Tata Tiago EV மற்றும் MG Comet EV ஆகிய கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது… அவற்றின் ஒப்பீடு இங்கே
modified on பிப்ரவரி 19, 2024 07:20 pm by shreyash for டாடா டியாகோ இவி
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா -வின் EV ரூ.70,000 வரை விலை குறைந்துள்ளது, காமெட் EV ரூ.1.4 லட்சம் வரை விலை குறைந்துள்ளது.
இந்தியாவில் மிகவும் குறைவான இரண்டு மின்சார கார்களான டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகிய கார்களின் விலை சமீபத்தில் கணிசமான விலை குறைக்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனம் பேட்டரி பேக் விலை குறைந்துள்ளதால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எம்ஜி -யின் விலை குறைப்பானது போட்டியாளருடன் சமன் செய்வதன் மூலமாக விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட விலை, ஒவ்வொரு EV-களையும் முன்னெப்போதையும் விட மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. டியாகோ EV மற்றும் காமெட் EV ஆகியவற்றில் எது பணத்திற்கு மதிப்பு அதிகமாக உள்ளது ?. புதிய விலை விவரங்களை ஒப்பிட்டுள்ளோம்.
முதலில், இரண்டு EV -களின் பேட்டரி பேக் விவரங்களையும் பார்க்கலாம்:
விவரங்கள் |
டாடா டியாகோ EV |
எம்ஜி காமெட் இவி |
|
பேட்டரி பேக் |
19.2 kWh (மீடியம் ரேஞ்ச்) |
24 kWh (லாங் ரேஞ்ச்) |
17.3 kWh |
சக்தி |
61 PS |
75 PS |
42 PS |
டார்க் |
110 Nm |
114 Nm |
110 Nm |
கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் |
250 கி.மீ |
315 கி.மீ |
230 கி.மீ |
-
டாடா டியாகோ EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது, அதே நேரத்தில் காமெட் EV ஒரு பேட்டரி பேக் ஆப்ஷனுடன் மட்டுமே வருகிறது.
-
எம்ஜி காமெட் EV -யை விட டியாகோ EV யின் மீடியம் ரேஞ்ச் பதிப்பில் கூட 19.2 kWh பேட்டரி பேக் உள்ளது, இது அதிக செயல்திறன் மற்றும் ரேஞ்சை வழங்குகிறது.
மேலும் பார்க்க: Toyota Innova Hycross, Kia Carens மற்றும் சில கார்களை வீட்டுக்கு ஓட்டிச் செல்ல ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
சார்ஜர் |
சார்ஜிங் நேரம் |
||
டியாகோ இவி |
எம்ஜி காமெட் இவி |
||
19.2 kWh |
24 kWh |
17.3 kWh |
|
3.3 kW ஏசி சார்ஜர் |
6.9 மணிநேரம் (10-100%) |
8.7 மணிநேரம் (10-100%) |
7 மணிநேரம் (0-100%) |
7.2 kW ஏசி சார்ஜர் |
N.A |
3.6 மணிநேரம் (10-100%) |
N.A |
50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் |
58 நிமிடங்கள் (10-80%) |
58 நிமிடங்கள் (10-80%) |
N.A |
3.3 kW AC சார்ஜரை பயன்படுத்தும் போது டியாகோ EV மற்றும் எம்ஜி காமெட் EV -ன் மீடியம் ரேஞ்ச் பதிப்புகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சார்ஜிங் நேரத்தைக் கொண்டுள்ளன. இருப்பினும், எம்ஜி காமெட் EV போல இல்லாமல், டியாகோ EV ஆனது 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது, இதன் மூலமாக 58 நிமிடங்களில் அதன் பேட்டரியை 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம்.
டியாகோ EV -யின் லாங் ரேஞ்ச் பதிப்பில் 7.2 kW AC சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்யும் நேரத்தைக் குறைக்கலாம்.
விலை விவரங்கள்
டாடா டியாகோ EV |
எம்ஜி காமெட் இவி |
பேஸ் - 6.99 லட்சம் |
|
XE மீடியம் ரேஞ்ச் - ரூ 7.99 லட்சம் |
ஸ்போர்ட் - ரூ.7.88 லட்சம் |
XT மீடியம் ரேஞ்ச் - ரூ 8.99 லட்சம் |
பிளஷ் - 8.58 லட்சம் |
XT லாங் ரேஞ்ச் - ரூ 9.99 லட்சம் |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
-
எம்ஜி காமெட் EV -யின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட், டாடா டியாகோ EVயின் பேஸ்-ஸ்பெக் மீடியம்-ரேஞ்ச் XE வேரியன்ட்டை விட ரூ.1 லட்சம் குறைவானது. இதற்கிடையில், எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் டாப்-ஸ்பெக் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டை விட 2-டோர் மைக்ரோ EV -யின் டாப் எண்ட் வேரியன்ட் சுமார் ரூ. 3 லட்சம் விலையில் உள்ளது.
