சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

செப்டம்பர் 15 முதல் Citroen C3 Aircross காரை முன்பதிவு செய்யலாம்

published on செப் 05, 2023 03:40 pm by ansh for சிட்ரோய்ன் C3 ஏர்கிராஸ்

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் தனது எஸ்யூவியை அக்டோபர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தவுள்ளது.

  • 5 - மற்றும் 7 - சீட்டர் கட்டமைப்புகளில் இது கிடைக்கும்.

  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 110PS, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.

  • 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் மேனுவல் ஏசி ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • ரூ. 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டில் வெளியிடப்பட்ட பிரெஞ்சு நிறுவனத்தின் தயாரிப்பாகும். C3 ஏர்கிராஸின் விலை அக்டோபரில் அறிவிக்கப்படும், மேலும் நீங்கள் காம்பாக்ட் எஸ்யூவியில் ஆர்வமாக இருந்தால், செப்டம்பர் 15 முதல் நீங்கள் ஒன்றை முன்பதிவு செய்யலாம். C3 ஏர்கிராஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

வடிவமைப்பு

சி3 ஏர்கிராஸ், C3 ஹேட்ச்பேக்கின் நீட்டிக்கப்பட்ட வெர்ஷனாக இது தெரிகிறது. நேர்த்தியான LED டேடைம் லைட்களை, ஹெட்லைட்களுக்கு இடையே கொண்டுள்ளது. இது ஸ்கிட் பிளேட்டுடன் சிறிய அளவுள்ள பம்பரை பெறுகிறது, இரு கதவுகளிலும் கிளாடிங் மற்றும் சி-வடிவ பின் விளக்குகள் மற்றும் ஒரு பெரிய பம்பருடன் மஸ்குலர் பின்புறம் உள்ளது.

உட்புறத்தில், கேபின் C3 போலவே இருக்கிறது, அங்கும் இங்கும் சில மாற்றங்களுடன். இந்த கேபின் பிளாக் மற்றும் பெய்ஜ் நிறத்தில் வழங்கப்படுகிறது, ஆனால் ஏசி வென்ட்களின் வடிவமைப்பு மற்றும் டேஷ்போர்டு அமைப்பு ஹேட்ச்பேக் போலவே உள்ளது.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

C3 ஏர்கிராஸ் ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, கூரையில் பொருத்தப்பட்ட பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய மேனுவல் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஐந்து ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட்கள் ஆகியவற்றை பெறுகிறது.

மேலும் படிக்க: பேஸ்-ஸ்பெக் Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகள்

பாதுகாப்பை பொறுத்தவரை, இது டூயல் முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறுகிறது.

பவர்டிரெய்ன்

இது ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது: 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், இது 110PS மற்றும் 190Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இந்த யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த யூனிட் ஒரு லிட்டருக்கு18.5 கிமீ மைலேஜை கொடுப்பதாக சிட்ரோன் கூறுகிறது. C3 ஏர்கிராஸ் அறிமுககப்படுத்தப்படும் போது அதில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கிடைக்காது, ஆனால் இந்த ஆப்ஷன் பின்னர் ஒரு அறிமுகப்படுத்தப்படும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் அக்டோபரில் ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்படும். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: C3 ஆன் ரோடு விலை

a
வெளியிட்டவர்

ansh

  • 27 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது சிட்ரோய்ன் சி3 Aircross

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை