பாரத் NCAP பாதுகாப்பிற்க்கான சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Nexon EV
published on ஜூன் 17, 2024 05:26 pm by rohit for டாடா நெக்ஸன் இவி
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
நெக்ஸான் EV ஆனது பாரத் NCAP -யின் பெரியோர் மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளில் ஒட்டுமொத்தமாக 5 -நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது
டாடா நெக்ஸான் EV இறுதியாக பாரத் NCAP ஆல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது, ஒட்டுமொத்த பாதுகாப்பிற்க்கான மதிப்பீட்டில் 5 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி வயது வந்த மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு பிரிவுகளில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றது. இருப்பினும், BNCAP-இலிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா பஞ்ச் EV போன்று சிறந்த மதிப்பெண்களை நெக்ஸான் பெறவில்லை. இந்திய அரசாங்கம் பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தை அக்டோபர் 2023-இல் அறிமுகப்படுத்தியது, மேலும் இன்றுவரை ஏஜென்சியால் சோதிக்கப்பட்ட முதல் EV-களில் நெக்ஸனும் ஒன்றாகும்.
பாரத் என்சிஏபி சோதனைகளில் நெக்ஸானின் எலக்ட்ரிக் டாப் மாடலான எம்பவர்டு பிளஸ் லாங் ரேஞ்ச் (LR) வேரியன்ட் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. இருப்பினும், பாதுகாப்பு மதிப்பீடு அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என்பதை முடிவுகள் குறிப்பிடுகின்றன. டாடா நெக்ஸான் EV பாதுகாப்புச் சோதனையில் எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பெரியவர்களுக்கான பாதுகாப்பு
32-க்கு 29.86 புள்ளிகளைப் பெற்றுள்ளது
5 நட்சத்திர மதிப்பீட்டிற்கு மதிப்பெண்கள் போதுமானதாக இருந்தபோதிலும், இதுவரை பாரத் NCAP ஆல் சோதனை செய்யப்பட்ட டாடா கார்களில் பெரியவர்களின் பாதுகாப்பிற்கான (AOP) மிகக் குறைந்த மதிப்பெண்களின் இதுவும் ஒன்றாகும்.
ஃப்ரன்டல் இம்பாக்ட்
64 கிமீ/மணி வேகத்தில் நடத்தப்பட்ட ஃப்ரன்டல் இம்பாக்ட் சோதனையில் முன் சீட்களில் வயது வந்தவர்களுக்கான 16 புள்ளிகளில் 14.26 மதிப்பெண்களை நெக்ஸான் EV பெற்றது. நெக்ஸான் EV ஆனது டிரைவர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும், டிரைவரின் மார்புக்கான பாதுகாப்பு போதுமானதாக மதிப்பிடப்பட்டது, அதே நேரத்தில் பயணிகளின் மார்புப் பாதுகாப்பு 'நல்லது' என மதிப்பிடப்பட்டது. டிரைவர் மற்றும் பயணிகளின் தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதிகளுக்கான பாதுகாப்பு நன்றாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது, அதேசமயம் இந்த விபத்துச் சோதனையில் பயணிகளின் முழங்கால்கள் போதுமான பாதுகாப்பை பெற்றன.
சைடு இம்பாக்ட்
சைட் இம்பாக்ட் சோதனையின் போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் சிதைக்கக்கூடிய தடைக்கு எதிராக நெக்ஸான் EV டிரைவருக்கு தலை, வயிறு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும் மார்புக்கான பாதுகாப்பு 'போதுமானதாக' மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைட் போல் இம்பாக்ட்
சைட் போல் இம்பாக்ட் சோதனையின் முடிவுகள் சைட் இம்பாக்ட் சோதனையைப் போலவே இருந்தன, இருப்பினும் மற்ற உடல் உறுப்புகளைப் போலவே, மார்புப் பகுதியும் இப்போது 'நல்ல' பாதுகாப்பைப் பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் பார்க்க: பாரத் NCAP க்ராஷ் டெஸ்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Punch EV
குழந்தைப் பயணிகளுக்கான பாதுகாப்பு
49-க்கு 44.95 புள்ளிகளைப் பெற்றுள்ளது
நெக்ஸான் EV ஆனது சைல்ட் ஆக்குப்பன்ட் புரொடக்ஷ்ன் (COP) சோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்டது, இந்த மதிப்பீடுகளிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. டாடா EV-இல், குழந்தை சீட்கள் பின்புறத்தை பார்த்தவாறு நிறுவப்பட்டுள்ளன. அதைப் பற்றிய விவரங்கள் இதோ:
அளவுரு |
ஸ்கோர் |
டைனமிக் |
23.95/24 |
CRS இன்ஸ்டலேஷன் |
12/12 |
வெஹிகிள் அஸ்ஸெஸ்மெண்ட் |
9/13 |
18 மாதக் குழந்தை
18 மாத குழந்தைக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்காக சோதிக்கப்பட்ட போது, நெக்ஸான் EV ஆனது 12-க்கு 11.95 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
3 வயதுக் குழந்தை
3 வயது குழந்தைக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்க்காக எலக்ட்ரிக் எஸ்யூவி 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. GNCAP அறிக்கையைப் போலல்லாமல், BNCAP ஆவணங்கள் குழந்தைக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவலை வழங்கவில்லை, குறிப்பாக தலை, மார்பு மற்றும் கழுத்துக்கான பாதுகாப்பிற்காக அதிக விவரங்களை வழங்கவில்லை.
மேலும் படிக்க: உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது
நெக்ஸான் EV-யின் பாதுகாப்பு வசதிகள்
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பிரேக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களை நெக்ஸான் EV-யில் தரமாக ரியர் பார்க்கிங் சென்சார்களுடன் டாடா வழங்கியுள்ளது. 360 டிகிரி கேமரா, ரியர் டிஸ்க் பிரேக், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சர் மற்றும் டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற அம்சங்களும் இதன் டாப் வேரியன்ட்களில் வழங்கப்பட்டுள்ளன.
பல புதிய கார் மதிப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது மின்னணு பாதுகாப்பு அம்சங்களின் முடிவுகள் மற்றும் செயல்திறனை விளக்குவதில் BNCAP அறிக்கைகள் விரிவாக இல்லை. எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது ESC உடன் தரநிலையாக வருகிறது மற்றும் AIS-100-இன் படி பாதசாரி பாதுகாப்பை பட்டியலிடுகிறது என்று கூறினாலும், இந்த சோதனைகளில் எஸ்யூவி-யின் செயல்திறன் பற்றிய கூடுதல் விவரங்களை இது வழங்கவில்லை.
நெக்ஸான் EV-யின் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் EV-யின் விலை ரூ.14.49 லட்சம் முதல் ரூ.19.49 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) உள்ளது. இது இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்குகிறது: 30 கிலோவாட் மற்றும் 40.5 கிலோவாட், ஒவ்வொன்றும் சிங்கில்-மோட்டார் அமைப்பு மற்றும் தனித்துவமான செயல்திறன் மதிப்பீடுகளுடன் வருகிறது. ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV போன்ற மாடல்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மாற்றாக இருந்தாலும், அதன் ஒரே நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV400 உள்ளது.
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful