கார்களின் விலையை குறைக்கும் MG நிறுவனம்… புதிய மற்றும் போட்டியாளர்களின் விலை விவரங்கள் இங்கே
published on பிப்ரவரி 06, 2024 11:09 am by shreyash for எம்ஜி இஸட்எஸ் இவி
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைத்து MG மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ZS EV -கார் இப்போது ரூ. 3.9 லட்சம் வரை குறைவாக கிடைக்கும்.
ஒவ்வொரு புதிய ஆண்டின் தொடக்கத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களின் விலையை உயர்த்துவது வழக்கமான ஒரு விஷயம்தான். மாருதி, டாடா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கார்களின் விலையை உயர்த்தின. ஆனால் எம்ஜி இந்தியா சற்று வித்தியாசமான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளது. பிரிட்டனை பிறப்பிடமாகக் கொண்ட இந்த பிராண்ட் சமீபத்தில் அதன் EV -கள் உட்பட அனைத்து கார்களின் விலையையும் அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை குறைத்ததுள்ளது. அதன் மாடல்களின் மாற்றியமைக்கப்பட்ட விலை விவரங்களையும், அந்தந்த பிரிவின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது விலை எப்படி உள்ளது என்பதையும் இங்கே பார்ப்போம்.
எதற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது ?
2023 -ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் பிராண்டாக எம்ஜி எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் அதன் மொத்த விற்பனை எண்ணிக்கையானது ஏழாவது இடத்தில் இருந்த கார் தயாரிப்பாளரிடமிருந்து ஒப்பிடும் போது பெரிய வித்தியாசம் இருந்தது. 2024 ஆம் ஆண்டில், MG அதன் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது, ஆகவே விலையை போட்டியாளர்களுடன் சவால் விடும் வேரியன்ட்யில் மாற்றுகிறது.
எம்ஜி காமெட் இவி
எம்ஜி காமெட் இவி |
டாடா டியாகோ EV |
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
ரூ.6.99 லட்சம் முதல் ரூ.8.58 லட்சம் |
ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.09 லட்சம் |
ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் |
ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13.35 லட்சம் |
-
எம்ஜி காமெட் இவி இப்போது அதன் ஆரம்ப விலை ரூ.6.99 லட்சமாக உள்ளது, இது முன்பு இருந்ததை விட ரூ.99,000 குறைவாகும், அதே சமயம் டாப் வேரியன்ட் விலை ரூ.1.4 லட்சம் குறைவாக உள்ளது.
-
டாடா டியாகோ EV -ன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் கூட டாப்-ஸ்பெக் காமெட் EV -யை விட விலை ரூ.11,000 அதிமாக உள்ளது. பன்ச் EV மற்றும் சிட்ரோன் eC3 ஆகியவை விலை, அளவு மற்றும் டிரைவிங் ரேஞ்ச் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கப்போனால் அவை முற்றிலும் வேறுபட்ட பிரிவில் உள்ளன.
எம்ஜி ஆஸ்டர்
எம்ஜி ஆஸ்டர் |
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் |
ஹோண்டா எலிவேட் |
ஹூண்டாய் கிரெட்டா |
கியா செல்டோஸ் |
ரூ.9.98 லட்சம் முதல் ரூ.17.98 லட்சம் |
ரூ.9.99 லட்சம் முதல் ரூ.13.85 லட்சம் |
ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் |
ரூ.11 லட்சம் முதல் ரூ.20.05 லட்சம் வரை |
ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை |
-
எம்ஜி ஆஸ்டர் ஜனவரியில் MY2024 அப்டேட்டையும் பெற்றுள்ளது, இதன் மூலம் இது அதிக வசதிகள் நிறைந்ததாக மாறியது மட்டுமல்லாமல் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் காராகவும் ஆனது.
-
ஆஸ்டர் இப்போது முன்பை விட ரூ. 84,000 குறைவாக தொடங்குகிறது, இது இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் உள்ள சிறிய எஸ்யூவி ஆகவும் உள்ளது.
-
எஸ்யூவி -க்கான 2024 அப்டேட்டில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM போன்ற அம்சங்கள் உள்ளன.
-
எம்ஜி நிறுவனம் ஆஸ்டரின் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் அதிக செயல்பாடுகளுடன் மேம்படுத்தியுள்ளது
இதையும் பார்க்கவும்: பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ இனிமேல் ஆண்டுதோறும் நடத்தப்படும் - இதனால் ஆட்டோ எக்ஸ்போ மாற்றப்படுமா ?
