Tata Punch EV லாங் ரேஞ்ச் vs Tata Nexon EV மிட் ரேஞ்ச்: எந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யை வாங்கலாம் ?
published on ஜனவரி 23, 2024 03:09 pm by sonny for டாடா பன்ச் EV
- 161 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாப் வேரியன்ட் பன்ச் EV -யானது என்ட்ரி லெவல் நெக்ஸான் EV -க்கு கிட்டத்தட்டநெருக்கமான விலையில் உள்ளது. ஆனால் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் ? அதை இங்கே கண்டுபிடிக்கலாம்.
இந்தியாவில் டாடா பன்ச் EV -யின் அறிமுகத்தால் குறைவான விலை மின்சார கார்களின் வரிசை தற்போது மேலும் விரிவடைந்துள்ளது இது நாட்டில் தற்போது அதிகம் விற்பனையாகும் EV -யான டாடா நெக்ஸான் EV -க்குக் கீழே இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் புதிய எலக்ட்ரிக் எஸ்யூ -வியை வாங்க விரும்பினால், பன்ச் EV மற்றும் என்ட்ரில் லெவல் நெக்ஸான் EV -யின் டாப்-எண்ட் வேரியன்ட் இரண்டையும் நீங்கள் பரிசீலிக்கலாம். அவற்றில் எது உங்களுக்கு சரியானது என்பதை கீழே பார்ப்போம்.
அளவீடுகள்
பன்ச் EV எம்பவர்டு+ S LR |
நெக்ஸான் EV கிரியேட்டிவ்+ MR |
|
நீளம் |
3857 மி.மீ |
3994 மி.மீ |
அகலம் |
1742 மி.மீ |
1811 மி.மீ |
உயரம் |
1633 மி.மீ |
1616 மி.மீ |
வீல்பேஸ் |
2445 மி.மீ |
2498 மி.மீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
190 மி.மீ |
205 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
366 லிட்டர் + 14 லிட்டர் (ஃபிரங்க்) |
350 லிட்டர் |
நெக்ஸான் EV என்பது பன்ச் EV -க்கு மேலே உள்ள ஒரு பிரிவாகும், எனவே நீளமாகவும் அகலமாகவும், அதிக கேபின் இடவசதியுடன் அது உள்ளது. இதற்கிடையில், பன்ச் EV ஆனது கூடுதலான லக்கேஜ் இடத்தையும், அதே போல் முன்பக்க லக்கேஜ் இடத்தையும் போனட்டின் கீழ் கொண்டுள்ளது (டாடா EV -களில் இது முதல் முறையாக உள்ளது). மேலும், நெக்ஸான் EV -யின் அடிப்படை வேரியன்ட் சற்று அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
பவர்டிரெயின்கள்
பன்ச் EV எம்பவர்டு + S LR |
நெக்ஸான் EV கிரியேட்டிவ் + MR |
|
பேட்டரியின் அளவு |
35kWh |
30kWh |
பவர் மற்றும் டார்க் |
122 PS/ 190Nm |
129 PS/ 215 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC) |
421 கி.மீ |
325 கி.மீ |
சார்ஜிங் நேரம் (10-100% 3.3kW பயன்படுத்தினால்) |
13.5 மணி நேரம் |
10.5 மணி நேரம் |
சார்ஜிங் நேரம் (10-100% 7.2kW பயன்படுத்தினால்) |
5 மணி நேரம் |
4.3 மணி நேரம் |
இதே போன்ற விலையில், என்ட்ரி லெவல் நெக்ஸான் EV -யை விட அதிக வரம்பை வழங்கும் பெரிய பேட்டரி பேக்குடன் பன்ச் EV -யை நீங்கள் பெறலாம். இருப்பினும், பெரிய டாடா எலெக்ட்ரிக் எஸ்யூவி சற்று அதிக செயல்திறன் கொண்டது. மேலும், நெக்ஸான் EV MR -க்கான சிறிய பேட்டரி பேக் வேகமான சார்ஜ் நேரத்தையும் குறிக்கிறது. இரண்டு EV -களும் 50kW DC ஃபாஸ்ட் சார்ஜரை சப்போர்ட் செய்கின்றன, இது ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையே எடுக்கும்.
அம்சங்கள்
பன்ச் EV எம்பவர்டு+ S LR |
நெக்ஸான் EV கிரியேட்டிவ்+ MR |
|
வெளிப்புறம் |
DRL -களுடன் கூடிய LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் LED டெயில்லேம்ப்கள் LED முன்பக்க ஃபாக் லேம்ப்ஸ் வித் கார்னரிங் சீக்வென்ஸ் அனிமேஷன் ஃபார் ஃபிரன்ட் லைட்ஸ் 16-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் ரூஃப் ரெயில்ஸ் ஷார்க் ஃபின் ஆண்டெனா |
DRL -களுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள் LED கனெக்டட் டெயில்லேம்ப்கள் 16 இன்ச் ஸ்டீல் வீல்கள் |
உட்புறம் |
லெதரைட் சீட் அப்ஹோல்ஸ்டரி உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை முன்பக்க மற்றும் பின்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஜூவல் ரோட்டரி டயல் ஃபார் டிரைவ் செலக்டர் வித் பில்டு-இன் டிஸ்பிளே கேபின் மூட் லைட்ஸ் |
ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி வென்டிலேட்டட் முன் இருக்கைகள் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆட்டோ ஹெட்லேம்ப்கள் ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் ஆட்டோ ஃபோல்டபிள் ORVM ஏர் பியூரிஃபையர் மல்டி டிரைவ் மோட்கள் க்ரூஸ் கன்ட்ரோல் USB சார்ஜ் போர்ட்கள் சன்ரூஃப் |
ஆட்டோ ஏசி ஸ்மார்ட் கீ வித் புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஆல் 4 பவர் ஜன்னல்கள் முன்பக்கத்தில் USB சார்ஜ் போர்ட்கள் 12V முன் பவர் அவுட்லெட் |
இன்ஃபோடெயின்மென்ட் |
10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிரைருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே, நேவிகேஷன் உடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 4-ஸ்பீக்கர்கள் +2 ட்வீட்டர்கள் |
7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே 4-ஸ்பீக்கர்கள் 7-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் |
பாதுகாப்பு |
6 ஏர்பேக்ஸ் 360 டிகிரி கேமரா ISFIX ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் பின்புற வைப்பர் மற்றும் டிஃபோகர் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் |
6 ஏர்பேக்ஸ் பின்புற பார்க்கிங் கேமரா ISFIX டிராக்ஷன் கன்ட்ரோல் ESP டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் |
பன்ச் EV ஆனது அதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜினின் (ICE) விட பல அம்சங்களை கொண்டுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை அதன் சிறந்த வேரியன்ட்டுடன் வழங்கப்படுகின்றன. டாப்-ஸ்பெக் பன்ச் EV மற்றும் அடிப்படை வேரியன்ட் நெக்ஸான் EV இரண்டும் 6 ஏர்பேக்குகள், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், TPMS, LED லைட்டிங் மற்றும் ஆட்டோ ஏசி ஆகியவற்றை பெறுகின்றன. இருப்பினும், பெரிய சென்ட்ரல் டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவற்றுடன் நெக்ஸான் இவி கிரியேட்டிவ் பிளஸை விட பன்ச் எம்பவேர்டு பிளஸ் S அதிக வசதிகளை பெறுகின்றது.
விலை
பன்ச் EV எம்பவர்டு+ S LR |
நெக்ஸான் EV கிரியேட்டிவ்+ MR |
வித்தியாசம் |
ரூ 14.99 லட்சம் (அறிமுகம்) |
ரூ.14.79 லட்சம் |
ரூ.20,000 |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
என்ட்ரில் லெவல் டாடா நெக்ஸான் EV ஆனது டாப்-ஸ்பெக் பன்ச் EV -யை விட சற்று குறைவான விலையில் உள்ளது, அதே சமயம் அதிக விசாலமானதாகவும் உள்ளது, இது ஒட்டுமொத்தமாக சிறந்த குடும்ப காராக அமைகிறது. இருப்பினும், நீங்கள் அதிக வரம்பு மற்றும் பிரீமியம் வசதிகளைத் தேடுகிறீர்களானால், பன்ச் EV உங்களுக்கான தேர்வாகும்.
மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்