• English
  • Login / Register

Tata Nexon EV கிரியேட்டிவ் பிளஸ் மற்றும் Tata Punch EV எம்பவர்டு பிளஸ்: எந்த EV -யை வாங்குவது நல்லது ?

published on பிப்ரவரி 21, 2024 05:02 pm by shreyash for டாடா நெக்ஸன் இவி

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில், சிறிய டாடா பன்ச் EV -யானது டாடா நெக்ஸான் EV -யை விட கூடுதலான தொழில்நுட்ப வசதிகளையும், ரேஞ்சையும் கொண்டுள்ளது.

Tata Nexon EV vs Tata Punch EV

சமீபத்தில் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து, டாடா நெக்ஸான் EV -யின் விலை தற்போது ரூ.14.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் ரூ.1.2 லட்சம் வரை குறைவாக உள்ளது. டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் லாங் ரேஞ்ச் வேரியன்ட் டாப்-ஸ்பெக்கிற்கான எக்ஸ்-ஷோரூம் விலையும் குறைந்துள்ளது. பேட்டரியின் விலை குறைக்கப்பட்டதன் மூலமாக கிடைத்த பலன்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது. மறுபுறம், 2024 ஜனவரியில்  பன்ச் EV -க்கு, அறிமுகப்படுத்தப்பட்டபோதே பேட்டரி பேக் செலவு குறைக்கப்பட்டதால் கிடைத்த பலனை கொடுத்துள்ளதாக டாடா குறிப்பிட்டுள்ளது.

என்ட்ரி-லெவல் நெக்ஸான் EV, அவற்றின் விவரங்களில் தொடங்கி, பேப்பரில் உள்ள பன்ச் EV -யின் டாப் வேரியன்ட்டுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

அளவீடுகள்

 

டாடா நெக்ஸான் EV

டாடா பன்ச் EV

நீளம்

3994 மி.மீ

3857 மி.மீ

அகலம்

1811 மி.மீ

1742 மி.மீ

உயரம்

1616 மி.மீ

1633 மி.மீ

வீல்பேஸ்

2498 மி.மீ

2445 மி.மீ

கிரவுண்ட் கிளியரன்ஸ்

205 மிமீ வரை (நடுத்தர வரம்பு)

190 மி.மீ

பூட் ஸ்பேஸ்

350 லிட்டர்

366 லிட்டர்

  • டாடா நெக்ஸான் EV அனைத்து அம்சங்களிலும் பன்ச் EV ஐ விட பெரியது.

  • ஆச்சரியப்படும் விதமாக, டாடா நிறுவனம் நெக்ஸான் EV -யை விட டாடா பன்ச் EV அதிக பூட் இடத்தை கொண்டிருப்பதாக கூறுகிறது. மற்றொரு 14 லிட்டர் பொருட்களுக்கான முன்பக்க ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஹையர் எம்பவர்டு பிளஸ் எஸ் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது, இதன் விலை ரூ.50,000 கூடுதலாக உள்ளது.

Tata Nexon EV

  • நெக்ஸான் EV -க்கு மேலே குறிப்பிட்டுள்ள கிரவுண்ட் கிளியரன்ஸ் அதன் மீடியம்-ரேஞ்ச் வேரியன்ட்டிற்கானது. இருப்பினும், நெக்ஸான் EV -யின் லாங் ரேஞ்ச் பதிப்பை நீங்கள் தேர்வுசெய்தால், அது 190 மிமீ வரை குறைகிறது.

பவர்டிரெய்ன்

விவரங்கள்

டாடா நெக்ஸான் EV கிரியேட்டிவ் பிளஸ் நடுத்தர வரம்பு

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் லாங் ரேஞ்ச்

பேட்டரி பேக்

30 kWh

35 kWh

சக்தி

129 PS

122 PS

டார்க்

215 Nm

190 Nm

கிளைம்டு ரேஞ்ச்

325 கி.மீ

421 கி.மீ

  • இந்த விலையில், என்ட்ரி லெவல் நெக்ஸான் EV உடன் ஒப்பிடும் போது, டாடா பன்ச் EV ஆனது 35 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, இதன் மூலம் நெக்ஸான் EV -யில் கூடுதலாக 96 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.

  • இருப்பினும், டாடா நெக்ஸான் EV இன்னும் கூடுதலான பவர் மற்றும் டார்க்கை வழங்குகிறது.

சார்ஜிங் நேரம்

சார்ஜர்

சார்ஜிங் நேரம்

டாடா நெக்ஸான் EV கிரியேட்டிவ் பிளஸ் மீடியம் ரேஞ்ச்

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் லாங் ரேஞ்ச்

3.3 kW AC சார்ஜர் (10-100%)

10.5 மணி நேரம்

13.5 மணி நேரம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80%)

56 நிமிடங்கள்

56 நிமிடங்கள்

  • 3.3 kW AC சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது, நெக்ஸான் EV ஆனது பன்ச் EV உடன் ஒப்பிடும்போது அதன் சிறிய பேட்டரி பேக் காரணமாக குறைந்த சார்ஜிங் நேரத்தையே கொண்டுள்ளது.

  • வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.50,000 செலுத்தினால், பன்ச் EV -க்கான சார்ஜிங் நேரத்தை வெறும் 5 மணிநேரமாக குறைக்க 7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜரை பெறலாம்.

  • இரண்டு EV -களும் 56 நிமிடங்களுக்கு சமமான சார்ஜிங் நேரங்களுடன் 50 kW DC சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன.

வசதிகள்

வசதிகள்

டாடா நெக்ஸான் EV கிரியேட்டிவ் பிளஸ்

டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் 

வெளிப்புறம்

  • LED DRL -களுடன் LED ஹெட்லைட்கள்

  • LED டெயில் லாம்ப்கள்

  • 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் LED DRLகள்

  • கார்னரிங் செயல்பாடு கொண்ட முன் LED ஃபாக் லேம்ப்ஸ்

  • தொடர்ச்சியான முன் பக்க இண்டிகேட்டர்கள்

  • DRLகளுடன் வெல்கம் & குட்பை அனிமேஷன்

  • DRLகளில் ஸ்மார்ட் சார்ஜிங் இண்டிகேட்டர்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • ரூஃப் ரெயில்ஸ்

உட்புறம்

  • டூயல் டோன் கேபின்

  • ஆல் பிளாக் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • முன் மற்றும் பின்புற சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள்

  • டூயல்-டோன் பிளாக் & சாம்பல் கேபின்

  • லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான முன் மற்றும் பின்புற ஹெட்ரெஸ்ட்கள்

  • முன் & பின் ஆர்ம்ரெஸ்ட்

  • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

கம்ஃபோர்ட் & வசதி

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • ஆல் ஃபோர் பவர் விண்டோஸ்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVMகள்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • மல்டி டிரைவ் முறைகள் - இகோ, சிட்டி & ஸ்போர்ட்

  • ரீஜெனரேஜன் பிரேக்கிங் மோட்களுக்கான பேடில் ஷிஃப்டர்

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • வெண்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ் 

  • ஆல் ஃபோர் பவர் விண்டோஸ்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • மல்டி டிரைவ் மோட்கள்

  • (சிட்டி/ஸ்போர்ட்/இகோ)

  • ரீஜெனரேஜன் பிரேக்கிங் மோட்களுக்கான பேடில் ஷிஃப்டர்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஆட்டோ ஃபோல்டபிள் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVMகள்

  • ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள்

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள்

  • ஆட்டோ டிம்மிங் IRVM

  • பின்புற வைப்பர் மற்றும் ஆட்டோ டிஃபோகர்

  • புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • ஏர் ஃபியூரிபையர் 

இன்ஃபோடெயின்மென்ட்

  • 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்கள்

  • டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே

  • Arcade.EV ஆப்ஸ் தொகுப்பு

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட்

  • ABS உடன் EBD

  • சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • 6 ஏர்பேக்ஸ்

  • வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட்

  • ABS உடன் EBD

  • பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷனுடன் 360 டிகிரி கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

Tata Punch EV Interior

  • அதே விலையில் ரூ.14.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), டாடா நெக்ஸான் EV -யை விட டாடா பன்ச் EV அதிக அம்சங்களை வழங்குகிறது.

  • வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்கள் மற்றும் 16-இன்ச் அலாய்கள் மற்றும் ரூஃப் ரெயில்களுடன் கூடிய ஆல் LED லைட்களுடன் இந்த விலையில் பன்ச் EV இரண்டின் சிறந்த காராக இருக்கின்றது

  • இருப்பினும், நெக்ஸான் EV கிரியேட்டிவ் பிளஸ் மிட் ரேஞ்ச் வேரியன்ட் இன்னும் LED DRL -கள் மற்றும் LED டெயில்லேம்ப்களுடன் LED ஹெட்லைட்களை பெறுகிறது. அந்த 16-இன்ச் ஸ்டீலிகள் ஸ்டைலான வீல் கவர்களை பெறுகின்றன, அவை வழக்கமான பேஸ்-ஸ்பெக் வீல்களை விட சிறப்பாக தோன்றுகின்றன.

  • உள்ளே, டாடா பன்ச் EV எம்பவர்டு பிளஸ் வேரியன்ட் ஒரு பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்பை பெறுவது மட்டுமல்லாமல், இது ஒரு பெரிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது, அதேசமயம் நெக்ஸான் EV இரண்டிற்கும் 7-இன்ச் ஸ்கிரீன்களை பெறுகிறது. கூடுதலாக, பன்ச் EV -ன் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைந்து ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வழியாக மேப் நேவிகேஷனை பார்க்கலாம்.

  • பேஸ்-ஸ்பெக் நெக்ஸான் EV -யானது வென்டிலேட்டட் முன் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் போன்ற அம்சங்கள் கிடையாது, இவை அனைத்தும் டாடா பன்ச் EV -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டுடன் கிடைக்கின்றன.

  • பாதுகாப்பிற்கு வரும்போது, நெக்ஸான் EV ஆனது 6 ஏர்பேக்குகள், சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது. ஆனால் பன்ச் EV -யின் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)  ஆகியவை உள்ளன.

மேலும் பார்க்க: Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது

இறுதி தீர்ப்பு

தெளிவாக, டாடா பன்ச் EV -ன் டாப்-ஸ்பெக் எம்பவர்டு பிளஸ் டிரிம், டாடா நெக்ஸான் EV இன் பேஸ்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்டை காட்டிலும், அதே விலையில் பல அம்சங்களையும் அதிக டிரைவிங் ரேஞ்சையும் வழங்குகிறது. இருப்பினும், நெக்ஸான் EV ஆனது சாலையில் பெரிய தோற்றம் மற்றும் அதிக விசாலமான கேபினை வழங்குகிறது, அதன் பெரிய அளவு காரணமாக இது ஒரு குடும்பத்துக்கு ஏற்ற காராக இருக்கின்றது.

அளவு மற்றும் உட்புற இடவசதியில் நீங்கள் சமரசம் செய்யத் தயாராக இருந்தால், டாடா பன்ச் EV ஆனது பேஸ்-ஸ்பெக் டாடா நெக்ஸான் EV -யை விட பணத்திற்கு அதிக மதிப்பை வழங்குகிறது. ஒரே விலையில் இருந்தாலும் இரண்டில் எந்த EV -யை தேர்வு செய்வீர்கள், அதற்கான காரணம் என்ன ? கமெண்ட்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நெக்ஸன் இவி

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience