பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் அறிமுகமாகவுள்ள டாடா கார்கள்
published on பிப்ரவரி 01, 2024 06:19 pm by rohit for டாடா நிக்சன்
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா மூன்று புதிய கார்கள் உட்பட எட்டு மாடல்களை ஆட்டோமோட்டிவ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கவுள்ளது.
பிப்ரவரி 1 மற்றும் 3, 2024 க்கு இடையில் முதல் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் நடைபெறவுள்ளது. பங்கேற்பாளர்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் உள்ளது, அவர் இந்த நிகழ்வில் 8 மாடல்களை காட்சிப்படுத்த இருப்பதாக இப்போது அறிவித்துள்ளது. நீங்கள் பார்க்கக்கூடிய கார்களின் விவரங்கள் இங்கே:
டாடா நெக்ஸான் CNG
டாடா CNG கார் பிரிவில் தாமதமாக நுழைந்த போதிலும், இப்போது இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் பன்ச் மற்றும் ஆல்ட்ரோஸில் CNG ஆப்ஷனை கொடுத்தது, டாடா அதை ஃபேஸ்லிப்டட் நெக்ஸான் உடனும் அதை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. டாடா CNG கிட்டை எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (120 PS/ 170 Nm) இதை கொடுக்கும், ஆனால் குறைந்த அவுட்புட் உடன். இது நெக்ஸான் CNG -யை மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கொடுக்கலாம்.
டாடா சஃபாரி டார்க் கான்செப்ட்
அக்டோபர் 2023 -ல், ஃபேஸ்லிப்டட் செய்யப்பட்ட டாடா சஃபாரி மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் மற்றும் நவீன வசதிகளுடன் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில், டாடா 3-வரிசை எஸ்யூவியின் டார்க் இட்டரேஷனை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பிளாக் அவுட் அலாய் வீல்கள், கிரில், கேபின் தீம் மற்றும் அப்ஹோல்ஸ்டரி மற்றும் வெளிப்புறத்தில் 'டார்க்' பேட்ஜ்களுடன் வருகிறது. இப்போது, டாடா ஒரு புதிய மாடலை கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது, இது எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்படும். அதன் ரெட் டார்க் பதிப்பில், உள்ளேயும் வெளியேயும் ரெட் கலர் ஹைலைட்களுடன் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
டாடா காரின் வலுவான பாதுகாப்பு தொகுப்பை சிறப்பித்துக் காட்டும் கான்செப்ட் உடன் ஸ்டாண்டர்டான சஃபாரியின் குறுக்கு வெட்டு காட்சியையும் காண்பிக்கும். பாரத் NCAP -யால் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட முதல் கார்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.
டாடா கர்வ்வ் கான்செப்ட்
டாடா எஸ்யூவி வரிசையில் புதிய சேர்க்கையாக கர்வ்வ் 2024 ஆண்டில் வரவுள்ளது, இது நிகழ்விலும் காட்சிக்கு வைக்கப்படும். டாடா முதலில் இதை ஒரு EV -யாக அறிமுகப்படுத்தும், அதைத் தொடர்ந்து அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) எடிஷன் வெளியாகும். கர்வ்வ் EV ஆனது 500 கிமீ -க்கும் அதிகமான கிளைம் ரேஞ்சை வழங்கும் பல பேட்டரி பேக்குகளை பெற வாய்ப்புள்ளது. மறுபுறம், கர்வ்வ் ICE, பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களை பெறும்.
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் கான்செப்ட்
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஸ்டாண்டர்ட் ஆல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போட்ர்டியர் வேரியன்ட்டாக, ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது உள்ளேயும் வெளியேயும் காஸ்மெட்டிக் அப்டேட்களை கொண்டுள்ளது, மேலும் இப்போது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸானில் காணப்படும் பல்வேறு புதிய வசதிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெய்னில் பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்றாலும், நெக்ஸானின் 120 PS டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும்.
டாடா பன்ச் EV
புதிதாக உருவாக்கப்பட்ட Acti.EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட அதன் முதல் மின்சார மாடலாக பன்ச் EV -யை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது ஒரு புதிய வடிவமைப்பை பெறுகிறது, இது கார் தயாரிப்பாளரின் புதிய கார்களான நெக்ஸான் மற்றும் கர்வ்வ் போன்றவற்றுக்கு ஏற்ப உள்ளது. இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது, இதன் ரேஞ்ச் 421 கிமீ வரை கிளைம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் என்பதால், இதுவும் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும் படிக்க: Tata Punch EV லாங் ரேஞ்ச் vs Tata Nexon EV மிட் ரேஞ்ச்: எந்த எலக்ட்ரிக் SUV வாங்குவது?
டாடா நெக்ஸான் EV டார்க்
டாடாவின் காட்சிக்கு வைக்கப்போகும் மற்றொரு புதிய கார் டாடா நெக்ஸான் இவி டார்க். முதன்முதலில் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான் EV மேக்ஸ் -ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் EV -யை அடிப்படையாகக் கொண்டது, இது உள்ளேயும் வெளியேயும் பல ஸ்டைலிங் அப்டேட்களை பெறுகிறது. டார்க் பதிப்பாக இருப்பதால், இது பிளாக்-அவுட் அலாய் வீல்கள் மற்றும் ஆல் பிளாக் கேபின் தீம் உள்ளிட்ட சில மாற்றங்களை கொண்டிருக்கும். அதன் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் அல்லது அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
டாடா ஹாரியர் EV கான்செப்ட்
ஃபேஸ்லிப்டட் டாடா ஹாரியர் 2024 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் எடிஷனையும் கொண்டிருக்கும், இதை நாங்கள் முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் பார்த்தோம். ஹாரியர் இவி வழக்கமான ஹாரியருடன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் ஒரே மாதிரியாக இருக்கும்படி எக்ஸ்போவில் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்படும். 500 கி.மீ -க்கு மேல் கிளைம் செய்யப்பட்ட ரேஞ்சை வழங்கும் பல மின்சார பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் இது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இது ஒரு ஆல்-வீல்-டிரைவ் (AWD) வேரியன்ட்டின் தேர்வை வழங்கும், இது டாடாவின் வரிசையில் நீண்ட காலமாக இல்லை.
இவை அனைத்தும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் டாடா நிறுவனம் காட்சிக்கு வைக்கவுள்ள கார்கள். எந்த மாடலை பற்றி மேலும் அறிய நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ன் லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ உடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க: நெக்ஸான் AMT
0 out of 0 found this helpful