Tata Curvv EV மற்றும் Tata Nexon EV: எது வேகமாக சார்ஜ் ஆகிறது ?
published on அக்டோபர் 14, 2024 05:44 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி
- 77 Views
- ஒரு கருத்தை எழுதுக
கர்வ் EV ஆனது ஒரு பெரிய 55 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. நாங்கள் சோதனை செய்த நெக்ஸான் EV ஆனது 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருந்தது.
டாடா கர்வ்வ் EV சமீபத்தில் இந்தியாவில் முதல் பட்ஜெட் சந்தை எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபேவாக அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது தற்போது டாடாவின் வரிசையில் ஃபிளாக்ஷிப் EV ஆக உள்ளது. டாடா நெக்ஸான் EV கர்வ் EVக்கு கீழே உள்ளது. இது கர்வ் EV உடன் ஒப்பிடும்போது சிறிய பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்ட சப்காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இரண்டு EV -களும் DC ஃபாஸ்ட் சார்ஜர்களை சப்போர்ட் செய்கிறது. அதே வேளையில் 50 kW வரை சார்ஜிங் சப்போர்ட்டை கொண்ட நெக்ஸான் EV உடன் ஒப்பிடும்போது இது கர்வ் EV அதிக 70 kW சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த டாடா EV -களில் எதை நிஜ உலகில் வேகமாக சார்ஜிங் செய்ய முடிகிறது என்பதைப் பார்ப்போம்.
முடிவுகளைப் பெறுவதற்கு முன் நாங்கள் சோதித்த இரண்டு EV -களுக்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை பார்ப்போம்:
மாடல் |
டாடா கர்வ்வ் EV |
டாடா நெக்ஸான் EV |
பேட்டரி பேக் |
55 kWh |
40.5 kWh |
டிரைவிங் ரேஞ்ச் (MIDC பகுதி I + பகுதி II) |
502 கி.மீ |
390 கி.மீ |
சக்தி |
167 PS |
145 PS |
டார்க் |
215 என்எம் |
215 என்எம் |
DC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் |
70 கி.வா |
50 கி.வா |
கிளைம்டு சார்ஜிங் நேரம் (10-80 சதவீதம்) |
40 நிமிடங்கள் |
56 நிமிடங்கள் |
எங்கள் சார்ஜிங் சோதனைக்கு கர்வ்வ் EV -யின் நீண்ட தூர 55 kWh வேரியன்ட் மற்றும் நெக்ஸான் EVயின் 40.5 kWh வேரியன்ட்டை பயன்படுத்தினோம். பேப்பரில் நெக்ஸான் EV ஆனது 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 16 நிமிடங்கள் அதிக நேரம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பார்க்க: 2024 Nissan Magnite மற்றும் Tata Punch: விவரங்கள்ள் ஒப்பீடு
ரியல் வேர்ல்டு சார்ஜிங் சோதனை
சதவீதம் |
டாடா கர்வ் EV 55 kWh |
டாடா நெக்ஸான் EV 40.5 kWh |
20-30% |
6 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
30-40% |
6 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
40-50% |
7 நிமிடங்கள் |
8 நிமிடங்கள் |
50-60% |
7 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
60-70% |
7 நிமிடங்கள் |
8 நிமிடங்கள் |
70-80% |
8 நிமிடங்கள் |
11 நிமிடங்கள் |
80-85% |
3 நிமிடங்கள் |
6 நிமிடங்கள் |
85-90% |
6 நிமிடங்கள் |
6 நிமிடங்கள் |
90-95% |
9 நிமிடங்கள் |
11 நிமிடங்கள் |
95-100% |
19 நிமிடங்கள் |
31 நிமிடங்கள் |
எடுத்த மொத்த நேரம் (20-100%) |
1 மணி 18 நிமிடங்கள் |
1 மணி 48 நிமிடங்கள் |
முக்கிய விவரங்கள்
-
டாடா கர்வ் EV ஆனது அதிக DC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருப்பதால் இது ஆரம்பத்திலிருந்தே நெக்ஸான் EV -யை விட வேகமாக இருந்தது.
-
20 முதல் 70 சதவிகிதம் வரை ஒவ்வொரு 10 சதவிகிதத்திற்கும் சராசரி சார்ஜ் நேரம் கர்வ் EVக்கு 6-7 நிமிடங்கள் ஆகிறது. அதேசமயம் நெக்ஸான் EVக்கு 8-9 நிமிடங்கள் ஆகும்.
-
90 முதல் 95 சதவீதம் வரை, கர்வ் EV 9 நிமிடங்கள் எடுத்தது. அதே நேரத்தில் நெக்ஸான் EV கூடுதலாக 3 நிமிடங்கள் எடுத்தது.
-
கடைசி 5 சதவீதத்திற்கு கர்வ்வ் 19 நிமிடங்கள் எடுத்தது. அதே சமயம் நெக்ஸான் EV அரை மணி நேரம் எடுத்தது.
-
சிறிய பேட்டரி பேக் இருந்தாலும் கூட நெக்ஸான் EV ஆனது கர்வ்வ் EV உடன் ஒப்பிடும்போது சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
குறிப்பு:
-
டாடா கர்வ் EV -க்கு 0 சதவீதத்தில் இருந்து சார்ஜ் செய்யத் தொடங்கினோம். 0 முதல் 20 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 10 நிமிடங்கள் ஆனது.
-
இந்த இரண்டு சார்ஜிங் சோதனைகளும் வெவ்வேறு மாதங்களில் மற்றும் வெவ்வேறு வானிலை நிலைகளில் செய்யப்பட்டன.
பொறுப்பு துறப்பு
-
பேட்டரி பேக் அதிக வெப்பமடைவதைத் தடுக்க அனைத்து EV -களின் சார்ஜிங் விகிதம் 80 சதவிகிதத்திற்குப் பிறகு கணிசமாகக் குறைகிறது. இது நீண்ட காலத்திற்கு அதன் ஆயுளையும் திறனையும் பாதிக்கும்.
-
வானிலை, வெப்பநிலை மற்றும் பேட்டரி ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களைப் பொறுத்து சார்ஜிங் நேரம் மாறுபடலாம்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful