• English
  • Login / Register

2024 ஆண்டில் இந்தியாவிற்கு புதிதாக வரவிருக்கும் கார்கள்: அடுத்த ஆண்டு சாலைகளில் நீங்கள் இந்த கார்களை பார்க்க வாய்ப்புள்ளது

published on டிசம்பர் 06, 2023 07:41 pm by rohit for மாருதி ஸ்விப்ட்

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக நிறைய புதிய கார்கள் காத்திருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை எஸ்யூவி -கள் மற்றும் EV -கார்களாக இருக்கின்றன.

Upcoming cars in 2024

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா எஸ்யூவி -கள் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற அறிமுகங்களுடன், இந்திய ஆட்டோமொபைல் துறையில்  2023 அதிரடியான ஆண்டாக இருந்தது. அதேபோல, 2024 ஆண்டிலும் பல புதிய கார் அறிமுகங்கள் மற்றும் வெளியீடுகளை நாம் பார்க்க முடியும் என தெரிகிறது. இதில் பல மின்சார வாகனங்களுடன் (EV -கள்) பல இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மாடல்களும் அடங்கும். இந்தியாவில் 2024 -ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும்/உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் பட்டியல் இங்கே:

கவனிக்க

T.B.C. - உறுதி செய்யப்பட வேண்டியது

T.B.A. - அறிவிக்கப்பட வேண்டியது

மாருதி கார்கள்

புதிய மாருதி ஸ்விஃப்ட்

2024 Maruti Suzuki Swift

மாருதி ஸ்விஃப்ட் புதிய 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும், அடுத்த ஆண்டு ஒரு தலைமுறை அப்டேட்டை பெற உள்ளது. புதிய ஸ்விஃப்ட் சோதனை கார்களின் சமீபத்திய ஸ்பை ஷாட்களில் காணப்படுவது போல், இது பெரிய 9 -இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உடன் வரக்கூடும். 

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் முதல் பாதி

புதிய மாருதி டிசையர்

Maruti Dzireதற்போதைய ஜென் டிசையர் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது

மாருதி டிசையர் மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் செடான் பதிப்பு ஆகும். பிந்தையது இப்போது ஒரு புதிய தலைமுறைக்குள் நுழைவதால், செடானும் இதேபோன்ற அப்டேட்டை பெறவுள்ளது. மெக்கானிக்கல் மற்றும் அம்சத் திருத்தங்கள் புதிய ஸ்விஃப்ட் கார்களுக்கு ஏற்ப இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், பின்புறத்தில் டிசையர்-க்கு ஏற்ற வகையில் வடிவமைப்பில் சில வேறுபாடுகள் இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஃபேஸ்லிஃப்ட்

Maruti S-Presso

தற்போதைய எஸ்-பிரஸ்ஸோ எடுத்துக்காட்டுக்காக மட்டுமே காட்டப்பட்டுள்ளது

மாருதி எஸ்-பிரஸ்ஸோ உடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைக்கு வந்துள்ளதால், அடுத்த ஆண்டு மாருதி ஒரு பெரிய மேக்ஓவரைக் கொடுப்பதற்கு ஏற்ற சரியான நேரமாக இருக்கும். கொடுக்கப்படவுள்ள மாற்றங்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதே சமயம் மாருதி சற்று மாற்றியமைக்கப்பட்ட முன்பக்கம் மற்றும் உள்புறத்தில் சில லேசான மாற்றங்களைக் கொடுக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். எஸ்-பிரஸ்ஸோ ஃபேஸ்லிஃப்ட் ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மற்றும் சிஇன்ஜி பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 4.5 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A

மாருதி eVX

Maruti eVX

2024 ஆம் ஆண்டு முதல் மாருதி EV -யான  eVX காரின் வருகை நாம் எதிர்பார்க்கலாம். முதலில் 2025 - இதை வெளியிட மாருதி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் இப்போதே இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் டெஸ்ட் கார்கள் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளன. இது விரைவில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் என்பதை காட்டுகிறது. மாருதி 60 kWh பேட்டரி பேக்குடன் 550 கிமீ தூரம் வரை செல்லும் என்று கூறப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 22 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.C.

