சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Tiago மற்றும் Tigor CNG AMT கார்கள் வெளியிடப்பட்டன… விலை ரூ.7,89,900 முதல் தொடங்குகிறது

published on பிப்ரவரி 08, 2024 03:52 pm by ansh for டாடா டைகர்

மூன்று மாடல்களின் சிஎன்ஜி AMT வேரியன்ட்களும் 28.06 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகின்றன.

  • டியாகோ ஹையர்-ஸ்பெக் XTA மற்றும் XZA+ வேரியன்ட்களில் CNG ஆட்டோமெட்டிக் பவர்டிரெய்னை பெறுகிறது, அதே நேரத்தில் டியாகோ NRG அதை டாப்-ஸ்பெக் XZA -ல் பெறுகிறது.

  • டாடா டிகோருக்கு, இந்த பவர்டிரெய்ன் ஹையர்-ஸ்பெக் XZA மற்றும் XZA+ வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • இந்த கார்கள் அனைத்தும் 5-ஸ்பீடு AMT உடன் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகின்றன.

  • இந்த சிஎன்ஜி பவர்டிரெய்ன் 73.5 Ps மற்றும் 95 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கின்றன.

டாடா இந்தியாவில் டாடா டியாகோ, டாடா டியாகோ NRG, மற்றும் டாடா டிகோர் மூலமாக சிஎன்ஜி ஆட்டோமெட்டிக் கார்களை சந்தையில் வைத்திருக்கும் முதல் பிராண்டாக மாறியுள்ளது. மேலும் இந்த கார்களின் விலை விவரங்களையும் இப்போது வெளியிட்டுள்ளது. இந்த மாடல்கள் ஒரே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை ஷேர் செய்து கொள்கின்றன, மேலும் பல வசதிகளையும் கொண்டுள்ளன. இந்த மாடல்களின் விலை விவரங்களைப் பற்றி பார்ப்போம்.

டாடா டியாகோ CNG AMT டியாகோ NRG CNG AMT

எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்

CNG மேனுவல்

சிஎன்ஜி AMT

டியாகோ XTA

ரூ.7.35 லட்சம்

ரூ.7.90 லட்சம்

டியாகோ NRG XZA

ரூ.8.25 லட்சம்

ரூ.8.80 லட்சம்

டியாகோ XZA+

ரூ.8.25 லட்சம்

ரூ.8.80 லட்சம்

CNG AMT வேரியன்ட்கள், டியாகோ மற்றும் டியாகோ NRG -யின் தொடர்புடைய CNG மேனுவல் வேரியன்ட்களை விட ரூ.55,000 கூடுதலாக இருக்கின்றன. ரூ.8.80 லட்சத்தில், நீங்கள் டியாகோ NRG CNG AMT அல்லது டாப்-ஸ்பெக் பதிப்பைப் போலவே, சிறந்த வசதிகளை பெறுவீர்கள். டியாகோ XZA+ CNG AMT ஆனது டூயல்-டோன் ஆப்ஷனுடன் வருகிறது, இது XZA+ CNG AMT வேரியன்ட்டை விட ரூ.10,000 கூடுதலாக உள்ளது. டியாகோவின் லோவர்-ஸ்பெக் XE மற்றும் XM CNG வேரியன்ட்கள் மற்றும் டியாகோ NRG CNG -யின் என்ட்ரி-லெவல் XT டிரிம் ஆகியவை AMT கியர் பாக்ஸ் உடன் கிடைக்காது.

டாடா டிகோர் சிஎன்ஜி AMT

எக்ஸ்-ஷோரூம் விலை

வேரியன்ட்

CNG மேனுவல்

சிஎன்ஜி AMT

டிகோர் XZA

ரூ.8.25 லட்சம்

ரூ.8.85 லட்சம்

டிகோர் XZA+

ரூ.8.95 லட்சம்

ரூ.9.55 லட்சம்

டாடா டியாகோவை பொறுத்தவரை, CNG AMT வேரியன்ட்கள் தொடர்புடைய CNG மேனுவல் வேரியன்ட்களைக காட்டிலும் 60,000 ரூபாய் கூடுதலாக உள்ளன. சப்-4m செடானின் என்ட்ரி-லெவல் XM CNG வேரியன்ட்டுடன் AMT ஆப்ஷனை டாடா வழங்கவில்லை.

பவர்டிரெய்ன்

டியாகோ, டியாகோ NRG மற்றும் டிகோர் ஆகியவை 86 PS மற்றும் 113 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன, ஆனால் CNG மோடில், இந்த இன்ஜினின் அவுட்புட் 73.5 PS மற்றும் 95 Nm ஆக குறைக்கப்படுகிறது. டாடா இந்த மாடல்களின் மைலேஜ் விவரங்களையும் டாடா வெளியிட்டுள்ளது, மேலும் இது மூன்று மாடல்களுக்கும் 28.06 கிமீ/கிலோ ஆக உள்ளது.

மேலும் படிக்க: Tata Curvv மற்றும் Hyundai Creta மற்றும் Maruti Grand Vitara : விவரங்கள் ஒப்பீடு

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டியாகோ மற்றும் டிகோர் -ன் இந்த வேரியன்ட்களில் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், உயரத்தை சரி செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் சீட், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ORVM -கள் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இதையும் பார்க்கவும்: Tata Safari Red Dark மற்றும் Tata Safari Dark: படங்களில் ஒப்பீடு

பாதுகாப்புக்காக, டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, கார்னரிங் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

போட்டியாளர்கள்

தற்போது, ​​இந்தியாவில் வேறு எந்த CNG ஆட்டோமெட்டிக் மாடல்களும் விற்பனையில் இல்லை. ஆகவே மாருதி செலிரியோ, மாருதி வேகன் ஆர், மாருதி டிசையர், மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற CNG வேரியன்ட்களுக்கு வசதியான மாற்றாக கருதப்படலாம்.

மேலும் படிக்க: டாடா டிகோர் AMT

Share via

Write your Comment on Tata டைகர்

explore similar கார்கள்

டாடா டியாகோ

Rs.5 - 8.45 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்20.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

டாடா டைகர்

Rs.6 - 9.50 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்19.28 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்

டாடா டியாகோ என்ஆர்ஜி

Rs.7.20 - 8.20 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி26.49 கிமீ / கிலோ
பெட்ரோல்20.09 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வகைகள்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வகைகள்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வகைகள்
Rs.11.07 - 17.55 லட்சம்*
Rs.8 - 10.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை