Tata Harrier EV -யின் காப்புரிமை படம் ஆன்லைனில் வெளியானது… 2024 ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
published on ஜனவரி 24, 2024 02:31 pm by rohit for டாடா ஹெரியர் ev
- 103 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட கான்செப்ட் ஹாரியர் EV காரில் பார்த்த வடிவத்தை காப்புரிமை படத்தில் பார்க்க முடிகின்றது.
-
2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஹாரியர் EV -யை டாடா ஒரு கான்செப்ட் ஆக அறிமுகம் செய்தது.
-
இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம் மேலும் இதன் விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
-
காப்புரிமைப் படம், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி போன்ற இணைக்கப்பட்ட LED டெயில்லைட்களை காட்டுகிறது, புதிய அலாய் வீல்களையும் பார்க்க முடிகின்றது.
-
பல பேட்டரி பேக்குகள் மற்றும் AWD ஆப்ஷனுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹாரியர் EV ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில், ஒரு கான்செப்ட் ஆக காட்சிக்கு வைக்கப்பட்டது அப்போதே அது உற்பத்திக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இப்போது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காரின் வடிவமைப்பு இப்போது காப்புரிமை பெற்றுள்ளது, மேலும் அந்த படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இது எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் உற்பத்தி-ஸ்பெக் விவரங்களைக் காட்டுகிறது.
காப்புரிமை விண்ணப்பம் மூலம் தெரிய வந்த விவரங்கள் என்ன ?
டிரேட்மார்க் செய்யப்பட்ட படம், சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்ட எஸ்யூவி -யின் சமீபத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஹாரியர் EV -யின் பின்புறத்தைக் காட்டுகிறது. அதாவது, காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பதிப்பில் இருக்கும் அலாய் வீல்களுடன் ஒப்பிடும்போது, படத்தில் புதிய அலாய் வீல்கள் இருப்பதை பார்க்க முடிகின்றது. ஆட்டோ ஷோவில். டெயில்கேட்டில் 'ஹாரியர் EV' பேட்ஜ் இல்லையென்றாலும், டாடாவின் நவீன EV -களுக்கு ஏற்ப முன்பக்க கதவின் கீழ் பகுதியில் '.ev' எழுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் சந்தையில் நுழைந்த ஹாரியரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பின் பின்புறம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தெரிகிறது, மேலும் அதே அம்சங்களை (இங்கே காணப்பட்ட பனோரமிக் சன்ரூஃப் உட்பட) பெறலாம். இருப்பினும், ஹாரியர் EV -யின் முன்பக்கமானது அதன் டீசல் பவர்டு காருடன் ஒப்பிடும் போது சிறிய வேறுபாடுகளையே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்
காரில் கொடுக்கப்படவுள்ள பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், டாடா பல்வேறு பேட்டரி பேக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்களின் ஆப்ஷன்களுடன் காரை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இது 500 கிமீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் மற்றும் ஆல்-வீல் டிரைவ் டிரெய்ன் (AWD) ஆப்ஷனும் இருக்கலாம். ஹாரியர் EV ஆனது டாடாவின் புதிய Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்ச் EV-க்கும் அதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 2025 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள டாடா EV -கள் என்னவென்று தெரியுமா ?
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
டாடா ஹாரியர் EV 2024 ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலை ரூ. 30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும். இதன் நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV.e8 இருக்கும். மேலும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்கு விலை உயர்ந்த, பெரிய மாற்றாகவும் இருக்கும்
மேலும் படிக்க: டாடா ஹாரியர் டீசல்
0 out of 0 found this helpful