2024 BYD Atto 3 மற்றும் MG ZS EV: இரண்டு கார்களின் விவரங்கள் விரிவான ஒப்பீடு
published on ஜூலை 12, 2024 03:43 pm by samarth for பிஒய்டி அட்டோ 3
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
BYD எலக்ட்ரிக் எஸ்யூவியில் தேர்வு செய்ய இரண்டு பேட்டரி பேக்ஸ் கிடைக்கும். ஆனால் ZS EV -க்கு ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே உள்ளது, ஆனால் BYD EV -யை விட மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கும்.
BYD அட்டோ 3 காரில் இப்போது புதிதாக இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே இப்போது இதன் தொடக்க விலை என்பது இப்போது குறைந்துள்ளது. விலை குறைவான வேரியன்ட் மற்றும் சிறிய 49.92 kWh பேட்டரி பேக் ஆப்ஷனை பெறுகிறது. MG ZS EV ஏற்கனவே இதே திறன் கொண்ட பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட BYD வேரியன்ட்களுக்கு மிகவும் நெருக்கமான விலையுள்ள போட்டியாளராக உள்ளது. இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -களின் விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்:
விலை
BYD அட்டோ 3 |
MG ZS EV |
|
விலை |
ரூ.24.99 லட்சம் முதல் ரூ.33.99 லட்சம் |
ரூ.18.98 லட்சம் முதல் ரூ.25.44 லட்சம் |
-
MG ZS EV குறைந்த ஆரம்ப விலையை கொண்டுள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட BYD அட்டோ 3 -ன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் ரூ.6 லட்சமாக குறைந்துள்ளது.
-
இரண்டு EV -களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் கருத்தில் கொள்ளப்பட்டாலும் MG EV-ஐ விட BYD எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை கணிசமாக அதிகமாக உள்ளது.
அளவுகள்
மாடல் |
BYD அட்டோ 3 |
MG ZS EV |
நீளம் |
4455 மி.மீ |
4323 மி.மீ |
அகலம் |
1875 மி.மீ |
1809 மி.மீ |
உயரம் |
1615 மி.மீ |
1649 மி.மீ |
வீல்பேஸ் |
2720 மி.மீ |
2585 மி.மீ |
-
அளவுகளை பொறுத்தவரை ZS EV -யை விட அட்டோ 3 132 மி.மீ நீளமும் 66 மி.மீ அகலமும் கொண்டது.
-
ZS EV கார் அட்டோ 3 -யை விட 34 மி.மீ உயரம் கொண்டதாக இருந்தாலும் கூட அது 135 மி.மீ குறைந்த வீல்பேஸையே கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன்
விவரங்கள் |
BYD அட்டோ 3 |
MG ZS EV |
|
பேட்டரி திறன் |
49.92 kWh |
60.48 kWh |
50.3 kWh |
ARAI கிளைம்டு ரேஞ்ச் |
468 கி.மீ |
521 கி.மீ |
461 கி.மீ |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
1 |
பவர் |
204 PS |
204 PS |
176 PS |
டார்க் |
310 Nm |
310 Nm |
280 Nm |
-
BYD அட்டோ 3 இப்போது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது: 49.92 kWh மற்றும் 60.48 kWh அதே நேரத்தில் MG ZS EV ஒரே ஒரு 50.3 kWh ஆப்ஷனையே கொண்டுள்ளது.
-
அட்டோ 3 -யின் சிறிய பேட்டரி பேக் ZS EV -யை விட சற்றே அதிக ARAI- கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. மேலும் அதன் எலக்ட்ரிக் மோட்டார் ZS EV -யை விட 28 PS மற்றும் 30 Nm அதிக அவுட்புட்டை வழங்குகிறது.
-
இருப்பினும் BYD அட்டோ 3 -யின் அனைத்து வேரியன்ட்களும் ஒரே எலக்ட்ரிக் மோட்டாரை பெறுகின்றன, அதே பவர் அவுட்புட்டை வழங்குகின்றன. டாப்-ஸ்பெக் வேரியன்ட்கள் 521 கிமீ வரை கிளைம்டு வரம்பில் பெரிய பேட்டரி பேக்கை பெறுகின்றன.
சார்ஜிங் விவரங்கள்
சார்ஜ் நேரம் |
BYD அட்டோ 3 |
MG ZS EV |
DC ஃபாஸ்ட் சார்ஜர் (0-80 சதவீதம்) |
50 நிமிடங்கள் (70 kW/ 80 kW சார்ஜர்) |
60 நிமிடங்கள் (50kW சார்ஜர்) |
ஏசி சார்ஜர் (0-100 சதவீதம்) |
8 மணிநேரம் (49.92 kWh பேட்டரி) 9.5 மணி முதல் 10 மணிநேரம் (60.48 kWh பேட்டரி) |
8.5 முதல் 9 மணிநேரம் (7.4 kW சார்ஜருடன்) |
-
அட்டோ 3 ஆனது 70 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை என்ட்ரி-ஸ்பெக் வேரியன்ட்டில் சிறிய பேட்டரி பேக் மற்றும் 80 kW மற்ற வேரியன்ட்களில் சப்போர்ட் செய்கிறது. இது வெறும் 50 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் ZS EV ஆனது 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் வருகிறது. அதே சார்ஜிங்கை அடைய 60 நிமிடங்கள் ஆகும்.
-
ஏசி சார்ஜரை பயன்படுத்தி அட்டோ 3 -யின் லோவர் வேரியன்ட்டை 8 மணி நேரத்தில் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு 10 மணிநேரம் வரை ஆகும். அதே வேளையில் ZS EV கிட்டத்தட்ட 1 மணிநேரம் குறைவாகவே எடுக்கும்.
வசதிகள்
வசதிகள் |
BYD அட்டோ 3 |
MG ZS EV |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
கம்ஃபோர்ட் & வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
முக்கியமான விவரங்கள்
-
இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் பனோரமிக் சன்ரூஃப் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் கீலெஸ் என்ட்ரி மற்றும் 6-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் போன்ற பொதுவான வசதிகளை பெறுகின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை இரண்டிலுமே 360 டிகிரி கேமரா டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
-
பெரிய 12.8-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப் 8-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் மற்றும் 4-வே அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் பயணிகள் இருக்கை மற்றும் கூடுதல் ஏர்பேக் போன்ற விஷயங்களில் ZS EV -யை விட அட்டோ 3 கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.
-
மறுபுறம் ZS EV ஆனது அனைத்து இருக்கைகளுக்கும் ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் (அட்டோ 3 பின்புறத்தில் மட்டுமே கிடைக்கும்). பெரிய 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற சில தனித்துவமான வசதிகளை கொண்டுள்ளது. இவை அட்டோ 3 காரில் கிடைக்காது.
தீர்ப்பு
பெரிய டச் ஸ்கிரீன், மிக நவீனமான கேபின், அதிக சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் அதிக க்ளெய்ம் ரேஞ்ச் எண்ணிக்கை மற்றும் கூடுதல் ஏர்பேக் போன்ற கூடுதல் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை நீங்கள் விரும்பினால் BYD அட்டோ 3 உங்கள் தேர்வாக இருக்கும். இருப்பினும் பேஸ்-ஸ்பெக் அட்டோ 3 காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரி பேக் கொண்ட பிரீமியம் எலக்ட்ரிக் காரை நீங்கள் விரும்பினால் ஆனால் குறைந்த விலையில் ZS EV ஆனது உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிந்து கொள்ளுங்கள்!
லேட்டஸ்ட் வாகன அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் இன் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: BYD அட்டோ 3 ஆட்டோமெட்டிக்