டொயோட்டா கார்கள்

டொயோட்டா டெய்ஸர்

Maruti Fronx

மாருதி ஃப்ரான்க்ஸின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

நவம்பர் 2023 -ல், நமக்கு ஒரு அப்டேட் கிடைத்தது மாருதி ஃப்ரான்க்ஸ் -பேஸ்டு டொயோட்டாவின் சப்-4m கிராஸ்ஓவர் எஸ்யூவி ஆகும், இது டெய்ஸர் என்று அழைக்கப்படலாம். இரண்டு பிராண்டுகளுக்கு இடையே பகிரப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும் போலவே, டெய்ஸர் ஆனது, எல்லா இடங்களிலும் உள்ள பேட்ஜ்கள் மாற்றப்படலாம், ஃபிரான்க்ஸ் காருடன் ஒப்பிடும் போது சிறிய ஸ்டைலிங் மாற்றங்களையும் பெறும். அதன் அம்சங்கள் மற்றும் பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இருக்காது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.8 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

Hyundai Creta

தற்போதைய ஹூண்டாய் கிரெட்டாவின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அனேகமாக ஹூண்டாய் -க்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய அறிமுகமாக இருக்கும். மிட்லைஃப் அப்டேட் அதற்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தோற்றத்தைக் கொடுக்கும், அதே நேரத்தில் 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உள்ளிட்ட கூடுதல் அம்சங்களையும் கொடுக்கும். காம்பாக்ட் எஸ்யூவி -யானது 2023 கியா செல்டோஸ் -லிருந்து புதிய 160 PS 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் பெறும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 16

ஹூண்டாய் அல்காஸர் ஃபேஸ்லிஃப்ட்

Hyundai Alcazar

ஹூண்டாய் அல்காஸர், பெரும்பாலும் 3-வரிசை கிரெட்டாவாக இருக்கும், 2024 ஆம் ஆண்டில் ஃபேஸ்லிஃப்டைப் பெறுவதற்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. ADAS -ன் சேர்க்கையுடன் கூடிய அம்சங்களைத் தொடரும்போது, ​​உள்ளேயும் வெளியேயும் சிறிய ஒப்பனை மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். இது தற்போதுள்ள மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்களை தக்க வைத்துக் கொள்ளும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.17 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.C.

ஹூண்டாய் டுக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்

2024 Hyundai Tucson

நான்காவது தலைமுறை ஹூண்டாய் டுக்ஸான் மட்டுமே இந்தியாவில் 2022 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் உலகளாவிய-ஸ்பெக் பதிப்பு ஏற்கனவே 2023 -ன் பிற்பகுதியில் ஒரு அப்டேட்டை பெற்றுள்ளது. ஃபேஸ்லிப்டட் டுக்ஸான் ஏற்கனவே ஃபுல்லி லோடட் யூனிட்டாக இருக்கும் அதே வேளையில், வெளிப்புறத்திற்கான லேசான ஸ்டைலிங் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புறம் (கனெக்டட் டிஸ்பிளே செட்டப்பை கொண்டுள்ளது). இந்தியாவுக்கு வரும்போது, ​​பிரீமியம் எஸ்யூவி தற்போதைய மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.29.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் இரண்டாம் பாதியில்

புதிய ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்

2024 Hyundai Kona Electric

2023 -ன் முதல் காலாண்டில், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் வெளியிடப்பட்டது, இது தற்போதைய இந்தியா-ஸ்பெக் மாடலை விட கணிசமாக பெரியது (மற்றும் பல வழிகளில் சிறந்தது). இது ஹூண்டாயின் சமீபத்திய வடிவமைப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ளது மற்றும் 377 கிமீ வரையிலான WLTP-மதிப்பிடப்பட்ட வரம்பிற்கு ஒரு அடிப்படை நிலை 48.4 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.25 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

புதிய ஹூண்டாய் சாண்டா Fe

2024 Hyundai Santa Fe

2023 ஆம் ஆண்டில், ஹூண்டாய் அதன் ஃபிளாக்ஷிப் சாண்டா Fe 3-வரிசை எஸ்யூவியின் புதிய தலைமுறையை வெளியிட்டது. இது டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட்கள், இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில், இது 2.5-லிட்டர் டர்போ யூனிட் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் உள்ளிட்ட பெட்ரோல்-ஒன்லி காராகும். இருப்பினும், இந்த கார் நம் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

ஹூண்டாய் ஐயோனிக் 5 N மற்றும்/அல்லது ஹூண்டாய் ஐயோனிக் 6

Hyundai Ioniq 5 N

2023 ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவுக்கு ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார கிராஸ்ஓவர் கிடைக்கு என்பது உறுதியானது. உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட காராக இருக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில், ஹீண்டாய் ஐயோனிக் 5 -ன் செயல்திறன்-ஃபோகஸ்டு N பதிப்பை அறிமுகம் செய்தது, இது 84 kWh பேட்டரி பேக் மற்றும் 600 PS மின்சார பவர்டிரெய்னுடன் வருகிறது.

Hyundai Ioniq 6

அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் SUV ஒரு நிச்சயமற்ற பந்தயம் என்றாலும், அதைப் பெறுவதற்கான சாத்தியமும் உள்ளது. ஐயோனிக் 6, ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்ட Kia EV6 மற்றும் ஐயோனிக் 5 -க்கு ஒரு செடான் மாற்று ஆகும். இது ஐயோனிக் 5 -லிருந்து அதே 72.6 kWh பேட்டரி பேக்கை பெறும் என எதிர்பார்க்கலாம், ஆனால் ஸ்லீக்கர் வடிவத்தில் அதிகரிக்கப்பட்ட ரேஞ்சை கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை: T.B.A. (ஐயோனிக் 5 N), ரூ 65 லட்சம் (ஐயோனிக் 6)

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A. (இரண்டும்)

டாடா கார்கள்

டாடா பன்ச் EV

Tata Punch EV

மைக்ரோ-எஸ்யூவி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே எலக்ட்ரிக் டாடா பன்ச் -க்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்போது, ​​பல ஸ்பை ஷாட்களும் கிடைத்துள்ளன . அவற்றை டாடா பன்ச் EV 2023 -ம் ஆண்டில் பெரும்பாலும் ஆன்லைனில் பார்க்க முடிந்தது. இது 2024 -ம் ஆண்டில் புதுப்பித்த நெக்ஸான் போன்ற ஸ்டைலிங்குடன் புதிய தோற்றத்துடன் விற்பனைக்கு வரும், மேலும் சில கூடுதல் அம்சங்களையும் பெறுகிறது. டாடா, பன்ச் EV இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் 500 கிமீ ரேஞ்சை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.12 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 2024

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்

Tata Punchதற்போதைய டாடா பன்ச் -ன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

2021 ஆண்டில், டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவியாக அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டாடா -வால் நெக்ஸானுக்கு கீழே ஒரு புதிய பிரிவை உருவாக்க முடிந்தது. பெரிய டச் ஸ்கிரீன் உள்ளிட்ட சில அம்ச மேம்பாடுகளுடன், 2024 ஆம் ஆண்டில், டாடா பன்ச் -க்கு உள்ளேயும் வெளியேயும் லேசான மேக்ஓவரை வழங்குவதைக் காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இயந்திர ரீதியாக, மைக்ரோ எஸ்யூவியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்க்கப்படும் விலை: T.B.A.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

டாடா கர்வ்வ் EV

Tata Curvv EV concept

டாடா கர்வ்வ் EV 2024 -ல் டாடா -வின் புதிய மாடல் வரிசையாக இருக்கும். மின்சார காம்பாக்ட் SUV நெக்ஸான் EV மற்றும் ஹாரியர் EV க்கு இடையில் நிலைநிறுத்தப்படும். இது பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ADAS போன்ற பல அம்சங்களைப் பெறும். கர்வ்வ் EV ஆனது பல பேட்டரி பேக் விருப்பங்களைப் பெறும் என்றும், நெக்ஸான் EV -யை விட அதிக செயல்திறன் 500 கிமீ ரேஞ்ச் -ஐ வழங்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

டாடா கர்வ்வ்

Tata Curvv

டாடா கர்வ்வ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்களுடன் வழங்கப்படும், மேலும் EV -க்குப் பிறகு வரும். இது ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்றவற்றுக்கு போட்டியாக, எஸ்யூவி-கூபே காராக நெரிசலான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டாடாவின் நுழைவை இது குறிக்கும். இது டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் ADAS உட்பட, கர்வ்வ் EV -யில் உள்ளதைப் போன்ற அம்சங்களையே இதுவும் பெறக்கூடும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 நடுப்பகுதி

டாடா நெக்ஸான் டார்க்

Tata Nexonடாடா நெக்ஸானின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இங்கே உள்ளது, ஆனால் அதன் அறிமுகத்தின் போது எந்த டார்க் பதிப்பும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆகவே இது 2024 -ல் வெளிவர உள்ளது. முன்பு போலவே, நெக்ஸான் டார்க்கில் கருப்பு அலாய் வீல்கள், கிரில் மற்றும் 'டார்க்' பேட்ஜ்கள் இருக்க வாய்ப்புள்ளது. மற்றும் பவர்டிரெய்ன் அதன் அடிப்படையிலான வேரியன்ட்களாக இது இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11.30 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

டாடா ஆல்ட்ரோஸ் ரேஸர்

Tata Altroz Racer

ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல், டாடா நிறுவனம் ஆல்ட்ரோஸின் ஸ்பைசியான ஆல்ட்ரோஸ் ரேஸர் பதிப்பைக் காட்சிப்படுத்தியது இது உள்ளேயும் வெளியேயும் ஒப்பனை மாற்றங்களைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் இப்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானில் வழங்கப்படும் சில புதிய அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் தவிர, ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் -காரில் பெரிய அளவில் இயந்திர மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்க முடியாது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.C.

டாடா ஹாரியர் EV

Tata Harrier EV

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அனைத்து எலக்ட்ரிக் பதிப்பான ஹாரியர் இவி -யையும் கொண்டிருக்கும் இது ஒரே மாதிரியான வடிவமைப்பு தீம் மற்றும் அம்சங்களுடன் தொடரும் ஆனால் பல மின்சார பவர்டிரெயின் தேர்வுகளை கொண்டிருக்கும், இது 500 கிமீ தூரத்திற்கு போதுமானதாக இருக்கும். டாடா ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனையும் வழங்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.30 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் பிற்பகுதி

மஹிந்திரா கார்கள்

5-டோர் மஹிந்திரா தார்

5 door Mahindra Thar

அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் ஒரு எஸ்யூவி இருந்தால், அது தான் 5-டோர் மஹிந்திரா தார் ஆகத்தான் இருக்கும். இது 3-டோர் மாடலை விட பெரிதாக இருக்கும், அதே நேரத்தில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் சன்ரூஃப் போன்ற கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் மற்றும் 4-வீல்-டிரைவ் (4WD) மற்றும் ரியல்-வீல்-டிரைவ் (RWD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கும் எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.15 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்

2024 Mahindra XUV300

மஹிந்திரா XUV300 கார் தயாரிப்பாளரின் வரிசையில் உள்ள பழமையான மாடல்களில் ஒன்றாகும், மேலும் இது அடுத்த ஆண்டு ஒரு பெரிய மேம்படுத்தலுக்கு தயாராக உள்ளது. மாற்றங்களின் ஒரு பகுதியாக, சப்-4m எஸ்யூவி புதிய கேபின் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் அதே வேளையில் புதிய முன் மற்றும் பின்புற வடிவங்களைக் கொண்டிருக்கும். புதிய XUV300 காரை ADAS வசதியுடன் பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளுடன் மஹிந்திரா நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.9 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

மஹிந்திரா XUV.e8

Mahindra XUV.e8

மஹிந்திராவின் பிரபலமான நடுத்தர எஸ்யூவி, XUV700 என்று அழைக்கப்படும் இது XUV.e8 - என்ற ஆல்-எலக்ட்ரிக் பதிப்பையும் கொண்டதாக இருக்கிறது, இது 2024 -ல் அறிமுகப்படுத்தப்படலாம். இது 60 kWh மற்றும் 80 kWh இடையே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறலாம், டூயல்-மோட்டார் ஆல்-வீல் டிரைவ்டிரெய்ன் (AWD) தேர்வும் உள்ளது. XUV.e8 ஆனது சுமார் 450 கிமீ ரேஞ்ச் -ஐ வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.35 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 இறுதியில்

மஹிந்திரா XUV400 ஃபேஸ்லிஃப்ட்

mahindra xuv400 evதற்போதைய மஹிந்திரா XUV400 -ன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

பேஸ்லிப்டட் மஹிந்திரா XUV400 2024 -ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 மற்றும் இதே போன்ற அம்சங்கள் பட்டியலிலும் அதே வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV400 அதிக உரிமைகோரப்பட்ட ரேஞ்ச்- ஐ வழங்கும் ஆனால் தற்போதைய மாடலின் அதே பேட்டரி பேக்குடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.16 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் இரண்டாம் பாதி

கியா கார்கள்

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்

Kia Sonet facelift

அனேகமாக 2024 ஆம் ஆண்டில் கியா இந்தியாவிடமிருந்து முதல் அறிமுகம் சோனெட் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கும். புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -யின் டீஸர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, புதிய வடிவிலான வெளிப்புறம் மற்றும் இரண்டு புதிய அம்சங்கள் இருப்பதை டீஸர் காட்டுகிறது. ஹூண்டாய் வென்யூ N லைனில் காணப்படுவது போல் இது ADAS வசதியும் வழங்கப்படலாம். 2024 சோனெட் தற்போதுள்ள சோனெட்டின் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் தக்கவைத்துக் கொள்ளும், டீசல் யூனிட்டுடன் 6-ஸ்பீடு MT மீண்டும் கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.8 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 2024

புதிய கியா கார்னிவல்

2024 Kia Carnival

ஃபேஸ்லிஃப்ட் நான்காவது தலைமுறை கியா கார்னிவல் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது, இது 2024 -ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இது புதிய செல்டோஸின் அதே ஸ்டைலிங்கை கொண்டுள்ளது, புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பையும் புதிய சென்டர் கன்சோலையும் பெறுகிறது. உலகளவில், இது 3.5 லிட்டர் V6 மற்றும் 2.2 லிட்டர் டீசல் உட்பட மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.40 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஏப்ரல் 2024

மேலும் படிக்க: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

ஸ்கோடா கார்கள்

2024 ஸ்கோடா குஷாக்/ஸ்லாவியா

Skoda Kushaq and Slavia Elegance Editionதற்போதைய ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் படங்கள் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன

ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்கள் 2021 -ம் ஆண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன, இரண்டு கார்களும் புதிய வண்ணங்களுடன் சிறப்பு பதிப்புகளின் தற்போதைய பதிப்புகளுக்கு அப்பால் ஒரு மாடல் இயர் அப்டேட்டை பெறலாம். இருவரும் சிறிய ஒப்பனை மாற்றங்களுடன் வரலாம் என்றாலும், தங்கள் பிரிவு போட்டியாளர்களுடன் நீடிக்கும் வகையில் ADAS வசதியை சேர்க்கப்படுவதைத் தவிர, அம்சங்களில் பெரிதாக எந்த திருத்தத்தையும் எதிர்பார்க்க முடியாது. எஸ்யூவி-செடான் இரட்டையர்களின் இன்ஜினில் ஸ்கோடா எந்த மாற்றத்தையும் செய்யாது.

