அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
published on மே 03, 2024 02:56 pm by rohit for மாருதி ஸ்விப்ட்
- 86 Views
- ஒரு கருத்தை எழுதுக
LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பார்க்கும் போது இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
-
புதிய ஸ்விஃப்ட்டுக்கான முன்பதிவு ரூ.11,000 -க்கு திறக்கப்பட்டுள்ளது.
-
LXi, VXi, VXi (O), ZXi மற்றும் ZXi+ என ஐந்து வேரியன்ட்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஓவல் வடிவ கிரில், நீளமான L-வடிவ LED DRL -கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது.
-
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.
-
புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை 5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் பெறலாம்.
-
இது மே 9 அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும்.
இந்தியாவில் நான்காம் தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் வரும் மே 9 2024 அன்று விற்பனைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய ஹேட்ச்பேக்கின் மறைக்கப்படாத படங்கள் இப்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இந்தியா-ஸ்பெக் ஸ்விஃப்ட் காரின் ஃபர்ஸ்ட் லுக்கை இந்த படங்களில் பார்க்க முடிகின்றது. இந்த 2024 ஸ்விஃப்ட் காரின் படங்கள் ஒரு டீலர்ஷிப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் இங்கே.
வெளிப்புறம்
இங்கே காணப்படும் புதிய ஸ்விஃப்ட் ஒரு வொயிட் பெயிண்ட் ஆப்ஷனில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டாக இருக்கலாம். புதிய ஓவல் வடிவ கிரில், நீண்ட L-வடிவ LED DRL -கள் மற்றும் பம்பரில் LED ஃபாக் லைட்ஸ் ஆகியவற்றை நீங்கள் கவனிக்கலாம். ஷார்ப்பான டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றையும் வெளியில் உள்ள மாற்றமாக பார்க்க முடிகின்றது.
புதிய கேபின் மற்றும் வசதிகளின் தொகுப்பு
புதிய ஸ்விஃப்ட்டின் கேபினுக்காக லைட் மற்றும் டார்க் கிரே நிற மெட்டீரியல்களை மாருதி தேர்வு செய்துள்ளது. இது இப்போது புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளதை போல் பெரிய 9 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோ ஏசி மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்படலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் அநேகமாக 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (முன்பு படம் பிடிக்கப்பட்ட சோதனை கார்களின் அடிப்படையில்) ஆகியவையும் இருக்கலாம்.
மேலும் பார்க்க: Maruti Brezza ZXi AT மற்றும் Maruti Fronx Alpha Turbo AT: விவரங்கள் ஒப்பீடு
இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்
புதிய ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை (82 PS/112 Nm வரை) பெறும். இது 5-ஸ்பீடு MT அல்லது 5-ஸ்பீடு AMT உடன் வரும் (இந்தப் படங்களில் பார்க்கப்பட்டுள்ளது). பெரும்பாலும் சிஎன்ஜி வேரியன்ட் இதனுடன் கிடைக்காது என்றே தெரிகின்றது. குறிப்பாக அறிமுகமாகும் போது சிஎன்ஜி வேரியன்ட்டை எதிர்பார்க்க முடியாது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மாருதி ஸ்விஃப்ட்டின் ஆரம்ப விலை ரூ.6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் போட்டியிடும். மேலும் சப்-4மீ கிராஸ்ஓவர் MPV -யான ரெனால்ட் ட்ரைபர் காருக்கு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: ஸ்விஃப்ட் AMT
0 out of 0 found this helpful