• English
    • Login / Register

    விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லை கடந்தது டாடா பன்ச்

    டாடா பன்ச் க்காக ஜனவரி 22, 2025 07:44 pm அன்று yashika ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 116 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடா பன்ச், பணத்துக்கான மதிப்பு மற்றும் எலக்ட்ரிக் ஆப்ஷனை உள்ளடக்கிய மல்டி பவர் ட்ரெயின்கள் காரணமாக தொடர்ந்து மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

    Crosses 5 lakh sales

    • டாடா பன்ச் ICE ஆனது பியூர், அட்வென்ச்சர், அக்கம்பிளிஸ்டு மற்றும் கிரியேட்டிவ் 4 வேரியன்ட்களுடன் வருகிறது:

    • EV  வெர்ஷன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    • உற்பத்தி 5 மாதங்களுக்கு முன்பு 4 லட்சத்தை கடந்தது.

    • அதன் ICE பதிப்பு 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் 5-ஸ்பீடு MT அல்லது AMT உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது.

    • பன்ச் EV ஆனது இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது: 25kWh மற்றும் 35 kWh மற்றும் அதிகபட்சமாக MIDC கிளைம்டு 365 கி.மீ ரேஞ்ச் உடன் பெறுகிறது.

    • பன்ச் ICE விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ளது. EV ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

    டாடா பன்ச் அக்டோபர் 2021 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 5 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. 3 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டி ஒரு வருடத்துக்கு இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இது சப்-4m எஸ்யூவி -களுக்கு குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும். ஆகவே இது நிறைய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

    ஆண்டு

    விற்பனை

    அக்டோபர் 2021

    அறிமுகம்

    ஆகஸ்ட் 2022

    1 லட்சம்

    மே 2023

    2 லட்சம்

    டிசம்பர் 2023

    3 லட்சம்

    ஜூலை 2024

    4 லட்சம்

    ஜனவரி 2025

    5 லட்சம்

    டாடா பன்ச் 10 மாதங்களில் அதன் முதல் 1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது. அதன் பிறகு சுமார் 9 மாதங்களில் 2 லட்சம் யூனிட்களின் ஒட்டுமொத்த விற்பனையை எட்டியது. மே 2023 -க்கு பிறகு விற்பனை வேகம் கணிசமாக அதிகரித்தது. அதன் பிறகு வெறும் 7 மாதங்களில் மேலும் 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி டிசம்பர் 2023 -க்குள் 3 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. 7 மாதங்களில் 4 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியது. அதன் பிறகு 5 மாதங்களில் 5 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது. 

    பவர்டிரெயின்/பேட்டரி ஆப்ஷன்கள்

    Tata Punch

    டாடா பன்ச் ICE ( இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. விவரங்ள் இங்கே: 

    இன்ஜின்

    1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி

    பவர்

    88 PS

    73.5 PS

    டார்க்

    115 Nm

    103 Nm

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT*

    5-ஸ்பீடு MT

    * ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

    Tata Punch EV

    பன்ச் EV உடன் கிடைக்கும் பேட்டரி பேக்குகள் மற்றும் மோட்டார் விவரங்கள் பின்வருமாறு: 

    வேரியன்ட்

    மீடியம் ரேஞ்ச்

    லாங் ரேஞ்ச்

    பேட்டரி பேக்

    25 kWh

    35 kWh

    பவர்

    82  PS

    122 PS

    டார்க்

    114 Nm

    190 Nm

    கிளைம்டு ரேஞ்ச் (MIDC P1 + P2)

    265 கி.மீ

    365 கி.மீ

    காரில் உள்ள வசதிகள்

    Tata Punch Interior
    Tata Punch EV Interior

    பன்ச் ICE -யில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கொண்ட 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவை உள்ளன. பன்ச் -ல் உள்ள பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவையும் உள்ளன.

    பன்ச் EV பன்ச் ICE -யை விட பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. இதில் 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஏர் ஃபியூரிபையர் ஆகியவை அடங்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    பன்சின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.32 லட்சம் வரை உள்ளது. பன்ச் EV ரூ. 10 லட்சம் முதல் ரூ. 14.44 லட்சம் வரை (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி -க்கானவை).  

    பன்ச் ஆனது ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் சிட்ரோன் சி3 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. அதன் விலையை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் ஆகியவற்றின் சில வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது. இதற்கிடையில் பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 உடன் போட்டியிடுகிறது. மேலும் இது டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata பன்ச்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience