• English
  • Login / Register

Tata Punch EV Smart Plus மற்றும் Tata Tiago EV XZ Plus Tech Lux லாங் ரேஞ்ச்: எந்த EV -யை வாங்குவது சரியானதாக இருக்கும்?

published on பிப்ரவரி 22, 2024 06:24 pm by shreyash for டாடா பன்ச் EV

  • 24 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஒப்பீட்டளவில் இரண்டு EV -களும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்கையே கொண்டுள்ளன.

டாடா சமீபத்தில் அதன் இரண்டு சிறந்த விற்பனையான மின்சார கார்களின் விலையை குறைத்தது, அவற்றில் ஒன்று டாடா டியாகோ EV. விலை குறைக்கப்பட்டதால் , டியாகோ EV -யின் XZ பிளஸ் லக்ஸ் லாங்-ரேஞ்ச் (LR) டிரிம் இப்போது டாடா பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் மீடியம் ரேஞ்ச் (MR) வேரியன்ட் -டின் விலைக்கு நெருக்கமாக உள்ளது. டாடாவின் கூற்றுப்படி, பேட்டரி பேக் விலை குறைக்கப்பட்டதன் விளைவாக விலை குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் ஏற்கனவே பன்ச் EV -யை அறிமுகப்படுத்தும் போது குறைக்கப்பட்ட பேட்டரி பேக் செலவில் அதை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற விலை -யில் மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

டாடா டியாகோ EV XZ பிளஸ் டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச் வேரியன்ட் உடன் ஒப்பிடும் போது பன்ச் EV -ன் ஒன்-அபோவ்-பேஸ் ஸ்மார்ட் பிளஸ் வேரியன்ட்டின் விவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம். விவரங்களை பார்க்கும் முன், இந்த EV -களின் விலையை தெரிந்து கொள்வோம்.

விலை

டாடா பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் (மீடியம் ரேஞ்ச்)

டாடா டியாகோ EV XZ பிளஸ் டெக் லக்ஸ் (லாங் ரேஞ்ச்)

ரூ.11.49 லட்சம்

ரூ.11.39 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

சமீபத்தில் ரூ.15,000 விலை குறைக்கப்பட்டதால் தொடர்ந்து, டாடா டியாகோ EV XZ Plus Lux லாங் ரேஞ்ச் வேரியன்ட்டின் விலை இப்போது பன்ச் EV -யின் ஒன்-அபோவ்-பேஸ் Smart Plus வேரியன்ட்டை விட ரூ.10,000 குறைவாக உள்ளது.

அளவீடுகள்

 

டாடா பன்ச் EV

டாடா டியாகோ EV

நீளம்

3857 மி.மீ

3769 மி.மீ

அகலம்

1742 மி.மீ

1677 மி.மீ

உயரம்

1633 மி.மீ

1536 மி.மீ

வீல்பேஸ்

2445 மி.மீ

2400 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

190 மி.மீ

165 மி.மீ

பூட் ஸ்பேஸ்

366 லிட்டர்

240 லிட்டர்

  • மைக்ரோ எஸ்யூவி -யாக, டாடா பன்ச், டாடா டியாகோ இவி -யை விட நீளமாகவும், அகலமாகவும், உயரமாகவும் இருக்கிறது.

  • பன்ச் EV ஆனது டியாகோ EV -யை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் பைகளுக்கு இடமளிக்கும் வேரியன்ட்யில் பெரிய பூட் (+126 லிட்டர்) கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: Tata Nexon EV கிரியேட்டிவ் பிளஸ் மற்றும் Tata Punch EV எம்பவர்டு பிளஸ்: எந்த EV -யை வாங்குவது நல்லது ?

பவர்டிரெயின்கள்

விவரக்குறிப்புகள்

டாடா பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் மீடியம் ரேஞ்ச்

டாடா டியாகோ EV XZ பிளஸ் டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச்

பேட்டரி பேக்

25 kWh

24 kWh

பவர்

82 PS

75 PS

டார்க்

114 Nm

114 Nm

கிளைம் செய்யப்பட்டுள்ள (MIDC)

315 கி.மீ

315 கி.மீ

  • இங்குள்ள இரண்டு EV -களும் ஏறக்குறைய ஒரே அளவிலான பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளன, அவை 315 கிமீ வரை கிளைம் செய்யப்ட்டுள்ள ரேஞ்சை கொண்டுள்ளன.

  • இந்த இரண்டு EV  வேரியன்ட்களின் டார்க் அவுட்புட் ஒரே மாதிரியாக இருந்தாலும் டியாகோ LR -யை விட பன்ச் EV MR ஆனது அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது.

சார்ஜிங் விவரங்கள்

Tata Punch EV Charging Flap

சார்ஜர்

சார்ஜிங் நேரம்

டாடா பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் மீடியம் ரேஞ்ச்

Tata Tiago EV XZ பிளஸ் டெக் லக்ஸ் நீண்ட தூரம்

3.3 kW AC சார்ஜர் (10-100 சதவீதம்)

9.4 மணிநேரம்

8.7 மணிநேரம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80 சதவீதம்)

56 நிமிடங்கள்

58 நிமிடங்கள்

  • இங்குள்ள இரண்டு EV -க்களும் ஒரே மாதிரியான பேட்டரி பேக்குகளை கொண்டிருந்தாலும், அவற்றின் திறன்களில் வெறும் 1 kWh வித்தியாசம் உள்ளது, இரண்டு EVகளின் சார்ஜிங் நேரத்தில் இது மிகவும் தெளிவாக தெரிகிறது.