எதிர்பார்க்கப்படும் விலை: T.B.C.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

ஸ்கோடா ஆக்டேவியா RS iV

2024 Skoda Octavia RS iV

ஸ்கோடா ஆக்டேவியாவை முழுநேரமாக இந்தியாவுக்குக் கொண்டுவரத் திட்டமிடாமல் இருக்கலாம், ஆனால் இது செடானின் சிறந்த பதிப்பான சமீபத்தியது ஆக்டேவியா ஆர்.எஸ் காரை கொண்டுவரத் தயாராக உள்ளது - (நான்காவது தலைமுறை மாதிரியை அடிப்படையாகக் கொண்டது). 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 60 கிமீ வரை EV-ஒன்லி ரேஞ்ச் மற்றும் 245 PS ஆற்றல் மதிப்பீட்டைக் கொண்ட இந்தியாவின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்கோடா காராக இது இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.40 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஏப்ரல் 2024

ஸ்கோடா என்யாக் iV

Skoda Enyaq iV

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய MEB இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட கார் ஸ்கோடா என்யாக் iV ஆகும், இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் முதல் ஆல் எலக்ட்ரிக் வாகனமாக இது இருக்கலாம். சர்வதேச அளவில், இது 305 PS என மதிப்பிடப்பட்ட 77 kWh பேட்டரி பேக் உட்பட பல்வேறு பேட்டரி பேக்குகள் மற்றும் மோட்டார் செட்டப் -களுடன் இது கிடைக்கிறது. அதே பேட்டரி பேக் இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளது, இருப்பினும் ஒரு மோட்டார் குறைந்த செயல்திறன் உடன் சுமார் 500 கிமீ ரேஞ்ச் -ஐ வழங்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.60 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: பிப்ரவரி 2024

ஃபோக்ஸ்வேகன் கார்கள்

2024 ஃபோக்ஸ்வேகன் டைகுன்/விர்ட்டஸ்

Volkswagen Virtus and Volkswagen Taigun

தற்போதைய VW விர்ட்டஸ் மற்றும் டைகுன் -காரின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

ஸ்கோடா உடன்பிறப்புகளைப் போலவே, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் விர்ட்டஸ் ஆகிய இரண்டு கார்களும் 2024 ஆம் ஆண்டிற்கான சிறிய மாடல் ஆண்டு புதுப்பிப்புகளைப் பெறலாம். இரண்டும் முன்பக்கத்தில் சிறிய மாற்றங்களையும் சில அம்சங்களையும் பெறலாம், இதில் ADAS -ம் அடங்கும். அப்டேட் உடன் இன்ஜினில் எந்த மாற்றங்களும்  கிடைக்குமென எதிர்பார்க்கப்படவில்லை.

எதிர்பார்க்கப்படும் விலை: T.B.C.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

ஃபோக்ஸ்வேகன் ID.4 GTX

Volkswagen ID.4 GTX

ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 GTX என்பது ஸ்கோடா என்யாக் iV உடன் மெக்கானிக்கல் ரீதியாக தொடர்புடையது. எனவே, இது 77 kWh பேட்டரி பேக் (500 கிமீக்கு மேல் உரிமை கோரப்பட்ட வரம்புடன்) இங்கு வழங்கப்படும் அதே மின்சார பவர்டிரெய்ன் ஆப்ஷனாக கொண்டுள்ளது. இருப்பினும், GTX என்பது ID.4 கிராஸ்ஓவர் EV இன் ஸ்போர்ட்டி பதிப்பு மற்றும் கியா EV6 -க்கு போட்டியாக நிலைநிறுத்தப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

ரெனால்ட் கார்கள்

புதிய ரெனால்ட் டஸ்டர்

New Renault Duster

சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் 2024 -ம் ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனம் இரண்டாம் தலைமுறை மாடலை இந்தியாவுக்கு கொண்டு வரவில்லை. ஆனால் இப்போது, ​​மூன்றாம் தலைமுறை டஸ்டர் இந்தியாவில் கார் தயாரிப்பாளரின் புதிய முதன்மை காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டை ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் பெறலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் இரண்டாம் பாதி

ரெனால்ட் ட்ரைபர் டர்போ

Renault Triber

2021 முதல், ரெனால்ட் நிறுவனம் டிரைபர் எம்பிவி -யில் ஒரு பெப்பியர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகப்படுத்தப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அது இறுதியாக 2024 -ல் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், சப்-4m கிராஸ்ஓவர் MPV -க்கு அதே 100 PS இன்ஜினை கைகர் எஸ்யூவி -யில் இருந்து MT மற்றும் CVT ஆகிய இரண்டின் தேர்வுகளையும் வழங்குகிறது. பவர்டிரெய்ன் புதுப்பித்தலுடன் வேறு எந்த மாற்றங்களையும் எதிர்பார்க்க முடியாது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.9.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.C.

நிஸான் கார்கள்

புதிய நிஸான் எக்ஸ்-டிரெயில்

2024 Nissan X-Trail

நான்காவது தலைமுறை நிஸான் எக்ஸ்-டிரெயில் ஃபேஸ்லிப்டட் பதிப்பு  2023 ஆண்டில் வெளியிடப்பட்டது, மேலும் சமீபத்திய பதிப்பு 2024 -ம் ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட் (CBU) ஆக இந்தியாவுக்கு கொண்டு வரப்படும், எனவே இது இந்தியாவில் ஃபிளாக்ஷிப் நிஸான் தயாரிப்பாக இருக்கும். இந்த எஸ்யூவி ஆனது 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அல்லது இல்லாமல், 2WD மற்றும் AWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.40 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.C.

நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்

Nissan Magnite

தற்போதைய நிஸான் மேக்னைட்டின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் நிஸானின் ஒரே கார், மேக்னைட் மட்டுமே, 2020 டிசம்பரில் இது வெளியிடப்பட்டது. அதன் பின்னர், சப்-4m எஸ்யூவி -யானது சில சிறிய அப்டேட்டை மட்டுமே பெற்றுள்ளது, ஆனால் இப்போது குறிப்பிடத்தக்க அப்டேட்டுக்கு தயாராகியுள்ளதாக தெரிகிறது, இது அடுத்த ஆண்டு எப்போதாவது நடைபெறலாம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் அதன் வடிவமைப்பில் சில கூடுதல் அம்சங்களுடன் சில மாற்றங்களுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6.50 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: T.B.A.

சிட்ரோன்

சிட்ரோன் C3X

Citroen eC4X

சிட்ரோன் eC4X -ன் படம் குறிப்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

2023 -ம் ஆண்டில், C3 ஹேட்ச்பேக்கிலிருந்து இந்தியாவுக்காகத் தயார் செய்யப்பட்ட கிராஸ்ஓவர் செடான் போல தோற்றமளிக்கும் புதிய சிட்ரோன் காரின் சில ஸ்பை காட்சிகளை பார்த்தோம். இது C3 ஏர்கிராஸ் -க்கு மேலே ஒரு பிரீமியம் மற்றும் ஸ்டைலான மாடலாக நிலைநிறுத்தப்படும், அதே நேரத்தில் காம்பாக்ட் எஸ்யூவி போன்ற அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டை கொண்டிருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டின் தேர்வையும் இது பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம்

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

சிட்ரோன் C3X EV

Citroen eC4X

சிட்ரோன் eC4X இன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

C3X க்ராஸ்ஓவர் செடான் ஒரு எலக்ட்ரிக் டெரிவேட்டிவ் மற்றும் வழக்கமான மாடலில் சில வடிவமைப்பு மாற்றங்களுடன் இருக்கும். தற்போதைக்கு இந்த காரை பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை, ஆனால் இது நிச்சயமாக ஒரு பெரிய பேட்டரி பேக் -கை கொண்டிருக்கும். அதிக சக்தி வாய்ந்த மின்சார மோட்டார் மற்றும் eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை விட சிறந்த க்ளைம் ரேஞ்சை கொண்டிருக்கலாம். இது டாடா கர்வ்வ் EV -க்கு போட்டியாக நிலைநிறுத்தப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை: T.B.A.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: செப்டம்பர் 2024

இவை அனைத்தும் 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் கார்களாகும். நீங்கள் எந்த காரை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? மேலும், 2024 -ல் வெளியிடப்படவுள்ள வேறு ஏதாவது மாடலை பார்க்க விரும்புகிறீர்களா? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti ஸ்விப்ட்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா Seltos ev
    க்யா Seltos ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience