டாடா நிறுவனம் வரும் ஜூலை-செப்டம்பர் மாத காலகட்டத்துக்குள் Curvv EV காரை அறிமுகப்படுத்தும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 09, 2024 07:55 pm by ansh for டாடா கர்வ் இவி
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டு 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு கர்வ்வ் ICE வெளியாகலாம்.
டாடா அதன் EV போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் பணியில் தொடந்து ஈடுபட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டில் 3 EV -களை அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா பன்ச் EV -யின் அறிமுகத்தை பார்க்க முடிந்தது, அடுத்ததாக கர்வ்வ் இவி மற்றும் ஹாரியர் இவி மாடல்கள் அறிமுகத்துக்கு தயாராக உள்ளன. இப்போது, டாடா இந்த இரண்டு மாடல்களின் வெளியீட்டு தேதிகளையும் , ICE-பவர்டு கர்வ்வ் காரின் வெளியீட்டு தேதியையும் வெளியிட்டுள்ளது.
டாடா கர்வ்வ் EV & கர்வ்வ்
டாடா தனது முதலீட்டாளர் சந்திப்பில், 2024-2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கர்வ்வ் EV -யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. அதாவது ஜூலை மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடையில் கர்வ்வ் EV சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
மேலும் படிக்க: Tata Tiago மற்றும் Tigor CNG AMT கார்கள் வெளியிடப்பட்டன… விலை ரூ.7,89,900 முதல் தொடங்குகிறது
கடைசியாக 2022 -ல் கர்வ்வ் EV -யை பார்த்தோம், அது அப்போது கான்செப்ட் நிலையில் இருந்தது. அப்போது கூபே எஸ்யூவி -யின் சரியான பேட்டரி பேக் மற்றும் மோட்டார் விவரங்கள் நமக்கு தெரியாத நிலையில், இது 500 கிமீ தூரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டாடா கர்வ்வ் காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்திய மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு கர்வ்வ் -ன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வெர்ஷனை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே 2024-2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் கர்வ்வ் EV அறிமுகப்படுத்தப்பட்டால், அதை தொடர்ந்து ICE-இயங்கும் கர்வ்வ் இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இது வரை வெளியான விவரங்களை பொறுத்தவரை, இது பெரும்பாலும் டாடாவின் புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (125 PS/225 Nm), 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு DCT உடன் வரும்.நெக்ஸான் -ன் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (115 PS/260 Nm), மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை
கர்வ்வ் EV -யின்ஆரம்ப விலை ரூ. 20 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ICE கர்வ்வ் காரின் விலை ரூ. 10.50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம். கர்வ்வ் EV கார் MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். கர்வ்வ் கார் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ்,ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.