டீலர்ஷிப்களுக்கு வந்து சேர்ந்த Mahindra BE 6 மற்றும் Mahindra XEV 9e கார்கள்
மஹிந்திரா பிஇ 6 க்காக ஜனவரி 28, 2025 08:06 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் டெஸ்ட் டிரைவ்கள் இப்போது தொடங்கியுள்ளன. இரண்டு EV -களுக்கான முழுமையாக டெஸ்ட் டிரைவ்கள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளன.
மஹிந்திராவின் சமீபத்திய எலக்ட்ரி கார்களான BE 6 மற்றும் XEV 9e ஆகிய கார்கள் டீலர்ஷிப்களுக்கு வந்துள்ளன. மஹிந்திரா டெஸ்ட் டிரைவ்கள் மற்றும் முன்பதிவுகள் இரண்டையும் ஒரு கட்டமாக வழங்குகிறது. டெஸ்ட் டிரைவ்கள் ஏற்கனவே பகுதி 2 -ல் உள்ள நகரங்களில் கிடைக்கின்றன. அதே நேரத்தில் முன்பதிவு பிப்ரவரி 14 முதல் தொடங்கும். பெரிய 79 kWh பேட்டரி பேக் கொண்ட சிறந்த பேக் 3 வேரியன்ட்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மீதமுள்ள வேரியன்ட்கள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும். மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பற்றிய விரைவான கண்ணோட்டம் இங்கே.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e வெளிப்புறம்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டின் சில்ஹவுட்டுகள் அவற்றின் தனித்துவமான, அதிநவீன தோற்றத்துடன் உடனடியாக கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. இரண்டு EV -களிலும் ஷார்ப்பான பாணியிலான LED ஹெட்லைட்கள், ஸ்லோப்பிங் எஸ்யூவி-கூபே போன்ற வடிவமைப்பு, ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.
BE 6 ஸ்பிளிட்டட் LED DRL -கள் மற்றும் டெயில்லேம்ப்களுடனும் , XEV 9e -ல் உள்ளவை கனெக்ட் செய்யப்பட்டுள்ளவையாகவும் உள்ளன.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e இன்டீரியர் மற்றும் வசதிகள்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e இரண்டும் டூயல்-டோன் கேபின் தீம்கள் மற்றும் மையத்தில் ஒளிரும் 'இன்ஃபினிட்டி' லோகோவுடன் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல்கள் உள்ளன. XEV 9e -ன் டாஷ்போர்டு மிகவும் சிறியதாக இருந்தாலும் கூட BE 6 -ல் உள்ள போர் விமானத்தில் இருப்பதை போன்று தெரிகிறது. டாஷ்போர்டில் BE6 க்கான 12.3-இன்ச் டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன் செட்டப் மற்றும் XEV 9e க்கு 3 ஸ்கிரீன் செட்டப் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் உள்ளன.
பவர்டு மற்றும் வென்டிலேஷன் உடன் முன் இருக்கைகள், மல்டி ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இரண்டு EV -களும் 6 ஏர்பேக்ஸ் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வருகின்றன.
மேலும் படிக்க: எக்ஸ்க்ளூஸிவ்: ஒன்றாக வெளிவரப்போகும் Kia Carens ஃபேஸ்லிஃப்ட் மற்றும் Kia Carens EV கார்கள்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பவர்ட்ரெயின்
BE 6 மற்றும் XEV 9e ஆகிய இரண்டும் 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளை கொண்ட அதே மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளன. அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
BE 6 |
XEV 9e |
பேட்டரி பேக் |
59 kWh மற்றும் 79 kWh |
59 kWh மற்றும் 79 kWh |
பவர் |
231 PS மற்றும் 286 PS |
231 PS மற்றும் 286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC PI+P II) |
535 கி.மீ மற்றும் 682 கி.மீ |
542 கி.மீ மற்றும் 656 கி.மீ |
இரண்டு பேட்டரிகளும் 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகின்றன. இதன் மூலமாக 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம்.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா BE6 விலை ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.9 லட்சம் வரையிலும், ஃபிளாக்ஷிப் EV ரூ.21.9 லட்சம் முதல் ரூ.30.5 லட்சம் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. BE 6 ஆனது டாடா கர்வ்வ் EV, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மாருதி சுஸூகி இ விட்டாரா, மற்றும் MG ZS EV, XEV 9e எதிராக செல்லும் போது பிஒய் டிஅட்டோ 3 மற்றும் வரவிருக்கும் டாடா ஹாரியர் EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
(விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை)
மேலும் படிக்க: Kia Syros: இந்த பிரிவில் சிறந்த பின் இருக்கை வசதியை கொண்டதா ? விவரங்கள் இங்கே
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.