  • இரண்டு EV -களும் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன, மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

  • பன்ச் EV -யின் மீடியம் அளவிலான வேரியன்ட்களுடன் 7.2 KW AC சார்ஜரின் ஆப்ஷனை டாடா வழங்கவில்லை. இருப்பினும், டியாகோ EV நீண்ட தூர வேரியன்ட்டை இந்த சார்ஜருடன் கூடுதலாக ரூ. 50,000 -க்கு பெறலாம்.

அம்சங்கள்

அம்சங்கள்

டாடா பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் மீடியம் ரேஞ்ச்

டாடா டியாகோ EV XZ பிளஸ் டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச்

எக்ஸ்ட்டீரியர்

  • LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள்

  • பெரிய கவர் கொண்ட 15-இன்ச் ஸ்டீல் சக்கரங்கள்

  • LED DRL -களுடன் கூடிய ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • ஃபாக் லைட்ஸ்

  • பகட்டான கவர்கள் கொண்ட 14 இன்ச் ஸ்டீல் வீல்கள்

இன்ட்டீயர்

  • டூயல்-டோன் கருப்பு & சாம்பல் டாஷ்போர்டு

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • சரிசெய்யக்கூடிய முன் மற்றும் பின்புற ஹெட்ரெஸ்ட்கள்

  • டூயல்-டோன் பிளாக் & கிரே டாஷ்போர்டு

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • சரிசெய்யக்கூடிய முன் ஹெட்ரெஸ்ட்கள்

ஆறுதல் & வசதி

  • டச் கன்ட்ரோல்களுடன் ஆட்டோமெட்டிக் ஏசி

  • ஏர் ஃபியூரிபையர் 

  • ரீஜெனரேஷன் பிரேக்கிங் மோட்களுக்கான பேடில் ஷிஃப்டர்

  • ஆல் ஃபோர் பவர் விண்டோஸ் 

  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி & ஸ்போர்ட்)

  • டே/நைட் ஐஆர்விஎம்

  • குளிரூட்டப்பட்ட கையுறை

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • ஆல் ஃபோர் பவர் விண்டோஸ் 

  • மல்டிமோட் ரீஜெனரேஷன் பிரேக்கிங்

  • டிரைவிங் மோட்கள் (சிட்டி & ஸ்போர்ட்)

  • ஸ்டீயரிங்கில் கொடுக்கப்பட்டுள்ள கன்ட்ரோல்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஆட்டோ ஹெட்லைட்கள்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

  • பின்புற & டிஃபோகர்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ஆட்டோமெட்டிக் ORVMS

  • கூல்டு க்ளோவ்பாக்ஸ் 

இன்ஃபோடெயின்மென்ட்

  • 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் 

  • 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • செமி டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே

  • 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

  • ஹில் ஹோல்ட் அசிஸ்ட்

  • EBD உடன் ABS

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் 

  • பின்புற பார்க்கிங் கேமரா

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • டூயல் முன்பக்க ஏர்பேக்குகள்

  • EBD உடன் ABS

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • பின்புற பார்க்கிங் கேமரா

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • பன்ச் EV ஸ்மார்ட் பிளஸ் 1-மேலே-அடிப்படை வேரியன்ட் என்றாலும், LED டிஆர்எல்கள், ஆட்டோ ஏசி மற்றும் 6 ஏர்பேக்குகள் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள் போன்ற அம்சங்களுடன் வருகின்றது.

  • டாடா டியாகோ EV -யின் XZ பிளஸ் லக்ஸ் டிரிம் முன் ஃபாக் லைட்ஸ், ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், 8-சவுண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பின்புற வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் பின்புற டிஃபோகர் போன்ற கூடுதல் அம்சங்களுடன் வருகிறது. .

  • பன்ச் EV மற்றும் டியாகோ EV இரண்டும் 7-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்புடன் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட், ஆட்டோமெட்டிக் AC, கூல்டு க்ளோவ்பாக்ஸ், நான்கு பவர் விண்டோஸ் மற்றும் மல்டிமோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவற்றை பெறுகின்றன.

  • லோவர்-ஸ்பெக் மாடலாக இருந்தாலும், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்ற சில கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை டியாகோ EV -யை விட பன்ச் EV கொண்டுள்ளது. ஒப்பிடுகையில் டியாகோ EV ஆனது இரண்டு முன் ஏர்பேக்குகளை மட்டுமே பெறுகிறது.

மேலும் பார்க்க: மீண்டும் வருகின்றது Tata Nexon Facelift டார்க் எடிஷன்… வேரியன்ட்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன

நீங்கள் வசதியான அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்தால், டியாகோ EV ஒரு பொருத்தமான தேர்வாகும் மற்றும் கொடுக்கும் பணத்துக்கு அதிக மதிப்பை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் இடம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்தால், பன்ச் EV உங்களுக்கான சிறந்த தேர்வாகும்.

எனவே, இந்த இரண்டு எலக்ட்ரிக் கார்களில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள், ஏன்? உங்கள் எண்ணங்களை கமெண்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க:  பன்ச் EV ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Tata பன்ச் EV

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வாய்வே மொபிலிட்டி eva
    வாய்வே மொபிலிட்டி eva
    Rs.7 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience