Skoda Octavia ஃபேஸ்லிஃப்ட் காரின் டீஸர் ஸ்கெட்ச் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன
published on பிப்ரவரி 07, 2024 06:07 pm by rohit for ஸ்கோடா ஆக்டிவா vrs
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெகுலர் ஆக்டேவியா இந்தியாவை நோக்கி வருவதைப் போல தெரியவில்லை என்றாலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஸ்போர்ட்டியர் விஆர்எஸ் வெர்ஷன் இங்கே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
-
ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் ஆக்டேவியாவை பிப்ரவரி 14, 2024 அன்று அறிமுகப்படுத்த உள்ளது.
-
ஸ்கெட்ச் படங்கள் ஷார்ப்பான LED ஹெட்லைட்கள், அப்டேட்டட் LED DRL -கள் மற்றும் புதிய அலாய் வீல்களை இருப்பதை காட்டுகின்றன.
-
கேபின் புதிய அமைப்பு மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்கோடா நிறுவனம் டீசல் உட்பட பல பவர்டிரெய்ன்களுடன் உலகளாவிய-ஸ்பெக் செடானை கொடுக்கும்.
-
இதன் vRS எடிஷன் 2024 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம், இதன் விலை ரூ. 40 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம்.
நான்காவது தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக, செக் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா ஒரு சில டீஸர் படங்கள் மூலம் அப்டேட் செய்யப்பட்ட செடான் பற்றிய ஒரு காட்சியை நமக்கு வழங்கியுள்ளது.
படங்கள் நமக்கு எதை காட்டுகின்றன ?
புதிய வடிவிலான கிரில், ஷார்ப் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் பம்பர் உட்பட மாற்றங்கள் ஆக்டேவியாவின் முன்பக்கத்தில் இருக்கின்றன. ஆனால் தனித்துவமான வடிவமைப்பு அம்சம் புதிய பூமராங் வடிவ LED டேடைம் ரன்னிங் லைட்ஸ் ஆகும். இது முன்பக்கத்துக்கு ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது.
பக்கவாட்டில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை , ஸ்கோடா செடானுக்கு புதிய அலாய் வீல்களை கொடுத்துள்ளது. பின்புறத்தில், டெயில் லைட்ஸ் முன்பு போலவே உள்ளன. ஆனால் லைட்டிங் பேட்டர்ன் புதிதாக உள்ளது. அதன் பின்பக்க பம்பரின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது இப்போது ஷார்ப்பான கட் மற்றும் கிரீஸஸ் உடன் உள்ளது.
ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆக்டேவியா vRS டீஸர் ஓவியத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் அதன் புதிய வடிவமைப்பை பார்க்க முடிகின்றது. இது பிரமாண்டமான, பெரிய ஏர் வென்ட்கள், ஸ்போர்ட்டி அலாய் வீல்கள் மற்றும் ஸ்போர்ட்டி ரியர் பம்பருடன் வித்தியாசமான பாணியில் பம்பர் கொடுக்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் செடான் மற்றும் எஸ்டேட் பாடி ஸ்டைல்களில் ஆக்டேவியாவை ஸ்கோடா தொடர்ந்து வழங்கும்.
கேபின் மற்றும் புதிய வசதிகள்
புதுப்பிக்கப்பட்ட ஆக்டேவியாவின் உட்புறத்தை பற்றிய விவரங்களை ஸ்கோடா இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது புதிய அப்ஹோல்ஸ்டரி, புதிய டாஷ்போர்டு, கூடுதல் கலர் ஸ்கீம்கள் மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே போன்ற அப்டேட்களை பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: புகழ்பெற்ற பாடகர் மற்றும் பாலிவுட் ஐகானான ஷான் மெர்சிடிஸ் பென்ஸ் EQS 580 எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்
பவர்டிரெய்ன்கள் பற்றிய விவரம்
உலகளவில் ஆக்டேவியாவிற்கு 1.4-லிட்டர் பிளக்-இன் ஹைப்ரிட் (vRS மாடலுக்கு), 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல், 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் டீசல் என பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. 2024 ஆக்டேவியா மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் இந்திய அறிமுகம்
ஸ்டாண்டர்டு ஆக்டேவியா இந்தியாவிற்கு வரப்போவதிலை என்றாலும், அதன் vRS வெர்ஷன் மீண்டும் இங்கே வர வாய்ப்புள்ளது. இது இங்குள்ள ஸ்கோடா ஆர்வலர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஸ்கோடா ஆக்டேவியா vRS முழு இறக்குமதியாக இருக்கும் என்பதால் ஆரம்ப விலை ரூ. 40 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம். இது BMW M340i காருக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும். ஸ்கோடா அதை 2024 -ன் இரண்டாம் பாதியில் எப்போதாவது வேண்டுமானாலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.