குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்கும் மாருதி நிறுவனத்தின் காராக மாறப்போகும் புதிய Maruti Swift
புதிய ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாருதி தற்போது புதிய ஸ்விஃப்ட் காருக்கு முன்பதிவுகளை ரூ.11,000-க்கு செய்து வருகிறது.
-
இந்த வரவிருக்கும் காரின் சில யூனிட்கள் ஏற்கனவே டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. மேலும் அதன் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.
-
ஜப்பான்-ஸ்பெக் மாடலுக்கு 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் ADAS ஐப் போன்ற வசதிகளை பெற்றுள்ளது. ஆனால் அவை இந்தியாவில் கிடைக்காது.
-
எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு வசதிகளில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.
-
புதிய மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் கிடைக்கும். இதில் ஒரு புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்.
நான்காவது தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்டின் அறிமுகம் நெருங்கி வரும் நிலையில், இந்த மாடல் ஏற்கனவே சில டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது, மேலும் ஹேட்ச்பேக் பற்றிய புதிய விவரங்கள் ஆன்லைனில் வெளிவரத் தொடங்கியுள்ளன. எங்கள் ஆதாரங்களின்படி பிரபலமான மாருதி ஹேட்ச்பேக்கிற்கான முக்கிய பாதுகாப்பு அப்டேட்டுகள் பற்றி தெரியவந்துள்ளது.அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக்குகளுடன் வருகின்றன
வரவிருக்கும் புதிய ஸ்விஃப்ட் ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்குகளுடன் வரும், இது தற்போதைய மாடலை விட கூடுதல் அப்டேட்டுடன் வருகிறது. மாருதி சுஸூகி புதிய ஹேட்ச்பேக்கின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பான தயாரிப்பை வழங்குவதை மாருதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்தில், ஜப்பான் NCAP கிராஷ் டெஸ்டில், ஸ்விஃப்ட் சமீபத்தில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட், இந்தியா-ஸ்பெக் மாடலில் கிடைக்காத அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதர பாதுகாப்பு வசதிகள்
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ரிவர்சிங் கேமரா மற்றும் 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடக்ஷன் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ஸ்விஃப்ட்டை மாருதி அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பெட்ரோல் இன்ஜின்
2024 ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் 82 PS மற்றும் 112 Nm வரை டார்க்கை வழங்கும். இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆப்ஷன்களுடன் கிடைக்கும். இது நீண்டகாலமாக இயங்கும் 1.2-லிட்டர் 4-சிலிண்டர் K சீரிஸ் பெட்ரோல் இன்ஜினுக்கு மாற்றாக அமைகிறது. தற்போது, CNG பவர்டிரெய்ன் ஆப்ஷன் வழங்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் இந்த ஆப்ஷன் எதிர்காலத்தில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய மாருதி ஸ்விஃப்ட்டின் எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை சுமார் ரூ.6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸுடன் நேரடியாக போட்டியிடும் மற்றும் ரெனால்ட் ட்ரைபர், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மற்ற மாடல்களுக்கு மாற்றாக இருக்கும்.
தொடர்புடையது: அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT