• English
    • Login / Register

    வரும் ஏப்ரல் மாதம் முதல் Kia கார்களின் விலை உயரவுள்ளது

    க்யா சிரோஸ் க்காக மார்ச் 19, 2025 02:33 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 12 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்தியாவில் மாருதி மற்றும் டாடாவு -வை தொடர்ந்து, கியா -வும் வரும் நிதியாண்டு முதல் அதன் கார்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

    Kia to hike its car prices from April 1, 2025

    2024-25 நிதியாண்டு முடிவடைவதையடுத்து கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மாடல்களின் விலை உயர்வை அறிவித்து வருகின்றனர். டாடா மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து இப்போது கியா வரிசையில் இணைந்துள்ளது. ஏப்ரல் 2025 முதல் அதன் வரிசையில் விலை உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியா அதன் மாடல்களின் விலை 3 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 

    விலை உயர்வுக்கான காரணம்

    Kia Syros

    கார் தயாரிப்புக்கான பொருள்களின் விலை அதிகரித்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என கியா கூறியுள்ளது. தரமான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கு விலை உயர்வு அவசியம் என்றும் கியா தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க: Mahindra Thar Roxx -ல் இப்போது புதிதாக மூன்று வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன

    தற்போது விற்பனையில் உள்ள கியா கார்கள்

    Kia Seltos

    இந்தியாவில் கியா -வின் போர்ட்ஃபோலியோவில் 7 கார்கள் உள்ளன, அவற்றின் தற்போதைய விலை வரம்பு இங்கே:

    மாடல்

    தற்போதைய விலை வரம்பு 

    சோனெட்

    ரூ.8 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரை

    கியா சிரோஸ்

    ரூ.9 லட்சம் முதல் ரூ.17.80 லட்சம்

    கியா கேரன்ஸ்

    ரூ.10.60 லட்சம் முதல் ரூ.19.70 லட்சம்

    கியா செல்டோஸ்

    ரூ.11.13 லட்சம் முதல் ரூ.20.51 லட்சம்

    கியா EV6

    ரூ.60.97 லட்சம் முதல் ரூ.65.97 லட்சம்

    கியா கார்னிவல்

    ரூ.63.90 லட்சம்

    கியா EV9

    ரூ.1.30 கோடி

    அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

    கியா -வில் இருந்து அடுத்து வெளியாகும் கார்கள் என்ன?

    2025 Kia EV6

    இந்தியாவில் 2025 ஏப்ரலில் கியா நிறுவனம் 2025 கேரன்ஸ் காரை அறிமுகம் செய்யும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு கேரன்ஸ் -ன் மின்சார பதிப்பு அதனுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்படலாம். மேலும் ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா EV6 காரும் இந்த ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Kia சிரோஸ்

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience