MG Comet EV மற்றும் MG ZS EV கார்களின் விலை ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது
published on ஜூன் 14, 2024 08:18 pm by dipan for எம்ஜி comet ev
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த இரண்டு EV -களின் பேஸ் வேரியன்ட்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
-
MG ZS EV ரூ.25,000 வரை விலை உயர்ந்துள்ளது
-
தற்போது இதன் விலை ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.44 லட்சம் வரை உள்ளது
-
மறுபுறம் MG காமெட் EV ரூ.13,000 வரை விலை உயர்ந்துள்ளது.
-
தற்போது காமெட்டின் விலை ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் வரை உள்ளது
எம்ஜி காமெட் இவி மற்றும் MG ZS EV ஆகிய கார்களின் விலையை எம்ஜி நிறுவனம் உயர்த்தியுள்ளது. இருப்பினும் விலை உயர்வு எந்த மாடலின் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்களையும் பாதிக்கவில்லை. இந்த ஒவ்வொரு மாடலுக்குமான விலை வித்தியாசம் எவ்வளவு என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்:
எம்ஜி காமெட்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
விலை வித்தியாசம் |
எக்ஸ்கியூட்டிவ் |
ரூ.6.99 லட்சம் |
ரூ.6.99 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
எக்ஸைட் |
ரூ.7.98 லட்சம் |
ரூ.7.98 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
எக்ஸைட் FC |
ரூ.8.34 லட்சம் |
ரூ.8.45 லட்சம் |
+ ரூ.11,000 |
எக்ஸ்க்ளூஸிவ் |
ரூ.8.88 லட்சம் |
ரூ.9 லட்சம் |
+ ரூ.12,000 |
எக்ஸ்க்ளூஸிவ் FC |
ரூ.9.24 லட்சம் |
ரூ.9.37 லட்சம் |
+ ரூ. 13,000 |
100 ஆண்டு லிமிடெட் பதிப்பு |
ரூ.9.40 லட்சம் |
ரூ.9.40 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
(விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)
-
எம்ஜி காமெட்டின் பேஸ் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸைட் டிரிம்களின் விலை மாறாமல் உள்ளது.
-
ஹையர் எக்ஸைட் FC, எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் FC டிரிம்களின் விலை இப்போது ரூ.11,000 முதல் ரூ.13,000 வரை அதிகரித்துள்ளன.
-
காமெட் EV -யின் 100 வருட லிமிடெட் பதிப்பின் விலை மாறவில்லை. தற்போது ரூ.9.40 லட்சத்தில் கிடைக்கும்.
-
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் விலை உயர்வுக்கு ஏற்ப வசதிகளில் எந்த அப்டேட்களும் இல்லை.
MG காமெட் EV ஆனது 17.3 kWh பேட்டரி பேக் மற்றும் 230 கி.மீ வரை ARAI கிளைம்டு ரேஞ்சை கொண்ட நான்கு இருக்கைகள் கொண்ட ஹேட்ச்பேக் ஆகும். இது 42 PS மற்றும் 110 Nm உற்பத்தி செய்யும் ரியர் வீல் டிரைவ் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. MG காமெக்ட் EV -க்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டாடா டியாகோ EV மற்றும் இந்த சிட்ரோன் eC3 ஆகியவற்றுக்கு குறைவான விலை கொண்ட மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ரூ. 30,000 வரை விலை உயர்ந்தது
எம்ஜி ZS EV
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
விலை வித்தியாசம் |
எக்ஸ்கியூட்டிவ் |
ரூ.18.98 லட்சம் |
ரூ.18.98 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
எக்ஸைட் ப்ரோ |
ரூ.19.98 லட்சம் |
ரூ.19.98 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ் |
ரூ.23.98 லட்சம் |
ரூ.24.23 லட்சம் |
+ ரூ 25,000 |
100 ஆண்டு லிமிடெட் எடிஷன் |
ரூ.24.18 லட்சம் |
ரூ.24.18 லட்சம் |
எந்த மாற்றமும் இல்லை |
எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ் DT |
ரூ.24.20 லட்சம் |
ரூ.24.44 லட்சம் |
+ ரூ. 24,000 |
எசன்ஸ் |
ரூ.24.98 லட்சம் |
ரூ.25.23 லட்சம் |
+ ரூ. 25,000 |
எசன்ஸ் DT |
ரூ.25.20 லட்சம் |
ரூ.25.44 லட்சம் |
+ ரூ. 24,000 |
(விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா)
-
MG ZS EV -யின் பேஸ் எக்ஸிகியூட்டிவ் மற்றும் எக்ஸைட் ப்ரோ டிரிம்கள் முன்பு இருந்த விலையிலேயே உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் பேஸ் டிரிம்களை பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
-
ZS EV -யின் 100 ஆண்டு லிமிடெட் பதிப்பு மாடலின் விலையும் மாறவில்லை.
-
இருப்பினும் ஹையர்-எண்ட்-எக்ஸ்க்ளூஸிவ் பிளஸ் மற்றும் எசென்ஸ் டிரிம்களின் விலை இப்போது ரூ.25,000 வரை அதிகரித்துள்ளன.
-
டூயல்-டோன் பதிப்புகளின் விலை முன்பை விட இப்போது ரூ.24,000 அதிகம்.
-
வசதிகளிலோ அல்லது வடிவமைப்பிலோ எந்த அப்டேட்டும் இல்லை.
MG ZS EV ஆனது இந்திய சந்தையில் நுழைந்த முதல் சில லாங் ரேஞ்ச் பியூர் EV -களில் ஒன்றாகும். இது 50.3 kWh பேட்டரி பேக் மற்றும் 177 PS மற்றும் 280 Nm உற்பத்தி செய்யும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது ICAT கிளைம்டு 461 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது. MG ZS EV ஆனது ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், BYD அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் மாருதி eVX உடன் போட்டியிடும். இது டாடா நெக்ஸான் EV மற்றும் ஒரு பிரிவில் கீழே உள்ள மஹிந்திரா XUV400 EV, ஆகியவ்ற்றுக்கு விலையுயர்ந்த மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது
மேலும் படிக்க: வால்மீன் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful