறது. மற்றபடி ஒட்டுமொத்த வடிவமைப்பும் வழக்கமான எஸ்யூவி போலவே உள்ளது.

    இது XUV700 -ன் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. விரிவான விலை விவரங்கள் இங்கே:

    வேரியன்ட்

    வழக்கமான XUV700

    XUV700 எபோனி

    விலை வித்தியாசம்

    AX7 டர்போ-பெட்ரோல் MT

    ரூ.19.49 லட்சம்

    ரூ.19.64 லட்சம்

    + ரூ 15,000

    AX7 டர்போ-பெட்ரோல் AT

    ரூ.20.99 லட்சம்

    ரூ.21.14 லட்சம்

    + ரூ 15,000

    AX7 டீசல் MT

    ரூ.19.99 லட்சம்

    ரூ.20.14 லட்சம்

    + ரூ 15,000

    AX7 டீசல் AT

    ரூ.21.69 லட்சம்

    ரூ.21.79 லட்சம்

    + ரூ 10,000

    AX7 L டர்போ-பெட்ரோல் AT

    ரூ.23.19 லட்சம்

    ரூ.23.34 லட்சம்

    + ரூ 15,000

    AX7 L டீசல் MT

    ரூ.22.24 லட்சம்

    ரூ.22.39 லட்சம்

    + ரூ 15,000

    AX7 L டீசல் AT

    ரூ.23.99 லட்சம்

    ரூ.24.14 லட்சம்

    + ரூ 15,000

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

    வழக்கமான மாடலில் எபோனி எடிஷன் பெறும் அனைத்து மாற்றங்களையும் பார்ப்போம்:

    என்ன வித்தியாசம் உள்ளது?

    மஹிந்திரா XUV700 -ன் எபோனி எடிஷன் எஸ்யூவி -யின் பிளாக்-அவுட் பதிப்பு என்றாலும் கூட வழக்கமான மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி ஃபாக் லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ் ஆகியவை எஸ்யூவி -யின் இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக உள்ளன. 

    எபோனி எடிஷன் ஆனது பிளாக்-அவுட் 18-இன்ச் அலாய் வீல்கள், கிரில்லில் பிளாக் இன்செர்ட்கள், பிளாக் ரூஃப் ரெயில்ஸ் மற்றும் வெளிப்புற ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs) ஆகியவற்றை கொண்டுள்ளது. டோர் ஹேண்டில்கள் குரோம் ஆக்ஸென்ட்டை கொண்டிருக்கின்றன. மேலும் முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கிட் பிளேட்டுகளில் சில்வர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான வேரியன்ட்டில் இருந்து இதை வேறுபடுத்தி காட்ட ORVM -களுக்கு கீழே முன் டோர்களில்  'எபோனி' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

    உள்ளே எபோனி பதிப்பின் கேபின் அமைப்பு வழக்கமான வேரியன்ட் போலவே உள்ளது. வெளிப்புறத்தைப் போலவே இன்ட்டீரியரிலும் ஆல் பிளாக் தீம் உள்ளது. இதில் ஆல் பிளாக் டேஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் டோர் பேட்களில் பிளாக் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டார்க் குரோம் ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இது லைட் கிரே கலர் ஹெட்லைனர் மற்றும் டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் சில்வர் ஆக்ஸென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புற டோர் ஹேண்டில்கள் மற்றும் சென்டர் கன்சோலுக்கு பியானோ பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: 2025 பிப்ரவரியில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மஹிந்திரா -வின் டீசல் எஸ்யூவிகளை தேர்வு செய்துள்ளனர்

    வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், 6 வே பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகளும் உள்ளன. இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 12-ஸ்பீக்கர் சோனி ஆடியோ சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவையும் உள்ளன.

    7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. இது அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது.

    பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    மஹிந்திரா XUV700 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. அதன் விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    2.2 லிட்டர் டீசல்

    பவர்

    200 PS

    185 PS வரை

    டார்க்

    380 Nm

    450 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT

    6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT

    டிரைவ்டிரெய்ன்*

    FWD

    FWD/AWD

    *FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ், AWD = ஆல்-வீல்-டிரைவ்

    ^AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    எபோனி பதிப்பு எஸ்யூவி -யின் ஃபிரன்ட்-வீல் டிரைவ், பதிப்பில் மட்டுமே கிடைக்கும்.

    போட்டியாளர்கள்

    மஹிந்திரா XUV700 -ன் 7 இருக்கைகள் கொண்ட பதிப்பானது டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ், மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுடன் போட்டியிடும். கூடுதலாக 5 இருக்கைகள் கொண்ட பதிப்பு ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டாடா ஹாரியர், எம்ஜி ஆஸ்டர், மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி700

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்Estimated
      மே,2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்Estimated
      ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • Volkswagen Tera
      Volkswagen Tera
      Rs.8 லட்சம்Estimated
      ஜனவ, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    • மாருதி brezza 2025
      மாருதி brezza 2025
      Rs.8.50 லட்சம்Estimated
      ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • vinfast vf3
      vinfast vf3
      Rs.10 லட்சம்Estimated
      பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience