Mahindra XUV300 முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது ஃபேஸ்லிப் டட் வெர்ஷன் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும்
மஹிந்திரா எக்ஸ்யூவி300 க்காக மார்ச் 01, 2024 06:53 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 101 Views
- ஒரு கருத்தை எழுதுக
முன்பதிவு நிறுத்தப்பட்டாலும் கூட நாடு முழுவதும் உள்ள சில டீலர்ஷிப்கள் இன்னும் இந்த எஸ்யூவி -யின் மீதமுள்ள ஸ்டாக்கிற்கான முன்பதிவுகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.
மஹிந்திரா XUV300 ஒரு அப்டேட்டுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறது மற்றும் அதன் ஃபேஸ்லிப்டட் வெர்ஷனை விரைவில் பெறும் என தெரிகிறது. ஆனவே இப்போது மஹிந்திரா சப்காம்பாக்ட் எஸ்யூவி -க்கான முன்பதிவுகளை இப்போது நிறுத்தியுள்ளது. ஒரு முதலீட்டாளர் சந்திப்பில் மஹிந்திரா ஆட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார். மேலும் முன்பதிவு ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்துக்கு பின்னர் மீண்டும் தொடங்கும் என்று தெரிவித்தார்.
மஹிந்திரா -வின் அறிக்கை
முதலீட்டாளர் சந்திப்பில் மஹிந்திரா & மஹிந்திராவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (ஆட்டோ & ஃபார்ம் செக்டார் துறை ராஜேஷ் ஜெஜூரிகர் காத்திருப்பு காலம் மற்றும் மாடல் அப்டேட் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது." நாங்கள் இப்போது எக்ஸ்யூவி 300 காருக்கான முன்பதிவுகளை இப்போது ஏற்பதில்லை. முன்பதிவு மிட் சைக்கிள் அப்டேட் உடன் மீண்டும் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Mahindra Thar Earth எடிஷன் வெளியிடப்பட்டது, விலை ரூ.15.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
XUV300 -க்கான புதிய முன்பதிவுகளை மஹிந்திரா நிறுத்திவிட்டதாகக் தெரிவிக்கப்பட்டாலும் கூட சில டீலர்ஷிப்கள் தற்போது ஸ்டாக் -கிற்கான ஆர்டர்களை இன்னும் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நிலுவையில் உள்ள ஆர்டர்களை முடிக்க வேண்டியிருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு XUV300 -யின் உற்பத்தியை கணிசமாகக் குறைக்கப்படும் என மஹிந்திரா கூறியுள்ளது. ஆனால் விரைவில் அல்லது மஹிந்திரா ஃபேஸ்லிப்டட் XUV300 -யின் இறுதிகட்ட வேலைகளை முடிக்க நெருங்கும் போது அதுவும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஃபேஸ்கலிப்டட் வெர்ஷன் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் பற்றிய விவரங்கள்
ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV300 சிறிது காலமாக தயாரிப்புக்கு முந்தைய நிலையில் உள்ளது. மேலும் இது தற்போதைய பதிப்பை விட வடிவமைப்பில் பெரிய மாற்றங்களை கொண்டிருக்கும். இதுவரை ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் 2024 XUV300 ஆனது புதிய வடிவைலான கிரில் வித்தியாசமான பம்பர் மற்றும் புதிய லைட்டிங் செட்டப் உடன் முற்றிலும் புதிய முன்பக்கத்துடன் வரும். இது புதிய அலாய் வீல்களை பெறும் மற்றும் பின்புற பக்கமும் கனெக்டட் LED டெயில்லைட் செட்டப் உடன் புதியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மஹிந்திரா XUV300 இன் கேபின் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
உள்ளே இது ஒரு புதிய தீம் மற்றும் ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் (10.25-இன்ச்) புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறும். வசதிகளை பொறுத்தவரை இது டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறலாம்.
மேலும் படிக்க: Mahindra Thar 5-Door அறிமுகம் செய்யப்படவுள்ள மாதத்தை உறுதி செய்த மஹிந்திரா நிறுவனம்
பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்ஸ் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவற்றை மஹிந்திரா வழங்குகிறது.
2024 XUV300 இன்ஜின்
மஹிந்திரா தற்போதைய பதிப்பில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடர்ந்து வழங்கும்: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/200 Nm) 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (117 PS/300 Nm) மற்றும் 1.2- லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜின் (130 PS/250 Nm). இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ. 9 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகியவற்றுக்கு போன்றவற்றுக்கு போட்டியாக தொடரும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV300 AMT