டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களின் அறிமுக விலை ஆஃபர் பிப்ரவரி மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ளது… கார்களின் விலையும் உயர்கிறது
டாடா நிறுவனம் அதன் மொத்த EV வரிசையில் உள்ள கார்களின் விலையும் உயர்த்தவுள்ளது.
-
வெவ்வேறு மாடல்கள் மற்றும் வேரியன்ட்களுக்கு ஏற்ப விலை உயர்வில் மாற்றம் இருக்கும்.
-
டாடாவின் முழு வரிசையிலும் விலை 0.7 சதவீதம் (சராசரியாக) அதிகரிக்கப்படும்.
-
தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதே இந்த நடவடிக்கைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாடாவில் தற்போது நான்கு EV -கள் அடங்கிய மொத்தம் 12 மாடல்கள் விற்பனையில் உள்ளன.
இந்திய வாகனத் துறையில் உள்ள பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே 2024 ஆம் ஆண்டிற்கான விலை உயர்வை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இப்போது அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் பிப்ரவரி 2024 முதல் அதன் முழு வரிசை கார்களின் விலையை உயர்த்தப்போவதாக இப்போது அறிவித்துள்ளது. இதில் டாடா நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிப்ட்களின் அறிமுக விலையில் மாற்றம் இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த கார்கள் வெளியானதிலிருந்து சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை நடைமுறையில் இருந்து அறிமுக விலை ஆஃபர் முடிவுக்கு வரவுள்ளது.
விலை உயர்வுக்கான காரணம்
தயாரிப்பு செலவீனங்கள் அதிகரித்து வருவதே விரைவில் அமல்படுத்தப்பட உள்ள விலை உயர்வுக்கு காரணம் என டாடா கூறியுள்ளது. இது அதன் வரிசையில் 0.7 சதவிகிதம் (சராசரியாக) அதிகரிக்கும், இதில் EV -களும் அடங்கும்.
மாடல் | விலை வரம்பு |
டியாகோ |
ரூ.5.60 லட்சம் முதல் ரூ.8.20 லட்சம் வரை |
டியாகோ NRG |
ரூ.6.70 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரை |
பன்ச் |
ரூ.6 லட்சம் முதல் ரூ.10.10 லட்சம் வரை |
டிகோர் |
ரூ.6.30 லட்சம் முதல் ரூ.8.95 லட்சம் |
ஆல்ட்ரோஸ் |
ரூ.6.60 லட்சம் முதல் ரூ.10.74 லட்சம் |
நெக்ஸான் |
ரூ.8.10 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை |
ஹாரியர் |
ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் |
சஃபாரி |
ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் |
டாடா.ev லைன்அப் |
|
டியாகோ EV |
ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.04 லட்சம் |
டிகோர் EV |
ரூ.12.49 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் |
பன்ச் EV |
ரூ.11 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் |
நெக்ஸான் EV |
ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் |
டாடாவின் தற்போதைய வரிசையில் மொத்தம் 12 மாடல்கள் உள்ளன, இதில் நான்கு EV -களும் அடங்கும். மிகவும் விலை குறைவான மாடல் டியாகோ (ரூ. 5.60 லட்சத்தில் தொடங்குகிறது), அதே சமயம் சஃபாரி அதிகம் விலை உயர்ந்த (முதலில் ரூ. 27.34 லட்சம்) மாடலாக உள்ளது.
மேலும் படிக்க: டாடா பன்ச் EV vs டாடா Tiago EV vs டாடா டிகோர் EV vs டாடா நெக்ஸான் EV: விவரங்கள் ஒரு ஒப்பீடு
டாடாவின் எதிர்காலத் திட்டங்கள்
டாடா 2024 ஆம் ஆண்டில் ஏழு புதிய கார்களை அறிமுகப்படுத்தும், மேலும் சமீபத்தில் பன்ச் EV அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சமீபத்தில்Tata Harrier EV -யின் காப்புரிமை படம் ஆன்லைனில் வெளியானது… 2024 ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் AMT