சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள் இங்கே

published on ஜூலை 01, 2024 05:59 pm by rohit for tata altroz racer

ஸ்போர்ட்டியர் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் முதல் எஸ்யூவி -களின் லிமிடெட் எடிஷன்கள் வரை, இந்திய வாகன சந்தையில் 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான புதிய கார்களின் விவரங்கள்.

2024 ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் புதிய கார் வெளியீடுகளின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் பெரிய ஆரவாரமின்றி இருந்தாலும், சில புதிய மாடல்கள் மற்றும் சில எஸ்யூவி -களின் ஸ்பெஷல் எடிஷன்களையும் கடந்த மாதம் பார்க்க முடிந்தது. இதில் ஸ்போர்ட்டியர் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர், மற்றும் ஜீப் மெரிடியன் X -ன் மறு அறிமுகத்தையும் கூட பார்க்க முடிந்தது. இந்த ஜூன் மாதம் நடந்த அனைத்து கார் வெளியீடுகளின் முழுமையான பட்டியலை பார்ப்போம்:

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர்

விலை வரம்பு: ரூ.9.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம்

ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ் ​​-ன் ஸ்போர்ட்டியர் பதிப்பான டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் 2024 ஜூன் மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடு ஆகும். வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற புதிய வசதிகளை கொண்டிருக்கும் போது வெளிப்புறத்தில் சில காஸ்மெட்டிக் அப்டேட்களுடன் வருகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் மட்டுமே இது கிடைக்கும். மேலும் சமீபத்திய நெக்ஸானிலிருந்து கடன் வாங்கப்பட்ட 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெற்ற மிகப் பெரிய அப்டேட்களில் ஒன்றாகும்.

டாடா ஆல்ட்ரோஸ் ​​புதிய வேரியன்ட்கள்

விலை வரம்பு: ரூ.9 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம்

டாடா நிறுவனம் ஆல்ட்ரோஸ் ரேசரை அறிமுகப்படுத்தியபோது ஆல்ட்ரோஸ் XZ லக்ஸ் மற்றும் XZ+S லக்ஸ் இரண்டு புதிய ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில் தற்போதுள்ள XZ+ OS வேரியன்ட் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பெரிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட புதிய வசதிகளை டாடா நிறுவனம் ஆல்ட்ரோஸ் ரேசரில் இருந்து வழங்கியுள்ளார். அதன் பவர்டிரெய்ன் வரிசையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை மற்றும் ஹேட்ச்பேக் முன்பு இருந்த அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் இன்னும் கிடைக்கிறது.

ஸ்கோடா குஷாக் ஓனிக்ஸ் AT

விலை: ரூ.13.49 லட்சம்

ஸ்கோடா குஷாக் 2023 ஆண்டில் ஒரு புதிய மிட்-ஸ்பெக் ஓனிக்ஸ் வேரியன்ட்டை பெற்றது. ஆனால் அது மேனுவல் டிரான்ஸ்மிஷன் செட்டப்பில் மட்டுமே கிடைத்தது. 2024 ஜூன் மாதத்தில் குஷாக் ஓனிக்ஸ் பதிப்பில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் தேர்வை இந்தியாவில் மேனுவல் எண்ணை விட ரூ.60,000 பிரீமியத்தில் ஸ்கோடா அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் புதிய கார்களுக்கு சமீபத்தில் ஒரு புதிய வேரியன்ட்கள் சேர்க்கப்பட்டன. 2024 ஜூன் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விலையும் குறைக்கப்பட்டது.

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி எடிஷன்

விலை: ரூ.11.82 லட்சம் முதல்

கிரிக்கெட் ஜாம்பவான் MS தோனியால் ஈர்க்கப்பட்ட சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் ஒரு புதிய லிமிடெட் ரன் எடிஷனை அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்தியாவில் அதன் விலையையும் அறிவித்தது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் தோனி எடிஷன் வெளிப்புறத்தில் சில காஸ்மெட்டிக் டீக்கால்களை பெறுகிறது. மற்றும் கேபினுக்குள் ஒரு சில அப்டேட்கள், ஜெர்சி எண் ‘7’ மற்றும் முன் இருக்கைகளில் பொறிக்கப்பட்ட தோனியின் கையெழுத்து ஆகியவை இந்த காரில் உள்ளன. ஸ்பெஷல் எடிஷன் எஸ்யூவி -யின் 100 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும், மேலும் இது ஒரு புதிய அம்சத்தை டாஷ்கேம் வடிவில் மட்டுமே பெறுகிறது. இது C3 ஏர்கிராஸ் காரின் தற்போதைய டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னுடன் தொடர்கிறது.

