• English
  • Login / Register

இந்த மாதம் ஒரு என்ட்ரி லெவல் EV -யை வாங்க விரும்புகிறீர்களா ! காரை வீட்டுக்கு கொண்டு வருவதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம்

published on ஜூன் 10, 2024 06:03 pm by yashika for டாடா டியாகோ இவி

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பட்டியலில் உள்ள 20 நகரங்களில் மூன்றில் MG காமெட் மட்டுமே EV காத்திருக்க தேவையில்லாத ஒரே ஒரு கார் ஆகும்.

MG Comet EV, Tata Tigor EV, Tata Tiago EV, and Tata Punch EV

ரூ. 15 லட்சத்திற்கும் குறைவான EV ஆப்ஷன்களில் டாடா டியாகோ EV, MG காமெட் EV மற்றும் டாடா பன்ச் EV ஆகியவை உள்ளன. 2024 ஜூன் மாதத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாங்க திட்டமிட்டால் அதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நான்கு மாதங்கள் வரை காத்திருக்கத் தயாராக வேண்டியிருக்கலாம். இங்கே ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள நான்கு பிரபலமான EV -களில் முதல் 20 நகரங்கள் வாரியாக காத்திருப்பு கால விவரங்களை இங்கே தொகுத்துள்ளோம். டாடா நெக்ஸான் EV -யை நாங்கள் சேர்க்கவில்லை. ஏனெனில் அதன் பேஸ் வேரியன்ட் மட்டுமே ரூ.15 லட்சத்திற்கு கீழ் உள்ளது.

குறிப்பு: சிட்ரோன் eC3 -யை இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. ஏனெனில் அதற்கான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நகரம்

எம்ஜி காமெட் EV

டாடா டியாகோ EV

டாடா டிகோர் EV

டாடா பன்ச் EV

புது தில்லி

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

பெங்களூரு

2 மாதங்கள்

3 மாதங்கள்

2 மாதங்கள்

3 மாதங்கள்

மும்பை

2-3 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

ஹைதராபாத்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

புனே

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

1 மாதம்

சென்னை

1.5-2 மாதங்கள்

2.5 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

2-2.5 மாதங்கள்

ஜெய்ப்பூர்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

அகமதாபாத்

காத்திருக்க தேவையில்லை

2 மாதங்கள்

2 மாதங்கள்

2.5 மாதங்கள்

குருகிராம்

1-2 மாதங்கள்

2 மாதங்கள்

1.5 மாதங்கள்

2.5 மாதங்கள்

லக்னோ

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2-3 மாதங்கள்

2-3 மாதங்கள்

கொல்கத்தா

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

தானே

2-2.5 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

சூரத்

1-1.5 மாதங்கள்

2 மாதங்கள்

1.5 மாதங்கள்

2.5 மாதங்கள்

காசியாபாத்

1.5 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

1 மாதம்

சண்டிகர்

3-4 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1.5-2.5 மாதங்கள்

கோயம்புத்தூர்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

பாட்னா

1.5-2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

1.5-2.5 மாதங்கள்

ஃபரிதாபாத்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

2 மாதங்கள்

இந்தூர்

1-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

1.5-2 மாதங்கள்

நொய்டா

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

2 மாதங்கள்

2-3 மாதங்கள்

முக்கிய விவரங்கள்

MG Comet EV

  • இந்த பட்டியலில் மிகவும் விலை குறைந்த EV -யான எம்ஜி காமெட் EV பெரும்பாலான முக்கிய நகரங்களில் சுமார் இரண்டு மாதங்களில் கைகளில் கிடைக்கும். ஆனால் சண்டிகரில் மட்டும் அதிகபட்சம் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்தில் வாங்குபவர்களுக்கு வெயிட்டிங் பீரியட் இல்லை.

  • டாடா டியாகோ EV -யின் என்ட்ரி லெவல் வேரியன்ட்டை வாங்க விரும்பினால் பெரும்பாலான நகரங்களில் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். பெங்களூரு, லக்னோ மற்றும் நொய்டாவில் உள்ள மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

Tata Tigor EV

  • 2024 ஜூன் மாதத்தில் பட்டியலில் உள்ள ஆறு நகரங்களில் டாடா டிகோர் EV -யை வாங்க சுமார் இரண்டு முதல் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இருப்பினும் மும்பை, குருகிராம், சூரத் மற்றும் இந்தூரில் வாங்குபவர்கள் ஒன்றரை மாதங்களில் மிக விரைவில் டெலிவரி எடுக்காலாம்.

  • டாடா பன்ச் EV -க்கான சராசரியாக காத்திருக்கும் நேரம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உள்ளது. ஆனால் புனே மற்றும் காசியாபாத் போன்ற நகரங்களில் ஒரு மாதத்தில் டெலிவரி எடுக்கலாம்.

புதிய காருக்கான காத்திருப்பு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட் மற்றும் கலர் மற்றும் டீலர்ஷிப்பில் உள்ள ஸ்டாக் ஆகியவற்றை பொறுத்து வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க: டியாகோ EV ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா டியாகோ EV

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience