Citroen Basalt -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன
published on ஆகஸ்ட் 19, 2024 05:41 pm by dipan for சிட்ரோய்ன் பசால்ட்
- 64 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் பசால்ட்டின் டெலிவரி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
-
சிட்ரோன் பசால்ட் காரின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13.83 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இருக்கும்.
-
V-வடிவ LED DRL -கள், LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 16-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் ஹாலோஜன் டெயில் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
டூயல்-டோன் கேபின், டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் தொடையின் கீழ் ஆதரவுடன் பின் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் ஒரு TPMS ஆகியவை உள்ளன.
-
நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
சிட்ரோன் பசால்ட் 7.99 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரெஞ்சு வாகன உற்பத்தியாளர் இப்போது எஸ்யூவி-கூபேயின் முழு வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் வெளியாகியுள்ளன. விரிவான விலை பட்டியல் பின்வருமாறு:
வேரியன்ட் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
|
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு AT |
|
யூ |
ரூ.7.99 லட்சம் |
|
|
பிளச் |
ரூ.9.99 லட்சம் |
ரூ.11.49 லட்சம் |
ரூ.12.79 லட்சம் |
மேக்ஸ்* |
|
ரூ.12.28 லட்சம் |
ரூ.13.62 லட்சம் |
*மேக்ஸ் டிரிமில் ரூ. 21,000 கூடுதலாக செலுத்தும் போது டூயல்-டோன் வித் பிளாக் ரூஃப் கலர் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
விலை விவரங்கள் அனைத்தும் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
இப்போது சிட்ரோன் பாசால்ட் காரில் கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் இங்கே பார்ப்போம்:
சிட்ரோன் பாசால்ட்: ஒரு கண்ணோட்டம்
பசால்ட் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போலவே இருக்கிறது. V-வடிவ LED DRL -கள் உடன் வடிவமைப்பையும் ஸ்பிளிட்டட் கிரில் வடிவமைப்பையும் பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும் இதில் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்களை சேர்க்கப்பட்டுள்ளன. இது விரைவில் C3 ஏர்கிராஸ் காரில் கிடைக்கும். முன்பக்க பம்பர் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக ரெட் ஆக்ஸென்ட்களுடன் சில்வர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும் போது காரின் கூபே-ஸ்டைல் ரூஃப்லைன் மற்றும் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை பார்க்க முடிகிறது. பின்புறத்தில் இது ஹாலஜன் டெயில் லைட்ஸ் மற்றும் பிளாக்-அவுட் பம்பர்களை கொண்டுள்ளது.
பசால்ட் -ன் கேபினில் C3 ஏர்கிராஸ் உடன் பல எலமென்ட்களை ஷேர் செய்து கொள்கிறது. அதே டேஷ்போர்டு வடிவமைப்பு, டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (10.25-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே) மற்றும் AC வென்ட்கள் ஆகியவை ஒரே மாதிரி உள்ளன.
ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பின் இருக்கைகளுக்கு (87 மிமீ வரை) அட்ஜெஸ்ட்டபிள் தொடையின் கீழ் ஆதரவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சன்ரூஃப் கிடைக்காது.
பாதுகாப்பிற்காக பாசால்ட் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை வழங்குகிறது.
மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் விமர்சனம்: ஏதேனும் நல்லது இருக்கிறதா ?
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
சிட்ரோன் பாசால்ட் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் (82 PS/115 Nm) 5-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/205 Nm வரை ) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அல்லது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும்.
போட்டியாளர்கள்
சிட்ரோன் பாசால்ட் ஆனது டாடா கர்வ் எஸ்யூவி-கூபே உடன் நேரடியாக போட்டியிடுகிறது. காம்பாக்ட் எஸ்யூவிகளான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்ஸ்பீடுன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றுக்கு இது ஒரு ஸ்டைலான மாற்றாகவும் இருக்கும்.
சிட்ரோன் பசால்ட் -ன் விலை நிர்ணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் ஆன் ரோடு விலை