-
இருப்பினும், டியாகோ EV மீடியம் ரேஞ்ச் வேரியன்ட்களுக்கும், மிட்-ஸ்பெக் மற்றும் டாப்-ஸ்பெக் காமெட் EV வேரியன்ட்களுக்கும் விலை கிட்டத்தட்ட நெருக்கமாகவே (ஒன்றொன்றுக்கு ரூ. 50,000 -க்குள்) உள்ளது, பிந்தையது இன்னும் குறைவாக உள்ளது.
-
டாடாவின் என்ட்ரி-லெவல் EV ஆப்ஷன் மிட்-ஸ்பெக் காமெட் EV -யை விட ரூ.11,000 கூடுதலாக உள்ளது. எம்ஜி காமெட் EV -யின் டாப்-ஸ்பெக் ப்ளஷ் வேரியன்ட்ம் கூட, டியாகோ EV XT மீடியம் ரேஞ்ச் வேரியன்ட்டை ரூ.41,000 குறைவாக உள்ளது.
-
மிட்-ஸ்பெக் காமெட் EV ப்ளே வேரியன்ட் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று டிரைவருக்கான டிஸ்ப்ளே), 2-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. டியாகோ EV -யின் பேஸ்-ஸ்பெக் XE வேரியன்ட்டில் இவை எதுவும் இல்லை.
-
இருப்பினும், மிட்-ஸ்பெக் XT மீடியம் ரேஞ்ச் டியாகோ EV ஆனது 7-இன்ச் டச் ஸ்கிரீன், 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. ஆனால், டியாகோ EV -ன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றது, இது காமெட் EV போன்றவற்றுக்கு வயர்லெஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது.
-
டியாகோ EV ஆனது அதன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டில் ஆட்டோமெட்டிக் AC உடன் வருகிறது, இது எம்ஜி காமெட் EV உடன் வழங்கப்படவில்லை.
-
எம்ஜி காமெட் EV இன் டாப்-ஸ்பெக் டிரிம் ஸ்மார்ட் ஸ்டார்ட் சிஸ்டம் (பட்டன் இல்லை, காரில் உள்ள கீ உடன் ஆக்ஸிலரேட்டர் பெடலை அழுத்தினால் போதும்), ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் டில்ட் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங் போன்ற வசதிகளுடன் வருகிறது.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இரண்டு EV -களும் டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகின்றன. டியாகோ EV -யின் மிட்-ஸ்பெக் XT வேரியன்ட் -டில் பின்புற பார்க்கிங் கேமரா கிடையாது.
-
டாடா டியாகோ EV -யின் என்ட்ரில் லெவல் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டின் விலை காமெட் EV -யின் டாப்-ஸ்பெக் ப்ளஷ் வேரியன்ட்டை விட ரூ.1.41 லட்சம் அதிகம்.
இறுதி முடிவு
எம்ஜி காமெட் EV -யானது டாடா டியாகோ EV -யை விட குறைந்த விலையில் அதிக வசதிகளை கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், கேபின் அளவு மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றில் குறை உள்ளது. இரண்டுமே 300 கி.மீ -க்கும் குறைவான ரேஞ்சில் நகரத்தில் ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த என்ட்ரி-நிலை EV ஆப்ஷன்கள் ஒவ்வொன்றும் அதற்கேற்ற வகையில் வெவ்வேறு வசதிகளை கொண்டுள்ளன.
வசதிகளில் கவனம் செலுத்தி, ஒரே இரவில் சார்ஜ் செய்யும் ஆப்ஷனுடன் தனித்துவமான EV அனுபவத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், எம்ஜி காமெட் EV பணத்திற்கான கூடுதலான மதிப்பை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் அதிகமான ரேஞ்ச், பவர் மற்றும் காருக்குள்ளே அதிக இடம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தால், கொஞ்சம் செலவு செய்தால் டியாகோ EV -யை நீங்கள் பரிசீலிக்கலாம். நகரப் பயணத்தை விட நீண்ட தூர பயணங்களைக் கருத்தில் கொண்டு , ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கும் என்ட்ரி லெவல் EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், டியாகோ EV -யின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்கள் உங்களது பட்ஜெட்டுக்குள் இருக்கும்.
டியாகோ EV மற்றும் காமெட் EV ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், அதற்கான காரணம் என்ன ? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: டாடா டியாகோ EV ஆட்டோமெட்டிக்