வரும் பண்டிகைக் காலத்தில் வெளியாகவுள்ள எலக்ட்ரிக் கார்கள்
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் எம்ஜியின் மூன்றாவது EV அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இரண்டு பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் எஸ்யூவி -களும் வெளியாகவுள்ளன.
இந்தியாவில் EV -கள் பிரபலமடைந்து வருகின்றன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையானது அதிகரித்தவாறு உள்ளது. EV சார்ஜிங் நெட்வொர்க் இன்னும் வளரும் கட்டத்தில் இருந்தாலும் பல வாடிக்கையாளார்கள் EV -களை தேர்வு செய்கின்றனர். ஏனெனில் அவற்றின் விரைவான பவர் டெலிவரி, நீண்ட காலம் பயன்படுத்தும் போது குறைவான செலவீனம் மற்றும் ஒப்பீட்டளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயல்பு ஆகியவை நிறைய மக்களை இந்த கார்களின் பக்கம் ஈர்க்கின்றன. 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் டாடா கர்வ் EV பெரிய அறிமுகமாக உள்ளது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் டாப் 4 EV -களை பற்றி இங்கே பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-மேபெக் EQS 680 எஸ்யூவி
வெளியீட்டு தேதி: செப்டம்பர் 5, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 3.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்)
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் தனது முதல் ஆல் எலக்ட்ரிக் மேபேக் EQS 680 காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குரோம் ஸ்ட்ரிப்களை கொண்ட பெரிய பிளாக் பேனல் கிரில் மற்றும் உலகளவில் விற்கப்படும் ஸ்டாண்டர்டான EQS எஸ்யூவி -யில் இருந்து தனித்து நிற்கும் தனித்துவமான டூயல்-டோன் பெயிண்ட் வொர்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உள்ளே தனித்துவமான வசதியாக மூன்று ஸ்கிரீன் செட்டப் மற்றும் பின்புற பயணிகளுக்கு டூயல் 11.6-இன்ச் டிஸ்பிளேக்கள் உள்ளன.
சர்வதேச-ஸ்பெக் EQS 680 ஆனது 658 PS மற்றும் 950 Nm அவுட்புட்டை கொடுக்கும் செய்யும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது, இது 600 கி.மீ வரை ரேஞ்சை வரம்பை கொடுக்கும் திறன் கொண்டது. இருப்பினும் இந்தியா-ஸ்பெக் மாடலுக்கான பவர்டிரெய்ன் விவரங்களை மெர்சிடிஸ் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
எம்ஜி வின்ட்சர் இவி
வெளியீட்டு தேதி: செப்டம்பர் 11, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
இந்தியாவில், MG நிறுவனம் தனது மூன்றாவது ஆல் எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி -யை அறிமுகப்படுத்த உள்ளது. DRL -களுடன் எல்இடி ஹெட்லைட்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், நிலையான பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற முக்கிய வசதிகள் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. எம்ஜி நிறுவனம் ஏற்கனவே அதன் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களின் டீசரை வெளியிட்டுள்ளது.
இது 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் 50.6 kWh பேட்டரி பேக்குடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா-ஸ்பெக் மாடல் 460 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இருப்பினும் இந்தியா-ஸ்பெக் மாடல் இது ARAI சான்றளிக்கப்பட்டு சற்று மாறுபட்ட ரேஞ்ச் உடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
மேலும் பார்க்க: MG Windsor EV -யின் மேலும் ஒரு டீசர் வெளியானது
கியா EV9
வெளியீட்டு தேதி: அக்டோபர் 3, 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
கியா இந்திய சந்தையில் அதன் ஃபிளாக்ஷிப் ஆல் எலக்ட்ரிக் காரான EV9 -யை அக்டோபரில் அறிமுகப்படுத்த உள்ளது. இது EV6 உடன் விற்கப்படும் மற்றும் பாக்ஸி, மஸ்குலர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது டூயல் 12.3-இன்ச் திரை செட்டப்பை கொண்டுள்ளது (ஒன்று டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்), 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளுடன் இது கிடைக்கலாம்.
உலகளவில் இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: ஒரு 76.1 kWh மற்றும் 99.8 kWh, 541 கி.மீ வரை ரேஞ்சை கொண்டுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டு பதிப்புகளிலும் வழங்கப்படுகிறது.
ஃபேஸ்லிப்டட் BYD e6
வெளியீட்டு தேதி: அறிவிக்கப்பட வேண்டும்
எதிர்பார்க்கப்படும் விலை: உறுதி செய்யப்பட வேண்டும்
சீன வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியாவில் BYD ஃபேஸ்லிப்டட் e6 காருக்கான டீசரை வெளியிட்டுள்ளது. அப்டேட்டட் ஆல்-எலக்ட்ரிக் MPV ஏற்கனவே உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது மற்றும் புதிய LED லைட்டிங் மற்றும் டூயல்-டோன் 17-இன்ச் அலாய் வீல்களுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங் கொண்டுள்ளது. 12.8-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகிய வசதிகள் உடன் இது வரலாம்.
e6 -ன் சர்வதேச-ஸ்பெக் மாடல்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கிறது: 55.4 kWh பேட்டரி 163 PS எலக்ட்ரிக் மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் 71.8 kWh பேட்டரி 204 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பிந்தையது 530 கி.மீ ரேஞ்சை கொடுக்கக்கூடியது மேலும் வெஹிகிள் டூ லோடிங் வசதியையும் கொண்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள எந்த மாடல் காரை பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைப் பற்றி கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.