Tata Tiago EV மற்றும் Tata Nexon EV: சார்ஜிங் டைமிங்கில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
published on ஜூன் 21, 2024 07:23 pm by ansh for டாடா நெக்ஸன் இவி
- 106 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் EV ஆனது ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டிருக்கிறது. அது வேகமாக சார்ஜிங் செய்வதற்காக DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.
டாடா டியாகோ EV டாடாவின் மிகவும் விலை குறைவான மின்சார கார் ஆகும். இது இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வருகிறது. மறுபுறம் நெக்ஸான் இவி டாடாவின் மிகவும் விலையுயர்ந்த மின்சார கார் ஆக உள்ளது. இது 30 kWh மற்றும் 40.5 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளை பெறுகிறது. இந்த இரண்டு மாடல்களின் பெரிய பேட்டரி பேக்குகளின் சார்ஜிங் நேரத்தை 15 முதல் 100 சதவீதம் வரை சோதித்து பார்த்தோம் அதன் முடிவுகள் இதோ.
மேலும் படிக்க: பாரத் NCAP பாதுகாப்பிற்க்கான சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Nexon EV
குறிப்பு: இந்த இரண்டு கார்களின் சார்ஜிங் நேரங்களும் ஒரே சார்ஜிங் ஸ்டேஷனில் ஒரு வருட இடைவெளியில் சோதனை செய்யப்பட்டன. ஜூன் 2023 -ல் டியாகோ EV சோதிக்கப்பட்டது. மேலும் நெக்ஸன் EV 2024 ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்டது. எனவே இரண்டு சோதனைகளும் ஒரே மாதிரியான வானிலையில் நடத்தப்பட்டன.
சதவிதம் |
டாடா டியாகோ EV LR |
டாடா நெக்ஸான் EV LR |
15-20% |
4 நிமிடங்கள் |
5 நிமிடம் |
20-30% |
8 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
30-40% |
8 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
40-50% |
8 நிமிடங்கள் |
8 நிமிடங்கள் |
50-60% |
8 நிமிடங்கள் |
9 நிமிடங்கள் |
60-70% |
8 நிமிடங்கள் |
8 நிமிடங்கள் |
70-80% |
9 நிமிடங்கள் |
11 நிமிடங்கள் |
80-85% |
4 நிமிடங்கள் |
6 நிமிடங்கள் |
85-90% |
5 நிமிடம் |
6 நிமிடங்கள் |
90-95% |
7 நிமிடங்கள் |
11 நிமிடங்கள் |
95-100% |
26 நிமிடங்கள் |
31 நிமிடங்கள் |
எடுத்த மொத்த நேரம் |
1 மணி 35 நிமிடங்கள் |
1 மணி 53 நிமிடங்கள் |
முக்கியமான விவரங்கள்
-
டியாகோ EV ஆனது 70 சதவிகிதம் சார்ஜ் ஆகும் வரை 10 சதவிகிதத்திற்கு 8 நிமிடங்கள் சீரான சார்ஜிங்கை காட்டியது. மேலும் சார்ஜிங் நேரம் 1 நிமிடம் அதிகரித்து 70 முதல் 80 சதவிகிதம்.
-
மறுபுறம் நெக்ஸான் EV -யின் சார்ஜிங் நேரம் 80 சதவீதத்தை எட்டும் வரை 10 சதவீதத்திற்கு 8 முதல் 11 நிமிடங்கள் வரை மாறுபடும்.
-
80 முதல் 100 சதவிகிதம் வரை டியாகோ EV -யின் சார்ஜிங் நேரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. மேலும் கடைசி 5 சதவிகிதம் அதிக நேரத்தை எடுத்தது.
-
நெக்ஸான் EV -க்கு சார்ஜிங் நேரம் 90 சதவீதம் வரை மாறாமல் இருந்தது, பின்னர் அது உயரத் தொடங்கியது, கடைசி 5 சதவீதத்திற்கு 31 நிமிடங்கள் எடுத்தது.
-
மொத்தத்தில் நெக்ஸான் EV -யின் சார்ஜிங் நேரம் டியாகோ EV -யை விட 18 நிமிடங்கள் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் என்றும் வைத்து கொள்ளலாம். ஆனால் இந்த வேறுபாடு மிகவும் பெரிதாக தெரியவில்லை. நெக்ஸன் EV -யின் பேட்டரி பேக்கின் அளவைக் கருத்தில் கொண்டு பார்த்தால் டியாகோ EV -யை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
சார்ஜிங் வேகம்
நெக்ஸான் EV ஆனது 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஆனால் சோதனைகளின் போது 80 சதவீதம் வரை 29 முதல் 30 kW வரை சார்ஜ் ஆகும். அதன் பிறகு சார்ஜிங் வேகம் குறையத் தொடங்கியது மற்றும் கடைசி சில சதவீதம் 3 kW மதிப்பீட்டில் சார்ஜ் செய்யப்பட்டது.
மேலும் பார்க்க: எக்ஸ்க்ளூஸிவ்: டெஸ்ட் டிரைவின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Tata Harrier EV, எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் விவரங்கள் தெரிய வருகின்றன
இதேபோல் டியாகோ EV ஆனது 25 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. மேலும் சோதனையின் போது 80 சதவீதம் வரை 17 kW வரை சார்ஜ் செய்யப்பட்டது. அதன் சார்ஜிங் விகிதமும் 80 சதவிகிதத்திற்குப் பிறகு குறைந்தது. கடைசி சில சதவிகிதம் 2 kW மதிப்பில் சார்ஜ் செய்யப்பட்டது.
இரண்டு மாடல்களின் 10-80 சதவீத DC ஃபாஸ்ட் சார்ஜிங் நேரமும் ஒத்ததாக உள்ளது. நெக்ஸான் EV -யின் 10-80 சதவீத நேரம் 56 நிமிடங்கள், மற்றும் டியாகோ EV -யின் நேரம் 58 நிமிடங்கள் ஆகும். மேலும் அந்த சார்ஜிங் உடன் பயன்படுத்தக்கூடிய ரேஞ்சை வழங்குகிறது. இருப்பினும் நெக்ஸான் EV ஆனது பெரிய பேட்டரி பேக் காரணமாக கடந்த 20 சதவீதத்திற்கு அதிக நேரம் எடுக்கிறது.
குறிப்பு: மேலே காட்டப்பட்டுள்ள சார்ஜிங் நேரங்கள் டெம்பரேச்சர் மற்றும் எலக்ட்ரிக் காரின் பேட்டரி ஆரோக்கியத்தின் அடிப்படையில் மாறுபடக்கூடும். இந்த இரண்டு கார்களும் சோதனையின் போது எடுத்ததை விட அதிக சார்ஜிங்கை எடுக்கலாம். குளிர்ந்த காலநிலையில் இரண்டு கார்களின் சார்ஜிங் நேரம் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful