Mahindra Thar Roxx -ல் இப்போது புதிதாக மூன்று வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக மார்ச் 18, 2025 05:42 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த சிறிய அப்டேட்கள் அர்பன்-ஃபோகஸ்டு தார் ராக்ஸின் வசதியை மேம்படுத்துகிறன. இது நகர்ப்புறங்களுக்கு மிகவும் ஏற்றது.
-
கீலெஸ் என்ட்ரி, முன் பயணிகள் பக்கம் ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஏரோடைனமிக் வைப்பர்கள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
-
ஆல் LED லைட்ஸ், 19-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டெயில்கேட்டில் உள்ள ஸ்பேர் வீல்கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.
-
4WD வேரியன்ட்களுடன் மோச்சா பிரவுன் மற்றும் ஐவரி ஒயிட் இன்டீரியர் தீம் ஆகிய தேர்வுகள் கிடைக்கும்.
-
டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
2-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.
-
புதிய வசதிகள் சேர்க்கப்பட்டாலும் கூட விலையில் மாற்றமில்லை. இதன் விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.23.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் கரடுமுரடான திறனை சிறப்பான வசதியுடன் கொடுத்ததால் மிகப் பிரபலமான கார்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்கள், 5 இருக்கைகள் கொண்ட அமைப்பு மற்றும் நகர்ப்புற மக்களுக்கு ஏற்ற எஸ்யூவி ஆக இருக்கும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் உடன் வருகிறது. இப்போது தார் ராக்ஸ் மூன்று புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் காரின் வசதி மேம்பட்டுள்ளது. இந்த அப்டேட்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
புதிய அப்டேட்கள் என்ன?
மஹிந்திரா தார் ராக்ஸ் ஏற்கெனவே நிறைய வசதிகளுடன் வந்தாலும் கூடஇதற்கு முன்பு கீலெஸ் என்ட்ரி ஆப்ஷன் இல்லை. இப்போது அந்த வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இப்போது முன் பக்கம் உள்ள பயணிகளுக்கான ஆர்ம்ரெஸ்ட்டில் கூடுதல் வசதிக்காக டிரைவர்-சைட் ஆர்ம்ரெஸ்டை போன்ற அதே ஸ்லைடிங் ஃபங்ஷன் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இப்போது ஏரோடைனமிக் வைப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இது கேபின் சத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த அப்டேட்கள் குறைவாக தோன்றினாலும் தினசரி டிரைவிங் தேவைகளுக்கு இவை உதவியாக இருக்கும்.
மேலும் பார்க்க: மஹிந்திரா XUV700 எபோனி எடிஷன் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது
மற்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மஹிந்திரா தார் ராக்ஸ் என்பது 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 9-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் இது வருகிறது. பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, கூல்டு க்ளோவ்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளும் இதில் உள்ளன.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது, அவற்றின் விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
177 PS வரை |
175 PS வரை |
டார்க் |
380 Nm வரை |
370 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT^ |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன்* |
RWD |
RWD/4WD |
* RWD = ரியர் வீல் டிரைவ், 4WD = 4 வீல் டிரைவ்
^AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 12.99 லட்சம் முதல் ரூ. 23.09 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. இது மாருதி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் போன்ற மற்ற 5-டோர் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.