2024 ஆண்டில் வெளியாகவுள்ள 7 புதிய டாடா கார்கள்
published on டிசம்பர் 19, 2023 08:03 pm by rohit for டாடா பன்ச் EV
- 84 Views
- ஒரு கருத்தை எழுதுக
2024 ஆம் ஆண்டில், டாடா குறைந்தபட்சம் மூன்று புதிய மின்சார எஸ்யூவி -களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்
2023 டாடா நிறுவனத்தின் சார்பில் நம்மால் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்டுள்ள கார்களை பார்க்க முடியவில்லை. ஆனால் வரும் ஆண்டில் டாடா ஏழு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், 2024 -ம் ஆண்டில் பெரிய நிகழ்வுகளுக்கு தயாராகுங்கள். இவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூபே பாணியிலான காம்பாக்ட் எஸ்யூவி, டாடா கர்வ்வ் மற்றும் மூன்று EV -கள் ஆகியவை அடங்கும். அதன் முழுமையான பட்டியல் இங்கே:
டாடா பன்ச் EV
டாடா பன்ச் EV 2024 -ல் வெளியாகவுள்ள டாடாவின் முதல் மாடலாக இருக்கலாம். 2023 முழுவதும், ஆன்லைனில் வெளிவந்த பல்வேறு ஸ்பை ஷாட்களை நாம் பார்த்துள்ளோம். 2024 ஆம் ஆண்டு சந்தைக்கு வரவிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி, புதிய அம்சங்களுடன் சமீபத்தில் அப்டேட்டட் நெக்ஸானை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். பன்ச் EV ஆனது 500 கிமீ ரேஞ்சை கொண்டிருக்கும் என்று டாடா கூறுகிறது, இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுக்கு இடையே ஒரு தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஜனவரி 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.12 லட்சம்
டாடா கர்வ்வ் EV
டாடா நெக்ஸான் EV மற்றும் வரவிருக்கும் டாடா ஹாரியர் EV ஆகிய கார்களுக்கு இடையே டாடா கர்வ்வ் EV இடையே ஒரு புதிய எஸ்யூவி கூபே காராக 2024 -ம் ஆண்டில் இது வெளியிடப்படலாம் . புதிய நெக்ஸான் EV போன்ற பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற அம்சங்களை டாடா வழங்கும். கர்வ்வ் EV பல பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 500 கிமீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை வழங்குவதற்காக நெக்ஸான் EV -யை விட மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் வர வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.20 லட்சம்
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட்
தற்போதைய டாடா பன்ச் -ன் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் இருந்த டாடா பன்ச் டாடாவின் போர்ட்ஃபோலியோவில் அப்டேட்டை பெறும் அடுத்த கார் ஆக இருக்கும். ஃபேஸ்லிப்டட் பன்ச் ஆனது பன்ச் EV -க்கு ஏற்ப அப்டேட்களை வெளியிலும் உள்ளேயும் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் கூடுதலான உபகரணத் தொகுப்புடன் பெறலாம். மைக்ரோ எஸ்யூவி -யின் இன்ஜினில் எந்த மாற்றங்களையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அறிவிப்பு இனிமேல் வெளியாகும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6.20 லட்சம்
இதையும் பாருங்கள்: 2023 இன் இறுதியில் அதிகபட்ச தள்ளுபடியுடன் கூடிய முதல் 10 கார்கள்
டாடா கர்வ்வ்
டாடா Curvv EV -யின் அறிமுகத்திற்குப் பிறகு, அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பையும் நாம் பார்க்கலாம். டாடா கர்வ்வ், இது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரலாம். இந்த புதிய மாடல், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான எஸ்யூவி -களை உள்ளடக்கிய, காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் டாடாவின் என்ட்ரியாக இருக்கும். கர்வ்வ் EV -யில் உள்ள அம்சங்களின் தொகுப்பை கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வெளியாகலாம்..
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 நடுப்பகுதி
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10.50 லட்சம்
டாடா அல்ட்ரோஸ் ரேஸர்
டாடா அல்ட்ரோஸ் ரேஸர் வழக்கமான ஆல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியர் பதிப்பாக ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் முதன்முதலில் அறிமுகமானது. உள்ளேயும் வெளியேயும் காஸ்மெட்டிக் மேம்பாடுகளுடன், இந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட நெக்ஸானில் பல புதிய அம்சங்களைக் கொண்டிருக்கலாம். நெக்ஸான் காரில் உள்ள 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் வழங்கப்படுவதைத் தவிர, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் எதிர்பார்க்க முடியாது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சம்
டாடா நெக்ஸான் டார்க்
டாடா நெக்ஸான் அறிமுகமாகி சில மாதங்கள் கடந்து விட்டன. இருப்பினும், கார் தயாரிப்பாளர் இன்னும் முன் ஃபேஸ்லிப்ட் மாடலுடன் கிடைக்கும் எஸ்யூவி -யின் டார்க் பதிப்பை வெளியிடவில்லை. பிளாக் அலாய் வீல்கள், ‘டார்க்’ பேட்ஜ்கள், ஆல் பிளாக் கேபின் மற்றும் அதன் அடிப்படையிலான வேரியன்ட் போன்ற அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் அமைப்பு போன்ற அதே வசதிகளுடன் 2024 -ல் டாடா அதை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அறிவிப்பு இனிமேல் வெளியாகும்
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.11.30 லட்சம்
டாடா ஹாரியர் EV
ஃபேஸ்லிப்டட் டாடா ஹாரியர், அக்டோபர் 2023 -ல் அறிமுகமானது, ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்டப்படும் EV வெர்ஷனை 2024 -ல் பெறத் தயாராக உள்ளது. இதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஸ்டாண்டர்டான ஹாரியரை போலவே இருக்கும் என்றாலும், இது மின்சார பவர் ட்ரெயின்களின் தேர்வுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷனுடன், அதிகபட்சமாக 500 கிமீக்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 -ன் பிற்பகுதி
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.30 லட்சம்
2024 ஆண்டில் டாடா -வின் எந்த புதிய காரை எதிர்பார்க்கிறீர்கள், எந்த மாடல் உங்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை