இந்த ஏப்ரலில் Maruti Jimny -யை விட Mahindra Thar காரை வாங்க நீங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்
published on ஏப்ரல் 17, 2024 09:06 pm by shreyash for மஹிந்திரா தார்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்திரா தார் போல இல்லாமல் மாருதி ஜிம்னி சில நகரங்களில் எளிதாகக் கிடைக்கிறது.
இந்த ஏப்ரலில் நீங்கள் ஒரு வெகுஜன சந்தை ஆஃப்ரோட் எஸ்யூவி -யை முன்பதிவு செய்ய திட்டமிட்டால் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன: மஹிந்திரா தார் மற்றும் மாருதி ஜிம்னி. உங்கள் இருப்பிடம் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து, குறிப்பாக மஹிந்திரா தார் காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. இந்தக் கட்டுரையில் இந்தியாவின் 20 சிறந்த நகரங்களில் உள்ள இரண்டு ஆஃப்ரோடு எஸ்யூவி -களின் காத்திருப்பு கால விவரங்களை ஒப்பிட்டுள்ளோம்.
காத்திருப்பு கால அட்டவணை
நகரம் |
மஹிந்திரா தார் |
மாருதி ஜிம்னி |
புது தில்லி |
3 மாதங்கள் |
1 மாதம் |
பெங்களூரு |
4 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
மும்பை |
2-4 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
ஹைதராபாத் |
3 மாதங்கள் |
1 மாதம் |
புனே |
4 மாதங்கள் |
2 மாதங்கள் |
சென்னை |
4 மாதங்கள் |
2 மாதங்கள் |
ஜெய்ப்பூர் |
2-4 மாதங்கள் |
0.5 மாதம் |
அகமதாபாத் |
4 மாதங்கள் |
காத்திருக்கவும் இல்லை |
குருகிராம் |
4 மாதங்கள் |
1 மாதங்கள் |
லக்னோ |
2-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
கொல்கத்தா |
2-4 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
தானே |
2-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
சூரத் |
4 மாதங்கள் |
காத்திருக்கவும் இல்லை |
காசியாபாத் |
4 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
சண்டிகர் |
4 மாதங்கள் |
2 மாதங்கள் |
கோயம்புத்தூர் |
3 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
பாட்னா |
4 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
ஃபரிதாபாத் |
2-4 மாதங்கள் |
2 மாதங்கள் |
இந்தூர் |
3-3.5 மாதங்கள் |
0.5 மாதம் |
நொய்டா |
2-4 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
முக்கிய விவரங்கள்
-
2024 ஏப்ரல் மாதத்தில் மஹிந்திரா தார் காருக்கு சராசரியாக 4 மாதங்கள் வரை காத்திருக்கும் காலம் உள்ளது. இருப்பினும் மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, தானே, ஃபரிதாபாத் மற்றும் நொய்டா போன்ற நகரங்களில் வாடிக்கையாளர்கள் வெறும் 2 மாதங்கள் குறைந்த காத்திருப்பு நேரத்தை மட்டுமே எதிர்பார்க்கலாம்.
-
3-டோர் தாருடன் ஒப்பிடுகையில் மாருதி ஜிம்னி சராசரியாக 1.5 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் குறைவாக உள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் இந்தூரில் எஸ்யூவியை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்குள் டெலிவரி எடுக்கலாம். அகமதாபாத் மற்றும் சூரத்தில் மாருதி ஜிம்னியை டெலிவரி எடுக்க காத்திருக்க தேவையில்லை.
-
இருப்பினும் நீங்கள் காசியாபாத், கோயம்புத்தூர் மற்றும் பாட்னாவில் வசிக்கிறீர்கள் என்றால் மாருதி ஜிம்னி நீங்கள் டெலிவரி எடுக்க 2 மாதங்களுக்கு மேல் ஆகலாம்.
-
நீங்கள் மிகவும் நடைமுறையான ஆஃப்-ரோடு எஸ்யூவியை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகும் மஹிந்திரா தார் 5-டோரின் வெளியீட்டிற்காக நீங்கள் காத்திருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: ஒவ்வொரு மாடலுக்கும் மேலே குறிப்பிட்டுள்ள காத்திருப்பு காலம் மாநிலம், நகரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் அல்லது நிறத்தைப் பொறுத்து மாறுபடலாம். கூடுதல் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொள்ளவும்.
பவர்டிரெயின்கள்
மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது அதே நேரத்தில் மாருதி ஜிம்னி ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவற்றின் விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
மஹிந்திரா தார் |
மாருதி ஜிம்னி |
||
இன்ஜின் |
1.5 லிட்டர் டீசல் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
1.5 லிட்டர் பெட்ரோல் |
பவர் |
118 PS |
152 PS |
132 PS |
105 PS |
டார்க் |
300 Nm |
320 Nm வரை |
300 Nm |
134 Nm |
டிரைவ் வகை |
RWD |
RWD / 4WD |
4WD |
4WD |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
5-ஸ்பீடு MT / 4-ஸ்பீடு AT |
விலை
மஹிந்திரா தார் |
மாருதி ஜிம்னி |
ரூ.11.25 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் |
ரூ.12.74 லட்சம் முதல் ரூ.14.95 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை விவரங்கள்
இந்த இரண்டு ஆஃப்ரோடு எஸ்யூவிகளும் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்கு போட்டியாக உள்ளன. இது ஒரு ஃபேஸ்லிஃப்ட்டை விரைவில் பெறவுள்ளது மற்றும் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் புதிய 5-டோர் எடிஷன் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு எஸ்யூவிகளும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற்அ மோனோகோக் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு மாற்றாகக் இருக்கும்.
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful