• English
  • Login / Register

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஆறு ஏர்பேக்குகள் … அறிமுகமானது Citroen C3 கார்

published on ஆகஸ்ட் 19, 2024 12:59 pm by dipan for சிட்ரோய்ன் சி3

  • 67 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த அப்டேட் மூலம் C3 ஹேட்ச்பேக்கின் விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.

Updated Citroen C3 hatchback gets LED headlights

  • சிட்ரோன் C3 புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை டாப்-ஸ்பெக் ஷைன் டர்போ வேரியன்ட்டில் பெறுகிறது.

  • LED ஹாலோஜன் ஹெட்லைட்கள், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

  • 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ள கன்ட்ரோல்கள் போன்ற வசதிகள் அப்படியே இருக்கின்றன.

  • ஆட்டோமெட்டிக் வேரியன்ட்க்கான விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சிட்ரோன் பசால்ட் வெளியீட்டின் போது காட்சிக்கு வைக்கப்பட்ட அப்டேட் செய்யப்பட்டுள்ள சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியற்றின் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. C3 ஹேட்ச்பேக் இப்போது இந்தியாவில் புதிய வசதிகள் மற்றும் புதிய விலைகள் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களுக்கான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய ஹேட்ச்பேக்கை சிட்ரோன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 

இதற்கிடையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய வேரியன்ட்களுக்கான விலை பின்வருமாறு:

வேரியன்ட்

புதிய விலை

பழைய விலை

விலை வித்தியாசம்

லிவ்

ரூ.6.16 லட்சம்

ரூ.6.16 லட்சம்

வித்தியாசம் இல்லை

ஃபீல்

ரூ.7.47 லட்சம்

ரூ.7.27 லட்சம்

+ ரூ 20,000

ஃபீல் டூயல் டோன்

நிறுத்தப்பட்டது

ரூ.7.42 லட்சம்

கிடைக்கவில்லை

ஷைன்

ரூ.8.10 லட்சம்

ரூ.7.80 லட்சம்

+ ரூ. 30,000

ஷைன் டூயல் டோன்

ரூ.8.25 லட்சம்

ரூ.7.95 லட்சம்

+ ரூ. 30,000

ஃபீல் டர்போ

நிறுத்தப்பட்டது

ரூ.8.47 லட்சம்

கிடைக்கவில்லை

ஷைன் டர்போ டூயல்-டோன்

ரூ.9.30 லட்சம்

ரூ.9 லட்சம்

+ ரூ. 30,000

ஷைன் டர்போ ஏடி

இன்னும் அறிவிக்கப்படவில்லை

கிடைக்கவில்லை

கிடைக்கவில்லை

எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கான விலை விவரங்கள்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டாப்-ஸ்பெக் ஷைன் டர்போ வேரியன்ட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், ஃபீல் டர்போ வேரியன்ட் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சிட்ரோன் காரில் உள்ள புதிய விஷயங்கள் அனைத்தையும் இப்போது பார்க்கலாம்:

புதிதாக என்ன இருக்கிறது ?

சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் அதே 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் அப்படியே இருக்கின்றன. இருப்பினும் பிந்தையது இப்போது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Citroen C3 gets projector-based LED headlights now
Citroen C3 gets electrically adjustable and foldable ORVMs

அப்டேட்டட் C3 ஆனது அதன் வெளிப்புற வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை, ஆனால் இப்போது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் வருகிறது. இது முந்தைய ஹாலஜன் யூனிட்கள் இப்போது மாற்றப்பட்டுள்ளன. வெளிப்புற ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs) இப்போது இண்டெகிரேட்டட் டர்ன் இண்டிகேட்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் முன்பக்க ஃபெண்டர்கள், குறிகாட்டிகள் முன்பு அமைந்திருந்தன, இப்போது புதிய சிட்ரோன் பேட்ஜ் உள்ளது. மேலும் ORVM -கள் இப்போது எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடியவை மற்றும் ஃபோல்டபிள் ஆக உள்ளன. வாஷருடன் பின்புற வைப்பர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

Citroen C3 7-inch digital driver's display
Citroen C3 gets auto AC feature

உள்ளே டாஷ்போர்டு வடிவமைப்பு நன்கு தெரிந்ததே ஆனால் C3 இப்போது 7-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -லிருந்து கடன் வாங்கப்பட்டது. இது ஆட்டோமெட்டிக் ஏசி -யுடன் வருகிறது மற்றும் பவர் விண்டோ சுவிட்சுகள் சென்டர் கன்சோலில் இருந்து டோர் பேட்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிகளில் இரண்டு சிட்ரோன் மாடல்களும் இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வந்துள்ளன.

இந்த அப்டேட்கள் வரவேற்கத்தக்கவை மற்றும் C3 ஐ மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினாலும் கூட பின்புற ஹெட்ரெஸ்ட்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கீலெஸ் என்ட்ரி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் இன்னும் இல்லை. 

மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன, விரைவில் டெலிவரிகள் தொடங்கும்

மற்ற வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்

Citroen C3 10.25-inch touchscreen

சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ரிமோட் லாக்கிங்/அன்லாக்கிங் மற்றும் உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய ஓட்டுநர் இருக்கை போன்ற முக்கிய வசதிகளை தொடர்ந்து வழங்குகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் C3 -ல் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் சென்சார்கள் கொண்ட பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றை சிட்ரோன் கொடுத்துள்ளது.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

சிட்ரோன் C3 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 82 PS மற்றும் 115 Nm வழங்கும் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் முதல் ஆப்ஷனாக இருக்கும்.

இரண்டாவது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 110 PS மற்றும் 205 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது புதிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

போட்டியாளர்கள்

Citroen C3 key FOB updated with the new Chevron logo

சிட்ரோன் C3 ஆனது மாருதி வேகன் ஆர், மாருதி செலிரியோ, மற்றும் டாடா டியாகோ உடன் போட்டியிடுகிறது. மேலும் விலை மற்றும் அளவுகளை பொறுத்தவரையில் இது நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், டாடா பன்ச், மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கும் போட்டியாக உள்ளது.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

மேலும் படிக்க: C3 ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Citroen சி3

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience