ஒரே மாதத்திற்குள் Mahindra BE 6 மற்று ம் Mahindra XEV 9e ஆகியவற்றின் 3000 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன
bikramjit ஆல் ஏப்ரல் 10, 2025 09:47 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
முன்பதிவு விவரங்களின்படி XEV 9e க்கு 59 சதவிகிதம் மற்றும் BE 6 க்கு 41 சதவிகிதம் தேவை உள்ளது. மொத்தக் காத்திருப்பு காலம் சுமார் ஆறு மாதங்கள் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் லேட்டஸ்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி -களான BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றை டெலிவரி செய்வதில் 3000 யூனிட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.. அவர்களின் டெலிவரி தொடங்கி சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது முன்பதிவு விவரங்களை வைத்து பார்க்கும் போது XEV 9e வாடிக்கையாளர்களின் தேர்வில் முன்னணியில் உள்ளது என்று மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பங்கள்
மஹிந்திரா EV -கள் இந்திய சந்தையில் அறிமுகமானதில் இருந்தே பிரபலமாக உள்ளன. மேலும் இது குறுகிய காலத்தில் 3000 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு போக்குகளின்படி, வாடிக்கையாளார்களில் 59 சதவீதம் பேர் XEV 9e க்கு முன்பதிவு செய்துள்ளனர், மீதமுள்ள 41 சதவீதம் பேர் BE 6 காரை தேர்ந்தெடுத்துள்ளனர். உண்மையில் இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி -க்களுக்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஃபுல்லி லோடட் டாப்-ஸ்பெக் பேக் 3 வேரியன்ட்களையே தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் இரண்டு மாடல்களுக்கும் சுமார் ஆறு மாதங்கள் காத்திருப்பு காலம் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக கார்களை விரைவாக வழங்க உள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா BE 6 கண்ணோட்டம்
மஹிந்திரா BE 6 இந்தியச் சாலைகளில் அதிகம் பரிச்சயமில்லாத ஒரு ஃபன் நிறைந்த மற்றும் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நிறைய கட்ஸ் மற்றும் ஃபோல்டுகளுடன் இது அதிநவீனமானது. இது ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள், LED லைட்ஸ் மற்றும் 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் போன்ற நவீன வடிவமைப்பு எலமென்ட்களை கொண்டுள்ளது. இது 5 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ.
BE 6 ஆனது விமான காக்பிட்-இன்டீரியர் டிசைனை கொண்டுள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றுக்கான டூயல் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, டூயல்-ஜோன் ஆட்டோ-ஏசி, வெளிச்சத்துடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஃபோன் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, இரண்டு ரியாலிட்டி சார்ஜ் செய்யப்பட்ட வயர்லெஸ் சார்ஜ் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. இதில் பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
மஹிந்திரா XEV 9e கண்ணோட்டம்
மஹிந்திரா XEV 9e என்பது ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே ஆகும், இது சாய்வான ரூஃப், கனெக்டட் LED விளக்குகள் மற்றும் 19-இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது நான்கு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ.
XEV 9e -ன் முக்கிய விஷயங்களில் மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், டூயல்-ஜோன் கிளைமேட் கட்டுப்பாடு, வெளிச்சத்துடன் கூடிய பனோரமிக் கிளாஸ் ரூஃப், மெமரி சிஸ்டத்துடன் இயங்கும் ஓட்டுநர் இருக்கை மற்றும் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக இது 7 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களைப் பெறுகிறது.
பேட்டரி பேக்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e இரண்டும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ரியர் வீல் ஆப்ஷன் உடன் வருகிறது. அதன் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
விவரங்கள் |
BE 6 |
XEV 9e |
||
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
59 kWh |
79 kWh |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+2) |
557 கி.மீ |
683 கி.மீ |
542 கி.மீ |
656 கி.மீ |
மின்சார மோட்டார் (கள்) எண்ணிக்கை |
1 |
1 |
1 |
1 |
சக்தி |
231 PS |
286 PS |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
|||
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
*RWD- ரியர் வீல் டிரைவ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா BE 6 விலை ரூ.18.90 லட்சம் முதல் ரூ.26.90 லட்சம் வரையிலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ ரூ.21.90 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரையிலும் (அனைத்து விலை எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையிலும் உள்ளது.
BE 6 ஆனது டாடா கர்வ் EV, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், MG ZS EV போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. மேலும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா உடன் போட்டியிடும். XEV 9e, மறுபுறம், BYD அட்டோ 3 மற்றும் வரவிருக்கும் டாடா ஹாரியர் EV -க்கு இது ஒரு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.