பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகவுள்ள கியா, மஹிந்திரா மற்றும் எம்ஜி கார்களின் வ ிவரங்கள் இங்கே
மஹிந்திரா xev 9e க்காக ஜனவரி 11, 2025 12:14 am அன்று anonymous ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 81 Views
- ஒரு கருத்தை எழுதுக
மூன்று கார் தயாரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்படும் புதிய கார்களின் இரண்டு மட்டுமே ICE மாடல்கள் மற்றவை XEV 9e மற்றும் சைபர்ஸ்டெர் உட்பட அனைத்தும் EVகள் ஆகும்.
வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இந்திய கார் தயாரிப்பாளர்களிடம் இருந்தும், உலகளாவிய தயாரிப்பாளர்களிடம் இருந்தும் அற்புதமான புதிய மாடல்களை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா, மஹிந்திரா, மற்றும் எம்ஜி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் முதன்முறையாக சில தயாரிப்புகளை வெளியிட தயாராகி வருகின்றன.
இந்த பிராண்டுகள் அவற்றின் தற்போதைய வரிசையிலிருந்து மாடல்களை வழங்கக்கூடும். என்றாலும் கூட இந்த கட்டுரையில் கியா, மஹிந்திரா மற்றும் எம்ஜியின் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகமாகும் கார்கள் குறித்து பார்க்கலாம்.
கியா சைரோஸ்
தனித்துவமான வடிவமைப்பு மற்றும் வசதிகள் நிறைந்த கேபினுடன் சமீபத்தில் கியா நிறுவனம் சைரோஸ் காரை அறிமுகம் செய்தது. இது 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். பிரீமியம் சப்காம்பாக்ட் எஸ்யூவிக்கான முன்பதிவுகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் விலை விவரங்கள் பிப்ரவரி 1, 2025 அன்று அறிவிக்கப்படவுள்ளது. முன்புற மற்றும் பின்புற வென்டிலேட்டட் சீட்கள், டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன் செட்டப் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும். இது 120 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 116 PS 1.5-லிட்டர் டீசல் உட்பட இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.
மஹிந்திரா XEV 9e
மஹிந்திரா தனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபே -வான XEV 9e காரை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்க தயாராகவுள்ளது. மஹிந்திரா நிறுவனம் அதன் முன்பதிவு மற்றும் டெலிவரி விவரங்களுடன் அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. இதன் விலை ரூ.21.90 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டெல்லி, மும்பை மற்றும் புனே போன்ற 1 ஆம் கட்ட நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் விரைவில் தொடங்கும். இது 59 kWh மற்றும் 79 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.
மஹிந்திரா BE 6
மஹிந்திரா BE 6 ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் XEV 9e உடன் காட்சிப்படுத்தப்படும். XEV 9e உடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே ஆகும். ஆனால் இது போன்ற 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்குகிறது. BE 6 -க்கான விலை ரூ.18.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.26.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இது டூயல் 10.25-இன்ச் டிஸ்பிளேக்கள், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், பல வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவற்றைப் கொண்டிருக்கிறது.
எம்ஜி சைபர்ஸ்டர்
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஆல்-எலக்ட்ரிக் சைபர்ஸ்டர் காரை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தும். எம்ஜி சமீபத்தில் இந்தியா-ஸ்பெக் மாடலுக்கான பவர்டிரெய்ன் விவரங்களை வெளியிட்டது. இது 510 PS டூயல் மோட்டார் செட்டப் உடன் 77 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது WLTP-கிளைம்டு 444 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது, இது 3.2 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். சைபர்ஸ்டரின் விலை ரூ.75 லட்சம் முதல் ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி எம்9
எம்ஜி நிறுவனம் வரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் M9 என்ற பிரீமியம் எலக்ட்ரிக் MPV -யை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.ஆரம்பத்தில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மிஃபா 9 ஆக காட்சிப்படுத்தப்பட்டது. இது எம்ஜி -யின் புதிய 'செலக்ட்' டீலர்ஷிப்கள் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். மேலும் இதன் விலை சுமார் ரூ. 1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. M9 ஆனது வென்டிலேஷன் மற்றும் மசாஜ் ஃபங்ஷன்களுடன் கூடிய முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள், பின்புற என்டெர்டெயின்மென்ட் ஸ்கிரீன்கள் மற்றும் 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுட்ன கூடிய பிரீமியம் உட்புறத்தைக் கொண்டுள்ளது. இது 90 kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 565 கி.மீ ரேஞ்ச் உடன் வருகிறது.
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் ஃபேஸ்லிஃப்டட் எம்ஜி குளோஸ்டர் காரும் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது ஒரு அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆன்லைனில் பல ஸ்பை ஷாட்கள் வெளிவந்தன. புதுப்பிக்கப்பட்ட க்ளோஸ்டரில் வெளிப்புறத்தில் சிறிய அளவிலேயே மாற்றங்களைக் கொண்டிருக்கும். உட்புறம் வெளிச்செல்லும் மாடலை போலவே இருக்கும். 161 PS 2-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 216 PS 2-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகியவற்றை உள்ளடக்கிய பவர்டிரெயியினில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.
எம்ஜி iML 6
MG -ன் பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் செடான் ஆன iML6 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும். இது கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் முதன்முதலில் உலகளவில் வெளியிடப்பட்டது மற்றும் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் சீனாவில் விற்பனை செய்யப்பட்டது. இது CLTC (சீனா லைட்-டூட்டி வாகன சோதனை சைக்கிள்) 750 கி.மீ வரையிலான ரேஞ்ச் உடன் வருகிறது. iML6 ஆனது பனோரமிக் சன்ரூஃப், 256-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், 20-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 12-வே பவர்டு டிரைவர் சீட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
எம்ஜி 7 டிராபி
ICE பவர்டு MG 7 செடான் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் அறிமுகமாகும். இது 2-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கும். இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் ஜோடியாக 261 PS மற்றும் 405 Nm அவுட்புட்டை கொடுக்கும். 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.12 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 360 டிகிரி கேமரா அமைப்பு மற்றும் ADAS ஆகிய வசதிகள் இதில் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த மாடல்களை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.