இந்தியா முழுவதும் Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுக்கான முன்பதிவுகள் தொடக்கம்
மஹிந்திரா be 6 க்காக பிப்ரவரி 14, 2025 10:41 pm அன்று yashika ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த எஸ்யூவி -களுக்கான டெலிவரி மார்ச் 2025 முதல் படிப்படியாகத் தொடங்கும்.
-
இந்தியா -முழுவதும் இப்போது மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e ஆகியவற்றுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. டெலிவரியை மார்ச் நடுப்பகுதியில் இருந்து தொடங்க மஹிந்திரா திட்டமிடப்பட்டுள்ளது.
-
பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ என 5 வேரியன்ட்களில் மஹிந்திரா BE 6 கிடைக்கிறது. பேக் ஒன், பேக் டூ, பேக் த்ரீ செலக்ட் மற்றும் பேக் த்ரீ என்ற நான்கு நான்கு வேரியன்ட்களில் XEV 9e கிடைக்கும்.
-
BE 6 டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதேசமயம் XEV 9e 12.3-இன்ச் டிரிபிள் டிஸ்ப்ளே செட்டப் உடன் வருகிறது.
-
பாதுகாப்புக்காக இரண்டு மாடல்களிலும் மல்டி-ஜோன் ஆட்டோ ஏசி, 16-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ பார்க்கிங் மற்றும் 7 ஏர்பேக்குகள் (6 ஸ்டாண்டர்டாக) மற்றும் லெவல் 2 ADAS போன்றவை உள்ளன.
-
இரண்டு EV -களும் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுட்ன வருகின்றன: ஸ்டாண்டர்டாக 59 kWh மற்றும் பெரிய 79 kWh, சிங்கிள்-மோட்டார் செட்டப் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
-
XEV 9e ஆனது 656 கி.மீ ரேஞ்ச் வரை செல்லும். BE 6 ஆனது 683 கி.மீ வரையிலான அதிக கூடுதலான ரேஞ்சை வழங்குகிறது.
-
மஹிந்திரா BE 6 -க்கான விலை ரூ.18.90 லட்சத்தில் தொடங்கி ரூ.26.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. XEV 9e காரின் விலை ரூ.21.90 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
மஹிந்திரா சமீபத்தில் இந்தியா முழுமைக்கும் BE 6 மற்றும் XUV 9e ஆகிய இரண்டு கார்களுக்கான சோதனை ஓட்டங்களை தொடங்கியுள்ளது. இப்போது மஹிந்திரா இந்த எஸ்யூவி -களுக்கான ஆர்டர் புத்தகங்களை டீலர்ஷிப்களிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் திறந்துள்ளது. BE 6 விலை ரூ.18.9 லட்சம் முதல் ரூ.26.90 லட்சம் வரையிலும், XUV 9e -யின் விலை ரூ.21.9 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையிலும் உள்ளது.
வடிவமைப்பு
![](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![Mahindra XEV 9e Front](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
BE 6 கார் ஆக்ரோஷமான தோற்றத்துடன் டூயல்-பாட் ஹெட்லைட்கள், C-வடிவ LED DRLகள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் 20 இன்ச் வரையில் அப்டேட் செய்யக்கூடிய 19-இன்ச் ஸ்டைலிஷ் அலாய் வீல்கள் உள்ளன. ஒப்பிடுகையில் XUV 9e ஆனது எளிமையான எஸ்யூவி-கூபே வடிவமைப்பில் வெர்டிகலான LED ஹெட்லைட்கள், இன்வெர்டட் L-வடிவ கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் 19-இன்ச் அல்லது 20-இன்ச் ஏரோடைனமிக்ஸ் அலாய் வீல் ஆப்ஷன்களுடன் வருகிறது
கேபின் மற்றும் வசதிகள்
![](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![Mahindra XEV 9e Dashboard](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
மஹிந்திரா BE 6 டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், புல்-டேப் டோர் ஹேண்டில்கள், இல்லுமினேட்டட் 'BE' லோகோவுடன் கூடிய 2-ஸ்போக் ஸ்டீயரிங், டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் சீட்கள், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 360-டிகிரி கேமரா கேமராவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை உள்ளன.
BE 6 -ல் உள்ள வசதிகளோடு சேர்த்து மஹிந்திரா XUV 9e -யில் மூன்று 12.3-இன்ச் டிஸ்ப்ளே செட்டப், சிங்கிள் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இரண்டு எஸ்யூவி -களும் 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு லெவல் 2 ADAS வசதிகளுடன் கிடைக்கின்றன.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா தனது இரண்டு EV -க்களுடன் இரண்டு பேட்டரி பேக்குகளை வழங்கியுள்ளது. விவரங்கள் இங்கே:
விவரங்கள் |
மஹிந்திரா BE 6 |
மஹிந்திரா XEV 9e |
||
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
59 kWh |
79 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
380 Nm |
380 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC பகுதி 1+ பகுதி 2) |
557 கி.மீ |
683 கி.மீ |
542 கி.மீ |
656 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
RWD |
RWD |
RWD |
*RWD = ரியர் வீல் டிரைவ்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e: போட்டியாளர்கள்
மஹிந்திரா BE 6 ஆனது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ்வ் EV, MG ZS EV மேலும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். மஹிந்திரா XEV 9e ஆனது புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள டாடா ஹாரியர் EV உடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்