Maruti’s CNG: 2023 -ம் ஆண்டு ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 1.13 லட்சத்தை தாண்டிய விற்பனை
published on ஆகஸ்ட் 02, 2023 05:37 pm by ansh for மாருதி ஆல்டோ கே10
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி தற்போது, 13 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் சமீபத்திய மாடல் மாருதி ஃப்ரான்க்ஸ்.
நாட்டின் அதிகமாக விற்பனையாகும் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சமீபத்தில் அதன் காலாண்டு விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டது, இதில் கிட்டத்தட்ட 1.13 லட்சம் யூனிட் விற்பனை அதன் சிஎன்ஜி மாடல்கள் என்று மாருதி தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி சிஎன்ஜி சந்தையில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பிராண்டாக உள்ளது, அதன் விரிவான தயாரிப்பு வரிசையின் அனைத்து பிரிவுகளிலும் மாசு குறைவான எரிபொருள் ஆப்ஷனை கொடுக்கிறது.
தற்போதைய தயாரிப்பு வரிசை
தற்போது மாருதியிடம் 13 சிஎன்ஜி (CNG) கார்கள் விற்பனையில் உள்ளன. அதன் அரினா வரிசையிலிருந்து அனைத்து மாடல்களும் சிஎன்ஜி (CNG) பவர்டிரெயினைப் பெறுகின்றன, மேலும் இந்த பட்டியலில் ஆல்டோ K10, செலிரியோ, S-பிரெஸ்ஸோ, வேகன் R, டிசையர், பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட், எர்டிகா மற்றும் ஈகோ ஆகியவை அடங்கும். கிராண்ட் விட்டாரா, XL6, பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்களுடன் அதன் நெக்ஸா தயாரிப்பு வரிசையும் அதன் சிஎன்ஜி விற்பனைக்கு பங்களிக்கிறது. மாடல்களில், சிஎன்ஜி ஆப்ஷன் இன்னும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது மற்றும் பொதுவாக சமமான பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது ரூ .1 லட்சத்திற்கும் குறைவான பிரீமியம் மட்டுமே இந்த காருக்கு இருக்கிறது.
மேலும் படிக்கவும்: மாருதி S-பிரஸ்ஸோ மற்றும் ஈகோவின் 87,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இப்போதைக்கு, மாருதியில் இருந்து கூடுதலாக CNG கார்கள் வருவதாக எந்த தகவலும் இல்லை; இருப்பினும், மற்ற கார் உற்பத்தியாளர்களும் இந்த பசுமையான எரிபொருளை ஆராய தொடங்கியுள்ளனர், மேலும் வரும் ஆண்டுகளில் நாட்டில் அதிக CNG ஆப்ஷன்கள் கொண்ட கார்களை பார்க்க முடியும்.
மேலும் படிக்கவும்: மாருதி ஆல்ட்டோ K10 ஆன் ரோடு விலை