MG Windsor EV -யின் மேலும் ஒரு டீசர் வெளியானது
published on செப் 03, 2024 06:18 pm by dipan for எம்ஜி விண்ட்சர் இவி
- 56 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய டீஸரில் வெளிப்புற வடிவமைப்பை பார்க்க முடிகிறது. இது குளோபல்-ஸ்பெக் வூலிங் கிளவுட் EV -யை அடிப்படையாகக் கொண்டது.
-
இந்தியாவில் MG நிறுவனத்தின் மூன்றாவது EV -யாக விண்ட்சர் EV விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
-
புதிய டீஸரில் LED ஹெட்லைட்கள், கனெக்டட் LED DRL -கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.
-
முந்தைய டீஸர்கள் முலமாக 15.6 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஃபிக்ஸ்டு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 135 டிகிரி சாய்ந்த பின் இருக்கை ஆகியவை கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
-
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களாகும்.
-
இது 50.6 kWh பேட்டரியை மாற்றியமைக்கப்பட்ட ARAI-மதிப்பிடப்பட்ட ரேஞ்ச் உடன் வர வாய்ப்புள்ளது.
-
விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி வின்ட்சர் இவி செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. மேலும் கார் தயாரிப்பாளர் இந்த வரவிருக்கும் EV -யை சில காலமாக டீசரை வெளியிட்டு வருகிறது. MG இப்போது இந்த கிராஸ்ஓவர் EV -ன் எக்ஸ்ட்டீரியரின் டீசரை வெளியிட்டுள்ளது. இதில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் மற்றும் தயாரிப்புக்கு தயாராகவுள்ள காரின் ஒரு பகுதியாக இருக்கும் அலாய் வீல் வடிவமைப்பை காட்டுகிறது. இந்த புதிய டீசரில் நாம் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் இங்கே பார்ப்போம்:
நாம் என்ன பார்க்க முடிகிறது ?
MG விண்ட்சர் EV காரானது சர்வதேச சந்தையில் விற்கப்படும் வூலிங் கிளவுட் EV -யை அடிப்படையாகக் கொண்டது. புதிய டீஸர் மூலமாக இந்திய மாடலின் வடிவமைப்பு சர்வதேச காரை போலவே இருக்கும் என்பதை உறுதியாகியுள்ளது. அதேபோல் முன்பக்கத்தில் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED DRL -களையும் கொண்டிருக்கும். இருப்பினும் வித்தியாசமான விஷயம் என்னவென்றால் இந்தியா-ஸ்பெக் கிளவுட் EV முன்பக்க பம்பருக்கு மேலே ஒரு மோரிஸ் கேரேஜஸ் என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். MG லோகோ பின்பக்கமாக கனெக்டட் LED DRL ஸ்டிரிப்க்கு கீழே அமைந்துள்ளது.
அதன் ஃபிரீ-புளோட்டிங் டிஸைன் மற்றும் ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் (சர்வதேச-ஸ்பெக் கிளவுட் EV போன்ற வடிவமைப்பு) ஆகியவற்றைப் தவிர பக்கவாட்டு தோற்றம் அதிகமாக டீசரில் காட்டப்படவில்லை. சார்ஜிங் போர்ட் முன் ஃபெண்டரில் அமைந்துள்ளது. பின்புறத்தில் வின்ட்சர் EV ஆனது கனெக்டட் LED டெயில் லைட் செட்டப் உள்ளது. இது EV -யின் பின்புற முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது . டெயில் லைட்களின் கீழ் வின்ட்சர் பேட்ஜிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: MG Windsor EV-இன் ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்!
MG விண்ட்சர் EV: ஒரு கண்ணோட்டம்
ZS EV மற்றும் காமெட் EV -க்கு பிறகு இந்தியாவில் MG விற்பனைக்கு கொண்டு வரவுள்ள மூன்றாவது EV ஆக MG விண்ட்சர் EV இருக்கும். முந்தைய ஸ்பை ஷாட்கள் டூயல்-டோன் கேபின் தீம் இருப்பதை காட்டியுள்ளன. ஒரு 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே (அநேகமாக 8.8-இன்ச் யூனிட்) மற்றும் நிலையான பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது 135 டிகிரி சாய்வான பின்புற பெஞ்ச் சீட் மற்றும் பின்புற ஏசி வென்ட்களையும் பெறும். இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், எலக்ட்ரிக்கலி அடெஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றையும் பெறலாம். சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளும் வழங்கப்படலாம்.
MG விண்ட்சர் EV எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
MG விண்ட்சர் EV ஆனது 50.6 kWh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (சர்வதேச மாடலை போன்றது). இது 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் மோட்டாரை இயக்கும். இந்தோனேசியா-ஸ்பெக் பதிப்பு 460 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கும். ஆனால் இந்திய மாடல் ARAI சோதனைக்குப் பிறகு அதிகரித்த ரேஞ்ச் உடன் வரலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG விண்ட்சர் EV விலை ரூ. 20 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் ம் MG ZS EV இது மிகவும் விலை குறைவான மாற்றாக இருக்கும். மேலும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV -க்கு அதிக பிரீமியம் ஆப்ஷனாக இருக்கும்.
MG விண்ட்சர் EV -யின் வெளிப்புற வடிவமைப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.