MG குளோஸ்டர் ஸ்நோஸ்டோர்ம் மற்றும் டெஸர்ட்ஸ்டோர்ம் எடிஷன்கள்

விலை வரம்பு: ரூ 41.05 லட்சம் முதல்

ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகமான எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷனை தொடர்ந்து 2024 ஜூன் மாதத்தில் சாண்ட்ஸ்டார்ம் மற்றும் டெஸர்ட் ஸ்டார்ம் எனப்படும் மேலும் இரண்டு சிறப்பு ‘ஸ்டோர்ம்’ பதிப்புகளை எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இரண்டு சிறப்பு பதிப்புகளும் வெளிப்புறத்தில் நுட்பமான வடிவமைப்பு அப்டேட்களை பெறுகின்றன. அதே நேரத்தில் உட்புறங்களில் வொயிட் ஸ்டிச் கொண்ட புதிய பிளாக்டு-அவுட் தீம் உள்ளது. இரண்டு கார்களும் தனித்து நிற்க பல்வேறு டீலர்-லெவல் ஃபிட்டிங் பாகங்களை பொருத்திக் கொள்ளலாம். இந்த ஸ்பெஷல் எடிஷன்களின் இன்ஜினில் MG எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் அவை எஸ்யூவி -யின் அதே டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் தொடர்கின்றன.

ஜீப் மெரிடியன் எக்ஸ்

விலை: ரூ 34.27 லட்சம்

ஜீப் மெரிடியன் என்ட்ரி லெவல் லிமிடெட் (O) வேரியன்ட்டின் அடிப்படையில் இந்தியாவில் ஜூன் 2024 -ல் அதன் சிறப்பு பதிப்பான ‘X’ மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பக்கவாட்டு படிகள் மற்றும் அடியில் வொயிட் லைட்ஸ், கிரே ரூஃப், கிரே பாக்கெட்டுகளுடன் கூடிய அலாய் வீல்கள் மற்றும் பக்கவாட்டு மோல்டிங்குகள் என சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளே, பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புட் வெல் இல்லுமினேஷன், பிரீமியம் கார்பெட் பாய்கள், நான்கு ஜன்னல்களுக்கும் சன் ஷேட்கள் மற்றும் ஏர் ஃபியூரிபையர் போன்ற வசதிகள் உள்ளன. மெரிடியன் ‘X’ அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஸ்டாண்டர்ட் வேரியன்ட்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இரண்டுடன் ஆப்ஷனலான 4-வீல் டிரைவ்டிரெய்னுடன் (4WD) வழங்கப்படுகிறது.

2024 மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் மற்றும் GLC

விலை: ரூ.61.85 லட்சம் முதல் (சி-கிளாஸ்), ரூ.75.90 லட்சம் முதல் (ஜிஎல்சி)

மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் பின்னர் மற்றும் GLC இரண்டு கார்களும் இந்தியாவில் 2024 ஜூன் மாதத்தில் எஸ்யூவிக்கான மாடல் ஆண்டு அப்டேட்களை பெற்றன. அப்டேட்களில் புதிய வேரியன்ட் மற்றும் சிறிய உட்புற டிரிம் மாற்றங்கள் (சி-கிளாஸ் -க்கு) அடங்கும். அதே நேரத்தில் GLC இப்போது பின் பக்க ஏர்பேக்குகளுடன் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் சீட்களை பெறுகிறது. இரண்டு மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படுகின்றன. இதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது.

இவை அனைத்தும் 2024 ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார்கள் ஆகும். உங்களுக்கு மிகவும் பிடித்த கார் எது? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியாவுக்கானவை (அறிமுக விலை)

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ​​ரேசர் ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 33 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் Racer

Read Full News

explore similar கார்கள்

ஸ்கோடா குஷாக்

Rs.10.89 - 18.79 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்19.76 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூலை சலுகைகள்ஐ காண்க

டாடா ஆல்டரோஸ்

Rs.6.65 - 11.35 லட்சம்* get சாலை விலை
டீசல்23.64 கேஎம்பிஎல்
சிஎன்ஜி26.2 கிமீ / கிலோ
பெட்ரோல்19.33 கேஎம்பிஎல்
ஜூலை சலுகைகள்ஐ காண்க

மெர்சிடீஸ் சி-கிளாஸ்

Rs.61.85 - 69 லட்சம்* get சாலை விலை
டீசல்23 கேஎம்பிஎல்
பெட்ரோல்16.9 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
டீலர்களை தொடர்பு கொள்ள

சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ்

Rs.9.99 - 14.11 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்17.6 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூலை சலுகைகள்ஐ காண்க

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.6.65 - 11.35 லட்சம்*
Rs.4.99 - 7.09 லட்சம்*
Rs.3.99 - 5.96 லட்சம்*
Rs.4.26 - 6.12 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை