சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024: Tata Altroz Racer காட்சிப்படுத்தப்பட்டது, முக்கியமான 5 மாற்றங்களின் விவரங்கள் இங்கே

published on பிப்ரவரி 02, 2024 08:29 pm by rohit for tata altroz racer

ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் ஆல்ட்ரோஸ் ரேசர் அறிமுகமானது ஆனால் அதன் பின்னர் அந்த காரை வெளியில் பார்க்க முடியவில்லை. இப்போது வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் மற்றும் பயனுள்ள கூடுதல் வசதிகளுடன் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் முதலில் பார்க்க முடிந்தது. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவை விரைவாக முன்னெடுத்துச் செல்வதுடன், ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டியர் பதிப்பு சில அப்டேட்களுடன் புதிய தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆல்ட்ரோஸ் ரேசர் இன்னும் ஒரு 'கான்செப்ட்' என்ற நிலையிலேயே இருந்தாலும் , 2024 -ம் ஆண்டில் அதன் புதுப்பிக்கப்பட்ட வடிவத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். 2024 ஆல்ட்ரோஸ் ரேசர் காரில் என்ன விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று பார்ப்போம்:

வெளிப்புறம்

புதிய பெயிண்ட் ஆப்ஷன் மற்றும் கிரில்

ஆல்ட்ரோஸ் ரேசர் ஆட்டோ எக்ஸ்போ 2023 ஆண்டில் பொதுவாக ஸ்போர்ட்டியான ரெட் கலரில் அறிமுகமானாலும், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இருந்தது புதிய ஆரஞ்சு கலர் ஷேடை பெறுகிறது. இது இன்னும் டூயல் வொயிட் லைன்களை பெறுகிறது, ஹூட் முதல் ரூஃபின் இறுதி வரை இது உள்ளது.

ஆல்ட்ரோஸ் ​​ரேசரில் செய்யப்பட்டுள்ள மற்றொரு மாற்றம், புதிய வடிவிலான கிரில் வடிவமைப்பு ஆகும், இது இப்போது ஸ்போர்ட்டி டிசைன் மாற்றங்களுக்கு மிகவும் பொருத்தமான மெஷ் போன்ற வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய இட்டரேஷனில் முன்பக்கத்தில் பெரிய மாற்றங்கள் இருந்தன. டியாகோ மற்றும் டிகோர் கார்களின் கிரில்லில் உள்ள ட்ரெபிசாய்டல் எலமென்ட்கள் போல இவை உள்ளன.

அலாய் வீல்கள்

புதிய ஆல்ட்ரோஸ் ரேசருக்கு 16-இன்ச் 10-ஸ்போக் டூயல்-டோன் அலாய் வீல்களின் ஸ்டைலான தொகுப்பையும் டாடா வழங்கியுள்ளது. மறுபுறம், பழைய பதிப்பு பிளாக்-அவுட் யூனிட்களை கொண்டிருந்தது, இது வடிவமைப்பின் அடிப்படையில், ஆல்ட்ரோஸ் ஸ்டாண்டர்டு பதிப்புடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றமில்லாமல் மாறாமல் இருந்தது.

உட்புறம்

புதிய கலர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கியர் ஷிஃப்டர்

2024 ஆல்ட்ரோஸ் ரேசருடன், புதிய எக்ஸ்ட்டீரியர் கலருடன் பொருந்தக்கூடிய வகையில் புதுப்பிக்கப்பட்ட ஆரஞ்சு கலர் ஷேடு உடன் ரெட் இன்செர்ட்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்களை டாடா மாற்றியுள்ளது. அதன் கலர் ஆக்ஸென்ட்கள் மற்றும் சீட்களுக்கான கான்ட்ராஸ்ட் தையல் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவை ஆரஞ்சு கலரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஃபுட்வெல் பகுதிகளில் உள்ள ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் டாக் மற்றும் டாஷ்போர்டை சுற்றிலும் கூட புதிய ஷேடு உள்ளது.

புதிய ஆல்ட்ரோஸ் ரேசர் -ன் கேபினில் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றம் மத்திய கன்சோலில் உள்ளது. ஸ்டாண்டர்டான ஆல்ட்ரோஸ்​ ​காரில் இருக்கும் ஷிஃப்டர் போல இல்லாமல் டாடா நெக்ஸான் காரில் உள்ளதை போன்ற 5-ஸ்பீடு கியர் ஷிஃப்டர் இதிலும் உள்ளது.

இதையும் பார்க்கவும்: Tata Safari காரின் ரெட் டார்க் எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்

360 டிகிரி கேமரா

இந்த மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் ரேசர் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் பட்டியலுக்கான கூடுதல் அம்சங்களில் ஒன்று 360-டிகிரி கேமரா ஆகும். டாடா லோகோவிற்கு கீழே அமைந்துள்ள முன்பக்க கேமராவை நீங்கள் பார்க்கலாம். பழைய ஆல்ட்ரோஸ் ரேசரில் ரிவர்சிங் கேமரா மட்டுமே இருந்தது. இந்த வசதி இப்போது மாருதி பலேனோவிலும் உள்ளது.

ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD)

2024 ஆல்ட்ரோஸ் ரேசர் இப்போது HUD உடன் வருகிறது, இருப்பினும் அதன் அளவு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. மைலேஜ் , வேகம் மற்றும் கியர் இண்டிகேட்டர் போன்ற முக்கியமான தகவல்களை இது காட்டும். முந்தைய வெர்ஷன் காருடன் ஒப்பிடும் போது இது ஒரு முக்கியமான வசதி மற்றும் பாதுகாப்பையும் அதிகரிக்கும். இது ஒரு பிரீமியம் அம்சமாக இருந்தாலும், செமி-டிஜிட்டல் கிளஸ்டரில் அதே பழைய 7-இன்ச் டிஎஃப்டிக்கு பதிலாக புதிய நெக்ஸானிலிருந்து பெரிய 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் விரும்புகிறோம்.

இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்ட டாடா ஆல்ட்ரோஸ் ​​ரேசரில் செய்யப்பட்ட மாற்றங்கள். இதில் பழைய ஆல்ட்ரோஸ் ​​ரேசரின் அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (120 PS/ 170 Nm) மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் எது உங்களை மிகவும் கவர்ந்துள்ளது மற்றும் சந்தையில் தயாராக உள்ள ஆல்ட்ரோஸ் ​​ரேசரில் நீங்கள் எந்த விஷயத்தை விரும்புகிறீர்களா? கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: ஆல்ட்ரோஸ் ​ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 84 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் Racer

Read Full News

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை