Tata Tiago, Tiago EV மற்றும் Tigor கார்களின் வசதிகள், விலை, வேரியன்ட் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன
டாடா டியாகோ க்காக ஜனவரி 09, 2025 10:37 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட் மூலமாக 3 என்ட்ரி-லெவல் டாடா கார்களும் ஒரு பெரிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன், புதிய டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் புதிய வேரியன்ட்களை பெறுகின்றன.
புதிய ஆண்டு வந்து விட்ட நிலையில் கார் தயாரிப்பாளர்கள் தற்போது விற்பனையில் உள்ள மாடல்களை அப்டேட் செய்ய தொடங்கியுள்ளனர். ஹூண்டாய் சமீபத்தில் அதன் சில கார்களை அப்டேட் செய்தது. இப்போது டாடா நிறுவனம் டாடா டியாகோ, டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் ஆகிய கார்களுக்கு மாடல் இயர் அப்டேட்டை கொடுத்துள்ளது. இந்த அப்டேட்களால் இத்க கார்களில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கார்களின் விலையிலும் மாற்றம் உள்ளது. இந்த அப்டேட்டை பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்:
டாடா டியாகோ
டாடா டியாகோ காரில் சில வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் இங்கே:
-
LED ஹெட்லைட்கள்
-
ஷார்க் ஃபின் ஆண்டெனா
-
ஃபிரீ ஸ்டாண்ட்டிங் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
-
புதுப்பிக்கப்பட்ட டிரைவர்ஸ் டிஸ்பிளே
-
இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங்
-
பின்புற பார்க்கிங் கேமரா
-
புதிய ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி
-
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
மேலும் டாடா டியாகோ -வின் விலை மற்றும் வேரியன்ட் பட்டியலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
XE |
ரூ.5 லட்சம் |
ரூ.5 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XM |
ரூ.5.70 லட்சம் |
ரூ.5.70 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XTO |
ரூ.5.85 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XT |
ரூ.6 லட்சம் |
ரூ.6.30 லட்சம் |
ரூ.30,000 |
XT ரிதம் |
ரூ.6.40 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XT NRG |
ரூ.6.50 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XZ |
இல்லை |
ரூ.6.90 லட்சம் |
புதிய வேரியன்ட் |
XZ NRG |
ரூ.7 லட்சம் |
ரூ.7.20 லட்சம் |
ரூ.20,000 |
XZ பிளஸ் |
ரூ.7 லட்சம் |
ரூ.7.30 லட்சம் |
ரூ.30,000 |
XZO பிளஸ் |
ரூ.6.80 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
AMT வேரியன்ட்களின் புதிய விலை விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. சில மிட்-ஸ்பெக் மற்றும் ஹையர்-ஸ்பெக் டியாகோ வேரியன்ட்கள் ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதே சமயம் அடிப்படை-ஸ்பெக் வேரியன்ட்களின் விலையில் மாற்றமில்லை. சில மிட்-ஸ்பெக் மற்றும் ஃபுல்லி லோடட் XZO பிளஸ் வேரியன்ட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
டியாகோவின் சிஎன்ஜி வேரியன்ட்களின் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
சிஎன்ஜி வாகனங்கள் |
ரூ.6 லட்சம் |
ரூ.6 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XM சிஎன்ஜி |
ரூ.6.70 லட்சம் |
ரூ.6.70 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XT CNG |
ரூ.7 லட்சம் |
ரூ.7.30 லட்சம் |
ரூ.30,000 |
XT ரிதம் CNG |
ரூ.7.40 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XT NRG CNG |
ரூ.7.50 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XZ CNG |
இல்லை |
ரூ.7.90 லட்சம் |
புதிய வேரியன்ட் |
XZ பிளஸ் CNG |
ரூ.8 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XZ NRG CNG |
ரூ.8 லட்சம் |
ரூ.8.20 லட்சம் |
ரூ.20,000 |
வழக்கமான பெட்ரோலில் இயங்கும் டியாகோவை போலவே என்ட்ரில் லெவல் வேரியன்ட்களின் விலையில் மாற்றமில்லை, அதே சமயம் மிட்-ஸ்பெக் XT CNG மற்றும் டாப்-ஸ்பெக் XZ NRG CNG ஆகியவை ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. சில மிட்-ஸ்பெக் மற்றும் உயர்-ஸ்பெக் வேரியன்ட் நிறுத்தப்பட்டாலும் கூட புதிய மிட்-ஸ்பெக் XZ CNG வேரியன்ட் வரிசையில் சேர்க்கப்பட்டது. வழக்கமான டியாகோவை போலவே வசதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
டாடா டியாகோ EV
டியாகோ -ன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பைப் போலவே டாடா டியாகோ EV -விலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. விவரங்கள் இங்கே:
-
LED ஹெட்லைட்கள்
-
புதிய வடிவிலான கிரில்
-
புதிய 14-இன்ச் ஏரோடைனமிகலாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள்
-
முன் கதவுகளில் EV பேட்ஜ்
-
ஷார்க் ஃபின் ஆண்டெனா
-
ஃபிரீ ஸ்டாண்ட்டிங் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
-
புதுப்பிக்கப்பட்ட டிரைவர்ஸ் டிஸ்பிளே
-
இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங்
-
புதிய பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம்
-
HD பின்புற பார்க்கிங் கேமரா
-
புதிய ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி
-
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
டியாகோ ஹேட்ச்பேக்கின் எலக்ட்ரிக் பதிப்பின் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
XE MR |
ரூ.8 லட்சம் |
ரூ.8 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XT MR |
ரூ.9 லட்சம் |
ரூ.9 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
XT LR |
ரூ.10 லட்சம் |
ரூ.10.14 லட்சம் |
ரூ.14,000 |
XZ பிளஸ் |
ரூ.10.49 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XZ பிளஸ் டெக் Lux LR |
ரூ.11 லட்சம் |
ரூ.11.14 லட்சம் |
ரூ.14,000 |
என்ட்ரி லெவல் வேரியன்ட்கள் முன்பு இருந்த அதே விலையில் உள்ளன. அதே நேரத்தில் மிட்-ஸ்பெக் XT LR மற்றும் டாப்-ஸ்பெக் XZ பிளஸ் டெக் லக்ஸ் LR ஆகியவற்றின் விலை ரூ.14,000 உயர்த்தப்பட்டுள்ளது. மாடல் ஆண்டு அப்டேட் உடன் ஹையர்-ஸ்பெக் XZ பிளஸ் வேரியன்ட் நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் படிக்க: MY25 அப்டேட்டாக புதிய வசதிகள் மற்றும் வேரியன்ட்களை பெறும் Grand i10 Nios, Venue, மற்றும் Verna கார்கள்
டாடா டிகோர்
டாடா டிகோர் இந்த அப்டேட் உடன் கிடைக்கும் வசதிகளின் விவரங்கள் இங்கே:
-
LED ஹெட்லைட்கள்
-
ஷார்க் ஃபின் ஆண்டெனா
-
360 டிகிரி கேமரா
-
ஃபிரீ ஸ்டாண்ட்டிங் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன்
-
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே
-
புதுப்பிக்கப்பட்ட டிரைவர்ஸ் டிஸ்பிளே
-
இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங்
-
HD பின்புற பார்க்கிங் கேமரா
-
புதிய ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி
-
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)
விலை உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் வேரியன்ட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
கார் |
ரூ.6 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XM |
ரூ.6.60 லட்சம் |
ரூ.6 லட்சம் |
(- ரூ.60,000) |
XT |
– |
ரூ.6.70 லட்சம் |
புதிய வேரியன்ட் |
XZ |
ரூ.7.10 லட்சம் |
ரூ.7.30 லட்சம் |
+ ரூ.20,000 |
XZ பிளஸ் |
ரூ.7.80 லட்சம் |
ரூ.7.90 லட்சம் |
+ ரூ.10,000 |
XZ பிளஸ் லக்ஸ் |
– |
8.50 லட்சம் |
புதிய வேரியன்ட் |
ரூ.6 லட்சம் விலை உள்ள பேஸ்-ஸ்பெக் எக்ஸ்இ வேரியன்ட் நிறுத்தப்பட்ட நிலையில் ஒரு ஓவர் பேஸ் XT வேரியன்ட்டின் விலை ரூ.60,000 குறைக்கப்பட்டு இப்போது ரூ.6 லட்சமாக உள்ளது. அதாவது டிகோரின் என்ட்ரில் வெலல் வேரியன்ட் ஆகியவற்றின் விலை அப்படியே உள்ளது. முன்பை விட கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கலாம். டிகோர் புதிதாக ஃபுல்லி லோடட் XZ பிளஸ் லக்ஸ் வேரியன்ட் உடன் வருகிறது. இது முந்தைய டாப்-ஸ்பெக் XZ பிளஸ் டிரிம்களை விட ரூ.70,000 அதிக விலை உள்ளது.
இதே வசதிகள் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் விலை விவரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
XM சிஎன்ஜி |
ரூ.7.60 லட்சம் |
நிறுத்தப்பட்டது |
– |
XT CNG |
– |
ரூ.7.70 லட்சம் |
புதிய வேரியன்ட் |
XZ CNG |
ரூ.8.10 லட்சம் |
ரூ.8.30 லட்சம் |
ரூ.20,000 |
XZ பிளஸ் CNG |
ரூ.8.80 லட்சம் |
ரூ.8.90 லட்சம் |
ரூ.10,000 |
XZ பிளஸ் லக்ஸ் CNG |
– |
ரூ.9.50 லட்சம் |
புதிய வேரியன்ட் |
டிகோர் காரில் CNG பவர்டிரெய்னுக்கான ஆப்ஷன் ரூ. 10,000 ஆக உயர்ந்துள்ளது. ஏனெனில் முந்தைய XM CNG வேரியன்ட் புதிய XT CNG டிரிம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. மற்ற வேரியன்ட்களின் விலை விவரங்கள் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புதிய டாப்-ஸ்பெக் XZ பிளஸ் லக்ஸ் CNG வேரியண்ட் வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV -யில் உள்ள பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மாடல்-ஆண்டு புதுப்பித்தலுக்குப் பிறகு மாறவில்லை. டியாகோ மற்றும் டிகோர் -ன் ICE பதிப்பின் விவரங்கள் பின்வருமாறு:
டாடா டியாகோ மற்றும் டிகோர் |
||
இன்ஜின் |
1.2-லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2 லிட்டர் பெட்ரோல்+CNG |
பவர் |
86 PS |
73.5 PS |
டார்க் |
113 Nm |
95 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT* |
*AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்
டாடா டியாகோ EV -யின் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
19.2 kWh |
24 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
61 PS |
75 PS |
டார்க் |
110 Nm |
114 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC 1+2) |
221 கி.மீ |
275 கி.மீ |
டாடா டியாகோ ஆனது மாருதி செலிரியோ, மாருதி வேகன் ஆர், மற்றும் சிட்ரோயன் சி3 உடனும் டாடா டியாகோ EV ஆனது சிட்ரோன் eC3 மற்றும் எம்ஜி காமெட் இவி ஆகியவற்றுடனும் போட்டியிடுகிறது. மறுபுறம் டிகோர் ஹோண்டா அமேஸ், மாருதி டிசையர் மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.