எம்ஜி ஹெக்டர்
எம்ஜி ஹெக்டர் |
டாடா ஹாரியர் |
மஹிந்திரா XUV700 (5 சீட்டர்) |
ரூ.14.95 லட்சம் முதல் ரூ.21.95 லட்சம் |
ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் |
ரூ.14 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் |
-
டீசல் வேரியன்ட்கள் எம்ஜி ஹெக்டர் 80,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.8,000 வரை குறைந்துள்ளன.
-
ஹெக்டரின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் இப்போது பேஸ்-ஸ்பெக் ஹாரியரை விட ரூ.54,000 குறைவான விலையில் உள்ளது. இதற்கிடையில், ஃபுல்லி லோடட் MG எஸ்யூவி டாப்-ஸ்பெக் ஹாரியரை விட மிகவும் குறைவான விலையில் உள்ளது, ஆனால் இன்னும் டீசல்-ஆட்டோமெட்டிக் பவர்டிரெய்ன் கொடுக்கப்படவில்லை.
-
இருப்பினும், மஹிந்திரா XUV700 இன் 5-சீட்டர் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை விட இதன் விலை இன்னும் ரூ.95,000 கூடுதலாகும்.
எம்ஜி ஹெக்டர் பிளஸ்
எம்ஜி ஹெக்டர் பிளஸ் |
டாடா சஃபாரி |
மஹிந்திரா XUV700 (6/7-சீட்டர்) |
ரூ.17.75 லட்சம் முதல் ரூ.22.68 லட்சம் |
ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் |
ரூ.17.99 லட்சம் முதல் ரூ.26.99 லட்சம் |
-
எம்ஜி ஹெக்டர் பிளஸ், 3-வரிசை நடுத்தர அளவிலான எஸ்யூவி, டீசல் வேரியன்ட்களுக்கு ரூ.60,000 வரை குறைந்துள்ளது. மறுபுறம், பெட்ரோல் வேரியன்ட்களின் விலை இப்போது ரூ.5,000 வரை மட்டுமே.
-
என்ட்ரி நிலை ஹெக்டர் பிளஸ் வேரியன்ட், எக்ஸ்யூவி700 இன் பேஸ்-ஸ்பெக் 7-சீட்டர் வேரியன்ட் ரூ.4,000 குறைந்துள்ளது.
-
டாடா சஃபாரி மிகவும் விலை ஆரம்ப விலை கூடுதலாக இருந்தாலும், ஹெக்டர் ப்ளஸ்ஸின் டாப்-ஸ்பெக் வேரியன்ட், டாப்-ஸ்பெக் சஃபாரி மற்றும் XUV700 -ஐ விட ரூ. 4 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
எம்ஜி ZS இவி
எம்ஜி ZS இவி |
ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் |
ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.08 லட்சம் |
ரூ.23.84 லட்சம் முதல் ரூ.24.03 லட்சம் |
-
எம்ஜி ZS இவி காரானது மிகப்பெரிய அளவில் விலை குறைந்துள்ளது, இது ரூ. 3.9 லட்சம் வரை குறைந்துள்ளது.
-
இது இப்போது அதன் நேரடி போட்டியாளரான ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காரை விட ரூ. 4.86 லட்சம் குறைவாக தொடங்குகிறது, அதே நேரத்தில் அதிக அம்சங்களையும் சிறந்த ரேஞ்சையும் வழங்குகிறது (461 கிமீ கிளைம் செய்யப்பட்டுள்ளது).
இதையும் பார்க்கவும்: 2024 Maruti Dzire கார் சோதனையின் போது முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
எம்ஜி குளோஸ்டர்
எம்ஜி குளோஸ்டர் |
டொயோட்டா ஃபார்ச்சூனர் |
ரூ.37.49 லட்சம் முதல் ரூ.43 லட்சம் |
ரூ.33.43 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் |
-
எம்ஜி குளோஸ்டர் விலை 1.34 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
-
டொயோட்டா ஃபார்ச்சூனரின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் இன்னும் குளோஸ்டரின் என்ட்ரி-லெவல் வேரியன்ட் விலை ரூ.4 லட்சத்திற்கு மேல் குறைந்துள்ளது.
-
மறுபுறம், குளோஸ்டரின் டாப்-ஸ்பெக் வேரியன்ட், ஃபார்ச்சூனரின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை காட்டிலும் இப்போது ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக கிடைக்கும், அதிக தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை இது கொண்டுள்ளது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: எம்ஜி ZS EV ஆட்டோமெட்டிக்