ஒரு பிரீமியம் ஹேட்பேக்கை டெலிவரி எடுக்க இவ்வளவு நாள் காத்திருக்கனுமா ? ஆகஸ்ட் மாத நிலவரம் இங்கே
published on ஆகஸ்ட் 20, 2024 02:35 pm by yashika for மாருதி பாலினோ
- 84 Views
- ஒரு கருத்தை எழுதுக
மொத்தமுள்ள 6 பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் 3 கார்களை புனே, சூரத் மற்றும் பாட்னா போன்ற சில நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுத்துக் கொள்ளலாம்.
பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி உட்பட பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்ட கார்கள் விற்பனையாகி வருகின்றன. மாருதி பலேனோ, ஹூண்டாய் i20 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் உள்ளிட்ட 6 மாடல்களை தேர்வு செய்வதற்கான ஆப்ஷன் உங்களுக்கு உள்ளது. ஆகஸ்ட்டில் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரை முன்பதிவு செய்வதற்கு முன் இந்தியாவின் டாப் 20 நகரங்களில் வெயிட்டிங் பீரியட் விவரங்களை பாருங்கள்.
நகரம் |
மாருதி பலேனோ |
டாடா ஆல்ட்ரோஸ் |
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் |
ஹூண்டாய் i20 |
ஹூண்டாய் i20 N லைன் |
டொயோட்டா கிளான்ஸா |
புது டெல்லி |
காத்திருக்க தேவையில்லை |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1 மாதம் |
2 மாதங்கள் |
0.5-1 மாதம் |
பெங்களூரு |
1 வாரம் |
1.5-2 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
1 மாதம் |
1 மாதம் |
3 மாதங்கள் |
மும்பை |
1-1.5 மாதங்கள் |
1 மாதம் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
ஹைதராபாத் |
காத்திருக்க தேவையில்லை |
2-2.5 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
புனே |
காத்திருக்க தேவையில்லை |
காத்திருக்க தேவையில்லை |
1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
சென்னை |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
3 மாதங்கள் |
ஜெய்ப்பூர் |
காத்திருக்க தேவையில்லை |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
அகமதாபாத் |
1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
குருகிராம் |
1 மாதம் |
1 மாதம் |
1 மாதம் |
2 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
லக்னோ |
1-1.5 மாதங்கள் |
1.5 மாதங்கள் |
1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
என்.ஏ. |
கொல்கத்தா |
1.5 மாதம் |
1-1.5 மாதங்கள் |
1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1 மாதம் |
தானே |
காத்திருக்க தேவையில்லை |
2 மாதங்கள் |
1-1.5 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
1 மாதம் |
சூரத் |
காத்திருக்க தேவையில்லை |
1.5-2 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
2.5-3 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
காசியாபாத் |
காத்திருக்க தேவையில்லை |
1.5 மாதங்கள் |
1-2 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
சண்டிகர் |
காத்திருக்க தேவையில்லை |
2-2.5 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
கோயம்புத்தூர் |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
3 மாதங்கள் |
பாட்னா |
காத்திருக்க தேவையில்லை |
1.5-2 மாதங்கள் |
2-2.5 மாதங்கள் |
3 மாதங்கள் |
1 மாதம் |
காத்திருக்க தேவையில்லை |
ஃபரிதாபாத் |
காத்திருக்க தேவையில்லை |
1-2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
இந்தூர் |
காத்திருக்க தேவையில்லை |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
காத்திருக்க தேவையில்லை |
நொய்டா |
காத்திருக்க தேவையில்லை |
2 மாதங்கள் |
2 மாதங்கள் |
2.5 மாதங்கள் |
2.5-3 மாதங்கள் |
3 மாதங்கள் |
முக்கிய விவரங்கள்:
-
மாருதி பலேனோ இந்த பட்டியலில் குறைந்த வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது. புது டெல்லி, ஹைதராபாத், சண்டிகர் மற்றும் நொய்டா உட்பட 10 -க்கும் மேற்பட்ட நகரங்களில் உடனடியாக டெலிவரி எடுக்கலாம். சராசரியாக பார்க்கப்போனால் இது சுமார் அரை மாதம் வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது.
-
டாடா ஆல்ட்ரோஸ் சராசரியாக 2 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியடை கொண்டுள்ளது. புனேவில் மட்டுமே தங்கள் ஹேட்ச்பேக்கை உடனடியாகப் பெற முடியும்.
-
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் -ன் ஸ்போர்ட்டியர் எடிஷனான டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அதன் வழக்கமான காரின் வெயிட்டிங் பீரியட் போலவே உள்ளது. இருப்பினும் ஜெய்ப்பூரில் மட்டும் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
-
ஹூண்டாய் i20 மற்றும் i20 N லைன் சராசரியாக இரண்டரை மாதங்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது. ஜெய்ப்பூர், சூரத், சண்டிகர் மற்றும் காசியாபாத் போன்ற நகரங்களில் i20 -ன் இரண்டு எடிஷன்களுக்கும் நீங்கள் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
-
மாருதி சுஸூகி பலேனோவின் டொயோட்டா நிறுவன பதிப்பான கிளான்ஸா -வுக்கு சராசரியாக 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். மறுபுறம், சூரத், பாட்னா மற்றும் ஃபரிதாபாத்தில் காரை உடனடியாக வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
புதிய காருக்கான சரியான வெயிட்டிங் பீரியட் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட், கலர் மற்றும் டீலர்ஷிப்பில் உள்ள ஸ்டாக் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி பலேனோ AMT