எக்ஸ்க்ளூஸிவ்: டெஸ்ட் டிரைவின் போது படம்பிடிக்கப்பட்டுள்ள Tata Harrier EV, எலக்ட்ரிக் மோட்டார் செட்டப் விவரங்கள் தெரிய வருகின்றன
published on ஜூன் 19, 2024 05:25 pm by shreyash for டாடா ஹெரியர் ev
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய டாடா ஹாரியர் EV ஆனது Acti.ev பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சமீபத்திய ஸ்பை போட்டோ டாடா ஹாரியர் EV -யின் ரியர்-ஆக்சிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை காட்டுகிறது.
-
இது ஹாரியர் EV-இல் ஆல்-வீல் டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்னின் ஆப்ஷனை பெறும் என்று தெரியவந்துள்ளது.
-
புதிய வடிவிலான அலாய் வீல்கள் மற்றும் மூடிய கிரில் போன்ற EV -சார்ந்த வடிவமைப்பை எதிர்பார்க்கலாம்.
-
எதிர்பார்க்கப்படும் வசதிகளில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், டூயல்-ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்பைப் பொறுத்தவரை ஹாரியரில் 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS டெக்னாலஜி ஆகியவை கொடுக்கப்படலாம்.
-
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 30 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடாவின் வரவிருக்கும் ஆல்-எலக்ட்ரிக் மிட்-சைஸ் எஸ்யூவி தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. டாடா ஹாரியர் EV 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அதன் டெஸ்ட் டிரைவின் போது புதிய ஸ்பை ஷாட்களை இந்தியாவின் லே நகரத்தில் இருந்து சமீபத்தில் நாங்கள் பெற்றுள்ளோம்.
எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது
சமீபத்திய ஸ்பை ஷாடில், ஹாரியர் EV-யில் ரியர்-ஆக்சில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாரை தெளிவாகக் காட்டுகிறது. டாடா ஹாரியர் EV ஆனது ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனுடன் வழங்கப்படலாம் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. இது டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள், ஃப்ரன்ட் ஆக்ஸில் ஒன்று மற்றும் ரியர் ஆக்ஸிலில் மற்றொன்றையும் பெறுகிறது.
டிசைனை பொறுத்தவரையில் ஹாரியர் EV அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) போன்ற அதே தோற்றம் மற்றும் டிசைன் போன்றவற்றை கொண்டிருக்கும். இருப்பினும் இது EV -க்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அலாய் வீல் டிசைனைக் கொண்டிருக்கும். பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் வெர்ஷனின் அடிப்படையில் முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் கனெக்டட் LED லைட்டிங் செட்டப்கள் மற்றும் மூடப்பட்ட கிரில் ஆகியவை கொடுக்கப்படலாம். கூடுதலாக அதன் இரண்டு பம்பர்களின் டிசைன்களும் அப்டேட் செய்யப்படும்.
எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச்
ஹாரியர் EV-க்கான பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை என்றாலும் அதன் கிளைம் செய்யும் ரேஞ்ச் ஆன 500 கிலோமீட்டருக்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இது டூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் (AWD) டிரைவ் டிரெய்ன் ஆப்ஷனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
டீசலில் இயங்கும் ஹாரியரின் அதே வசதிகளையே ஹாரியர் EV-யும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உபகரணங்கள் பட்டியலில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், வென்டிலேட்டட் மற்றும் இயங்கும் முன் சீட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், மூட் லைட்டிங் கொண்ட பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஜெஸ்ச்சர்-எனேபில்ட் டெயில்கேட் போன்ற வசதிகள் இதில் கொடுக்கப்படலாம்.
பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள், பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) போன்ற பாதுகாப்பு வசதிகள் இதில் கிடைக்காலாம். இந்த காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படும். இதன் கீழ் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எமெர்ஜன்சி பிரேக்கிங் போன்ற செயல்பாடுகள் இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா ஹாரியர் EV-யின் விலை சுமார் ரூ. 30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XUV.e8 உடன் போட்டியிடும் மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV-க்கு பிரீமியம் மாற்றாக இதை தேர்வு செய்யலாம்.
டாடா ஹாரியர் EV பற்றிய கூடுதல் அப்டேட்களுக்கு, கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்
0 out of 0 found this helpful