• English
  • Login / Register

MG மோட்டார் நிறுவனம் Windsor EV -இன் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் EV-களுக்கான பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகிறது

published on ஆகஸ்ட் 07, 2024 04:08 pm by shreyash for எம்ஜி இஸட்எஸ் இவி

  • 54 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த முன் முயற்சிகள் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் சமீபத்திய EV தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் EV உரிமையாளர்களுக்கு உதவும்.

சமீபத்திய நிகழ்வில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை (EV-கள்) ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த வடிவமைக்கப்பட்ட பல முன்முயற்சிகளை MG செய்து வருகிறது. இந்த முன்முயற்சிகள் EV உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் மற்றும் வளர்ந்து வரும் சவால்களைச் சமாளிப்பதுடன் புதிய EV தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வையும் மேம்படுத்துகிறது. இந்த முயற்சிகளை விரிவாக ஆராய்வோம்.

eHUB ஆப்

eHUB என்பது ஆண்ட்ராய்டு மற்றும் iOS பிளாட்ஃபார்ம்களில் கிடைக்கும் சார்ஜிங் லொக்கேட்டர் ஆப் ஆகும். MG ஆனது அதானி டோட்டல் எனர்ஜிஸ் லிமிடெட் (ATEL), பி.பீ.சி.எல், சார்ஜ்ஜோன், கிளிடா, ஹெச்.பி.சி.எல், ஜியோ-பிபீ, ஷெல், ஸ்டாடிக் மற்றும் ஜியோன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சார்ஜிங் நெட்வொர்க்கிற்கு நாடு தழுவிய ஆக்சஸ் வழங்குகிறது. இந்த ஆப் மூலம், EV உரிமையாளர்கள் சார்ஜிங் நிலையங்களைக் கண்டறியலாம், சார்ஜர் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் பயணங்களைத் திட்டமிடலாம், ஸ்லாட்டுகள் திறந்திருக்கிறதா மற்றும் சார்ஜர்கள் செயல்படுகிறதா எனச் சரிபார்த்து இடங்களை முன்பதிவு செய்து நேரடியாக eHUB மூலம் பணம் செலுத்தலாம்.

ப்ராஜெக்ட் ரிவைவ் (Project REVIVE)

ஒரு எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி பேக் என்பது எலக்ட்ரிக் காரின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படலாம். MG நிறுவனம் எல்.ஓ.எச்.யு.எம் மற்றும் எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுடன் ப்ராஜெக்ட் ரிவைவ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூரிய ஆற்றல் போன்ற பயன்பாடுகளுக்கான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளாக பேட்டரிகள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. ப்ராஜெக்ட் ரிவைவ் லித்தியம் பேட்டரி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

மேலும் பார்க்க: இனிமேல் சார்ஜிங் ஸ்டேஷன்களை தேடி அலைய வேண்டாம் ! ஆகஸ்ட் 7-ம் தேதி டாடா அறிமுகப்படுத்துகிறது புதிய ஆப்

MG-ஜியோ இன்னோவேட்டிவ் கனெக்டிவிட்டி பிளாட்ஃபார்ம் (MG-ஜியோ ஐ.சி.பி)

MG தனது புதிய இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பமான இன்னோவேட்டிவ் கனெக்டிவிட்டி புரோகிராம் (ICP) அறிமுகப்படுத்த ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த அம்சம் வரவிருக்கும் வின்ட்ஸர் EV-இல் தொடங்கி எதிர்கால MG EV-களில் கிடைக்கும். கனெக்டிவிட்டி பிளாட்ஃபார்ம் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் என்டர்டைன்மெண்டிற்கான இயக்க முறைமையாக செயல்படும். இது MG ஸ்டோரைக் கொண்டிருக்கும், வாடிக்கையாளர்கள் பல்வேறு ஓ.டி.டி ஆப்கள், கேம்கள் மற்றும் 11 வெவ்வேறு இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் ஏ.ஐ-பவர்டு வாய்ஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் போன்ற அம்சங்களை அணுக உதவுகிறது.

இவீபீடியா

இவீபீடியா என்பது எலக்ட்ரிக் கார்கள் மற்றும் அவற்றின் டெக்னாலஜிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவுத் தளமாகும். EV பற்றிய அறிவை வழங்குவதைத் தவிர இவீபீடியா மூலமாக காஸ்ட்-ஆஃப்-ஓனர்ஷிப் கால்குலேட்டர்கள், அரசாங்கக் கொள்கைகளின் களஞ்சியம் மற்றும் வெளியீடுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு போன்ற நடைமுறைக் கருவிகளை வழங்குகிறது. இன்டெராக்டிவ் டிஸ்ப்ளேகள், கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் நேரடி விளக்கங்கள் மூலம் EV டெக்னாலஜிகளை ஆராய பயனர்களுக்கு இந்த தளம் உதவுகிறது.

இந்தியாவில் MG மோட்டார் அறிமுகப்படுத்திய நான்கு முக்கிய EV முயற்சிகள் இவை. இந்த முயற்சிகள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சவால்களை சமாளிக்கவும் சமீபத்திய டெக்னாலஜிகளை பற்றி மேலும் அறியவும் உதவும் என்று MG நம்புகிறது. தற்போது ​​MG இந்தியாவில் இரண்டு எலக்ட்ரிக் கார்களை வழங்குகிறது—காமெட் EV மற்றும் ZS EV—மூன்றாவது, MG வின்ட்ஸர் EV ஆனது தற்போது தயாரிப்பில் உள்ளது.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: MG ZS EV ஆட்டோமேட்டிக்

was this article helpful ?

Write your Comment on M ஜி இஸட்எஸ் இவி

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மஹிந்திரா xev 4e
    மஹிந்திரா xev 4e
    Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி இ vitara
    மாருதி இ vitara
    Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience